ஹீரோயினுக்கு முத்தம்கொடுத்து ஹாலிவுட் தரத்துக்கு தமிழ் படத்தை உயர்த்துகிறேன் என்று ஆர்யா நகைச்சுவையாக பேசினார். இந்தியில் வெளியான படம் ‘டெல்லி பெல்லி’. இப்படம் தமிழில் ‘சேட்டை’ என்ற பெயரில் உருவாகிறது. ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி நடிக்கின்றனர். கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மும்பையில் இருந்து வந்த ‘டெல்லி பெல்லி’ பட குழுவினர் கலந்துகொண்டு சிடியை வெளியிட்டனர்.
இந்த விழாவில் ஆர்யா பேசியதாவது: ‘டெல்லி பெல்லி’ படத்தை இந்தியில் பார்த்தேன். தமிழில் ரீமேக் செய்வதற்கு ஏற்றதாக அப்படம் இல்லை. கெட்டவார்த்தைகள் அதிகமாக இருந்தது. அந்தநேரத்தில்தான் இயக்குனர் கண்ணன், தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் ஆகியோர் இப்படத்தை தமிழில் உருவாக்க உள்ளதாக என்னிடம் வந்து கால்ஷீட் கேட்டனர். எப்படித்தான் தமிழில் மாற்றி இருக்கிறார்கள் என்பதற்காக கதையை கேட்டேன். தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றபடி ஸ்கிப்ட் அமைத்திருந்தார்கள். நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஹன்சிகா, அஞ்சலி ஹீரோயின். இப்படத்தில் அஞ்சலியுடன் முத்தக்காட்சியில் நடித்தது பற்றிகேட்கிறார்கள். முத்தக்காட்சியில் நடித்தது உண்மைதான். இதில் நடிக்க அஞ்சலி ரொம்பவும் ஆர்வமாக இருந்தார். உதட்டோடு உதடு வைத்து முத்தம் தரும் காட்சியில் அவருடன் நடித்திருக்கிறேன். தமிழ் படத்தை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்துவதற்காக இப்படி நடித்திருக்கிறேன். (ஆர்யா இப்படி கூறியதும் அரங்கில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. மேடையில் இருந்த அஞ்சலி வெட்கப்பட்டார்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக