கொலிவுட்டில் ஸ்ரீகாந்துடன் பூ என்ற படத்தில் அறிமுகமான பார்வதி, தன்னுடைய பெயரின் அடைமொழி மாறுவதாக தெரிவித்துள்ளார்.
மிக அழகான, இயல்பான நடிப்பின் மூலம் அப்படத்தின் தலைப்பையே தனது பெயருக்கு அடைமொழியாக்கிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக நடித்தவர் பார்வதி.
தற்போது தனுஷுடன் மரியான் என்ற படத்தில் நடித்துள்ளார். மீனவர்களின் வாழ்க்கையைப் படமாக்கியுள்ள மரியான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள பார்வதியின் இயல்பான நடிப்பு, ஒரு மீனவப் பெண்ணுக்கே உரித்தான இயல்புடன் உள்ளது.
அவரது உடைகள், உணர்ச்சி, நடிப்பு, வசனம் அனைத்தும் உண்மையில் மீனவப் பெண்ணோ என்ற அளவுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.
இப்படத்தில் தனுஷ், பார்வதி இடையேயான காதல் காட்சிகளை நிச்சயம் தமிழ் ரசிகர்கள் விரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மரியான் படத்தில் நடித்திருப்பது பற்றி பார்வதி கூறுகையில், படத்தைப் பற்றி எதுவும் கூற முடியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல முடியும்.
இப்படம் வெளியான பின்பு பூ பார்வதி என்ற அடைமொழி, மரியான் பார்வதி என்று மாறும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக