திரைப்பட உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஓஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது.
85வது ஓஸ்கர் விருது விழாவில் பங்கேற்பதற்காகவும் விருதுகளைப் பெறுவதற்காகவும் ஹாலிவுட் மற்றும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் விழா அரங்கில் குவிந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்களும் விழா நடைபெறும் இடத்தில் குழுமியுள்ளனர். வண்ணமயமான இந்த விழாவில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் "Lincoln" திரைப்படம் அதிக விருதுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம், 12 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட "Life of Pi" திரைப்படம் 11 பிரிவுகளிலும் "Les Miserables", "Silver Linings Playbook" ஆகிய திரைப்படங்கள் தலா 8 பிரிவுகளிலும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மட்டுமின்றி பல்வேறு துறைகளின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது.
விருது விபரம்: லைஃப் ஆப் பை திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது. ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டாவுக்கு ஓஸ்கர் விருது வழங்கப்பட்டது.
அதேபோல் சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் பிரிவிலும் லைப் ஆஃப் பை திரைப்படத்திற்கே ஓஸ்கர் விருது கிடைத்துள்ளது. மொத்தம் 5 விருதுகளை இப்படம் தட்டிச்சென்றது.
லைஃப் ஆப் பை திரைப்படம் இந்தியாவின் புதுச்சேரியை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்டது.
ஜேம்ஸ் பாண்டுக்கு கவுரவம்: ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் 50வதுஆண்டு விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓஸ்கர் விருது விழாவில் ஜேம்ஸ் பாண்ட் படங்களை கவுரவிக்கும் வகையில், ஜேம்ஸ் பாண்ட் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு விழாவில் வெளியிடப்பட்டது.
டை அனதர் டே என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்த ஹேல் பெர்ரி அந்த தொகுப்பினை வெளியிட அரங்கமே அதிர்ந்தது.. கர கோஷத்தால்....
மற்ற விருதுகள் விபரம்.... சிறந்த துணை நடிகருக்கான ஓஸ்கர் விருது ஜாங்கோ அன் செயின்ட் படத்தில் நடித்ததற்காக கிறிஸ்டோப் வால்ட்சுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஓஸ்கர் விருதினை பேப்பர்மேன் பெற்றுள்ளது.
சிறந்த காஸ்ட்டியூம் டிசைனருக்கான விருதினை ஜாக்குலின் தட்டிச் சென்றார். (படம் அன்னா கரினினா.)
லிசா வெஸ்காட், ஜூலி ஆகியோருக்கு சிறந்த ஆடை மற்றும் சிகைஅலங்காரத்திற்கான விருது கிடைத்துள்ளது. லெஸ் மிஸரபல்ஸ் திரைப்படத்திற்காக இருவருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த குறும்படமாக "கர்ஃப்யூ" திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த ஆவணப்படம் (சிறிய ஆவணப்படம் பிரிவில்) "இனோசென்ட்" திரைப்படம் ஓஸ்கர் வென்றுள்ளது.
சிறந்த ஆவணப்படம் (ஃபீச்சர் பிரிவு) "சேர்ச்சிங் பார் சுகர்" திரைப்படம் ஓஸ்கர் வென்றது.
சிறந்த வேற்று மொழிதிரைப்படத்திற்கான ஓஸ்கர் விருதினை அமோர் (Amour) திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த ஒலிக்கலவைக்கான விருதினை லெஸ் மிஸரபல்ஸ் திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த ஒலி எடிட்டிங்கிற்கான விருதினை ஜீரோ டார்க் தர்ட்டி என்ற திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதினை லெஸ் மிஸரபல்ஸ் திரைப்படத்தில் நடித்த அனா ஹாத்வே வென்றுள்ளார்.{புகைபடங்கள்}
சிறந்த எடிட்டிங்கிற்கான விருதினை ஆர்கோ (Argo) திரைப்படம் வென்றுள்ளது.
12 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள லிங்கன் திரைப்படத்திற்கு பெஸ்ட் புரொடக்ஷன் டிசைனுக்கான ஓஸ்கர் விருது கிடைத்துள்ளது.
சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் லைஃப் ஆப் பை திரைப்படம் விருது பெற்றுள்ளது.
சிறந்த ஒரிஜினல் பாடல் ( original song) ஆஸ்கர் விருதினை ஸ்கைஃபால் திரைப்படத்தில் பாடிய ஆடெல் வென்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக