வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

படக்குழுவினரை தவிக்கவிட்ட கதாநாயகி

 
பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரைப்படக் கல்லுரி மாணவர் ஆஷிக் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் படம் "உ".
தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க 25க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது.
இயக்குநர் ஆஷிக் விரும்பிய கதாநாயகி கிடைக்காமல் தாமதப்பட்டு வந்தது இப்படத்தின் படப்பிடிப்பு.
இறுதியில் கேரளாவில் இருந்து ஒரு புதுமுக கதாநாயகியை தெரிவு செய்துவிட்டு, படப்பிடிப்பு திகதியையும் உறுதி செய்து விட்டு ஒருநாள் முன்னதாகவே கொடைக்கானல் கிளம்பி சென்றனர் உ படக்குழுவினர்.
மறுநாள் கதாநாயகி வந்த உடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று இருந்த படக்குழுவுக்கு போனில் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி.
தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் கொடைக்கானல் வரமுடியவில்லை என்று கூலாக சொன்னார் அந்த புதுமுக கதாநாயகி.
படத்தில் தான் கதாநாயகிகள் தவிக்க விடுவார்கள் என்று பார்த்தால் நிஜத்தில் உ படக்குழுவினரை தவிக்க விட்டார் அந்தக் கதாநாயகி.
அதன்பின் பாண்டிச்சேரியில் "மிஸ் தமிழச்சி"யாக தெரிவு செய்யப்பட்ட நேகா ஒரே நாளில் உ படத்திற்கு திடீர் கதாநாயகி ஆனார்.
படக்குழுவில் உள்ள அனைவருமே நண்பர்கள் தான். அந்த நண்பர்கள் குழுவில் ஒருவருக்கு தோழியாக இருந்த நேகா நடிக்க ஆர்வமாக இருப்பது தெரிந்து, நேகா புகைப்படத்தை மெயிலில் அனுப்பச்சொல்லி, பார்த்து உடனடியாக ஓகே சொன்னார் இயக்குநர் ஆஷிக்.
அன்று மாலையே கொடைக்கானல் கிளம்பி வரச்சொல்லி படப்பிடிப்பு நடத்தி சென்னை திரும்பி இருக்கிறார்கள். நேகா கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்து பாண்டிச்சேரியில் படித்துகொண்டிருக்கும் தமிழ் யுவதி.
தமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த தமிழ் கதாநாயகிகள் வரிசையில் நேகா புதுவரவு.
கிட்டத்தட்ட 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. படத்தின் நான்கு பாடல்களும் பதிவாகி விட்டது. பாடல்களுக்கு இறுதிக்கட்ட மிக்ஸிங் வேலைகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.
சென்னை, கொடைக்கானல், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ள படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஆஷிக்
ஒளிப்பதிவு : ஜெயப்பிரகாஷ்
இசை: அபிஜித் ராமசுவாமி
பாடல்கள்: முருகன் மந்திரம்
எடிட்டிங்: கமல்ஜி
நிர்வாகத் தயாரிப்பு: முருகன் மந்திரம்
தயாரிப்பு: அசோக்குமார், ப.ராமசுவாமி, பா.நந்தகுமார்
நடிகர்கள்: தம்பி ராமையா, மதன்கோபால், சத்யா, ஸ்மைல் செல்வா, ராஜ்கமல், சூப்பர் சிங்கர் ஆஜீத், வருண், நேகா, தீப்ஸ், ராஜசிவா, காளி, பேபி மதுமிதா இவர்களுடன் பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா, யோகி தேவராஜ் மற்றும் பலர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக