தமிழில் காதல் அழிவதில்லை படம் மூலம் நாயகியாக அறிமுகமான சார்மி தற்போது தெலுங்கில் முன்னணி குத்தாட்ட நாயகியாக வலம் வருகிறார்.
இந்நிலையில் இந்தி படம் ஒன்றில் நாயகியாக நடிக்க உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியில் ஏற்கனவே அமிதாப்புடன் ஒரு படத்தில் நடித்திருந்தேன்.
ஆனால், தற்போது விவேக் ஓபராயுடன் ‘சில்லா காஸியாபாத்’ படம்தான் முறைப்படி நாயகியாக பாலிவுட்டில் நான் அறிமுகமாகும் படம்.
இந்த வாய்ப்பு எனது நெருங்கிய நண்பர் சோனு சூட் (வில்லன் நடிகர்) வாங்கித்தந்தார். பழமையில் ஊறிய இளம்பெண் வேடம் என்பதால் எனது பாவனைகள், பேச்சு வழக்கு மாற்ற வேண்டி இருந்தது.
இதற்காக பயிற்சி எடுத்தேன். நான் ஒரு பஞ்சாபி பெண். இந்தியைவிட தெலுங்கு, தமிழ் நன்றாக பேசுவேன்.
‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானபோது சிம்பு, நான் இருவருமே சின்ன பிள்ளைகள்போல சண்டை போட்டுக்கொள்வோம். பின்னர் எனக்குள் ஒரு நடிகை இருப்பதை உணர ஆரம்பித்தேன்.
லாரன்ஸ், பிரபுதேவா போன்றவர்கள் என் வளர்ச்சிக்கு உதவினார்கள். கிளாமர் வேடங்களில் நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.
அதேநேரம் மாறுபட்ட வேடங்களையும் ஏற்று நடித்தேன் என்றும் தற்போது எனது தோழி த்ரிஷாவுடன் ‘ரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன் எனவும் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக