சனி, 23 பிப்ரவரி, 2013

திரையிடப்பட்ட 'ஹரி தாஸ்' படம்


டொக்டர் வி. ராமதாஸ் தயாரிப்பில் இயக்குனர் ஜி.என்.குமாரவேலு இயக்கத்தில் வெளி வந்துள்ள படம் தான் ஹரி தாஸ்.
சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் ஊடகத்தினருக்காக 'ஹரிதாஸ்' படம் திரையிடப்பட்டது.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனுக்கும், அவனுடைய பொலிஸ் தந்தைக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டத்தை இந்த 'ஹரிதாஸில்' அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.
ஆட்டிசம் மகனை சாதனை வீரராக மாற்ற அரும்பாடு படும் என்கவுண்டர் பொலிஸ் அதிகாரியாக கிஷோர் வருகிறார். மனைவியை இழந்து, மகனை வளர்க்க கஷ்டப்படுகிறார் கதையின் நாயகன் கிஷோர்.
நாயகனின் 'ஸ்பெசல் சைல்ட்' படிக்கும் பள்ளியின் ஆசிரியை சினேகாவுக்கும் நாயகனுக்கும் இடையே மெல்லிய நேச உறவு இழையோடுகிறது. ப்ருதிவி ராஜ் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக நடித்துள்ளார். புரோட்டோ சூரி சில காட்சிகளில் கொமெடி பண்ணியிருக்கிறார்.
தாதா வில்லன் பிரதீப் ராவத் கும்பலால் பொலிலிஸ் டீமில் இருந்தவர் கடத்தப்படுகிறார். திடீரென கிஷோரின் மகனும் காணாமல் போகிறார். இதைத் தொடர்ந்து இரு வேறு உணர்வுகளில் தத்தளிக்கும் காட்சிகளில் கிஷோர் தன்னை தேர்ந்த நடிகராக நிரூபித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி கிஷோர் விரும்பியபடி அவருடைய மகன் சாதனை விளையாட்டு வீரராக வளர்கிறாரா என்பதுதான் 'ஹரிதாஸ்' படம்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக