வியாழன், 28 பிப்ரவரி, 2013

ஒரு நிமிடத்தில் 137 ஆண்களிடம் முத்தம்,,,

ஒரு நிமிடத்தில் 137 ஆண்கள் பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக்கை முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்நேற்று முன்தினம் வீணாவின் பிறந்தநாள் அன்று இந்த சாதனை மும்பையில் நிகழ்த்தப்பட்டது.
முத்தமிட்ட 137 ஆண்களும் போட்டி மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கு முன் நடிகர் சல்மான் கையில் ஒரு நிமிடத்தில் 108 பேர் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்திருந்தனர்.
2011ம் ஆண்டு “கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட் ஆப் இந்தியா தோடா’’ என்ற டி.வி. நிகழ்ச்சியின் போது சல்மான் இந்த சாதனையை ஏற்படுத்தினார்.
இந்த சாதனையை பிறந்தநாளில் முறியடிக்க தான் திட்டமிட்டதாகவும் அதன்படி முறியடித்து விட்டதாகவும் வீணா கூறினார்.
வீணா நடிக்கும் “தி சிட்டி தாட் நெவர் டைய்ஸ்“ என்ற இந்திபட விளம்பரத்துக்காக இந்த சாதனை முறியடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இன்னும் 19 கின்னஸ் சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
{காணொளி}


தனுஷ் நாயகி நடித்துள்ள நேரம்,,

இவர் வின்னர் புல்ஸ்ஃபிலிம்ஸ் மற்றும் கோரல் க்ரூப் விஸ்வநாதன் இணைந்து வழங்கும் இந்தப் படத்தை, அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்குகிறார். இப்படத்தின் இயக்குனர் டிஎப்டி முடித்துவிட்டு, ஐந்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள், விளம்பரப்படங்கள் மற்றும் மியூசிக் வீடியோ ஆல்பம் செய்தவர் ஆவார். கடந்த வருடம் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கிய யுவ் என்னும் மலையாள மியூசிக் விடியோ ஆல்பம் ஊடகங்கள், இனணயதளங்களில் மிகபெரிய வரவேற்பைப் பெற்றதும், சோனி நிறுவனம் வெளியிட்ட முதல் மலையாள மியூசிக் விடியோ ஆல்பம் யுவ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகரான நிவின் நாயகனாக அறிமுகமாகிறார். சென்ற வருடம் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த 'தட்டத்தின் மரியத்தில்' என்னும் படம் மூலம் மலையாள திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நிவின், நேரம் படம் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகிறார். அல்ஃபோன்ஸ் புத்திரனின் மியூசிக் விடியோ ஆல்பத்தில் நடித்த நஸ்ரியா நாசிம்தான், நேரம் படத்தின் நாயகி. இந்த மியூசிக் விடியோ ஆல்பம் பார்த்துதான் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெய் நடிக்கும் படத்திலும், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நய்யாண்டி படத்திலும் இவரை நாயகியாக்கினார்களாம். நேரம் இரண்டு வகைப்படும். ஒன்று நல்ல நேரம், இன்னோன்று கேட்ட நேரம். நல்ல நேரம் வந்தால் ஆண்டியும் அரசனாவான். கெட்ட நேரம் வந்தால் அரசனும் ஆண்டியாவான் என்ற பழமொழியை அடிப்படையாக வைத்து கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன். சென்னை மந்தைவெளி பகுதியை சுற்றி கதைகளம் அமைந்திருப்பதால், அந்தந்த பகுதிகளிலே படத்தை எடுத்திருப்பது சிறப்பம்சமாகும். இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன் அறிமுகமாகிறார். ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது {காணொளி},

திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஓஸ்கர் விருதை பெற்றார் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ,.



 திரைப்பட உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஓஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது.
85வது ஓஸ்கர் விருது விழாவில் பங்கேற்பதற்காகவும் விருதுகளைப் பெறுவதற்காகவும் ஹாலிவுட் மற்றும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் விழா அரங்கில் குவிந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்களும் விழா நடைபெறும் இடத்தில் குழுமியுள்ளனர். வண்ணமயமான இந்த விழாவில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் "Lincoln" திரைப்படம் அதிக விருதுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம், 12 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட "Life of Pi" திரைப்படம் 11 பிரிவுகளிலும் "Les Miserables", "Silver Linings Playbook" ஆகிய திரைப்படங்கள் தலா 8 பிரிவுகளிலும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மட்டுமின்றி பல்வேறு துறைகளின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது.
விருது விபரம்: லைஃப் ஆப் பை திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது. ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டாவுக்கு ஓஸ்கர் விருது வழங்கப்பட்டது.
அதேபோல் சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் பிரிவிலும் லைப் ஆஃப் பை திரைப்படத்திற்கே ஓஸ்கர் விருது கிடைத்துள்ளது. மொத்தம் 5 விருதுகளை இப்படம் தட்டிச்சென்றது.
லைஃப் ஆப் பை திரைப்படம் இந்தியாவின் புதுச்சேரியை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்டது.
ஜேம்ஸ் பாண்டுக்கு கவுரவம்: ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் 50வதுஆண்டு விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓஸ்கர் விருது விழாவில் ஜேம்ஸ் பாண்ட் படங்களை கவுரவிக்கும் வகையில், ஜேம்ஸ் பாண்ட் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு விழாவில் வெளியிடப்பட்டது.
டை அனதர் டே என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்த ஹேல் பெர்ரி அந்த தொகுப்பினை வெளியிட அரங்கமே அதிர்ந்தது.. கர கோஷத்தால்....
மற்ற விருதுகள் விபரம்.... சிறந்த துணை நடிகருக்கான ஓஸ்கர் விருது ஜாங்கோ அன் செயின்ட் படத்தில் நடித்ததற்காக கிறிஸ்டோப் வால்ட்சுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஓஸ்கர் விருதினை பேப்பர்மேன் பெற்றுள்ளது.
சிறந்த காஸ்ட்டியூம் டிசைனருக்கான விருதினை ஜாக்குலின் தட்டிச் சென்றார். (படம் அன்னா கரினினா.)
லிசா வெஸ்காட், ஜூலி ஆகியோருக்கு சிறந்த ஆடை மற்றும் சிகைஅலங்காரத்திற்கான விருது கிடைத்துள்ளது. லெஸ் மிஸரபல்ஸ் திரைப்படத்திற்காக இருவருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த குறும்படமாக "கர்ஃப்யூ" திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த ஆவணப்படம் (சிறிய ஆவணப்படம் பிரிவில்) "இனோசென்ட்" திரைப்படம் ஓஸ்கர் வென்றுள்ளது.
சிறந்த ஆவணப்படம் (ஃபீச்சர் பிரிவு) "சேர்ச்சிங் பார் சுகர்" திரைப்படம் ஓஸ்கர் வென்றது.
சிறந்த வேற்று மொழிதிரைப்படத்திற்கான ஓஸ்கர் விருதினை அமோர் (Amour) திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த ஒலிக்கலவைக்கான விருதினை லெஸ் மிஸரபல்ஸ் திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த ஒலி எடிட்டிங்கிற்கான விருதினை ஜீரோ டார்க் தர்ட்டி என்ற திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதினை லெஸ் மிஸரபல்ஸ் திரைப்படத்தில் நடித்த அனா ஹாத்வே வென்றுள்ளார்.{புகைபடங்கள்}
சிறந்த எடிட்டிங்கிற்கான விருதினை ஆர்கோ (Argo) திரைப்படம் வென்றுள்ளது.
12 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள லிங்கன் திரைப்படத்திற்கு பெஸ்ட் புரொடக்ஷன் டிசைனுக்கான ஓஸ்கர் விருது கிடைத்துள்ளது.
சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் லைஃப் ஆப் பை திரைப்படம் விருது பெற்றுள்ளது.
சிறந்த ஒரிஜினல் பாடல் ( original song) ஆஸ்கர் விருதினை ஸ்கைஃபால் திரைப்படத்தில் பாடிய ஆடெல் வென்றார்

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

அக்ஷராவை நடிக்க வைக்க முயற்சி

கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தற்போது தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இளைய மகள் அக்ஷராவையும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்ஷரா இயக்குனர் துறையில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்தாலும் சமீபத்தில் சி.சி.எல் கிரிக்கெட் போட்டிகளில் விளம்பரத் தூதுவராக கலந்து கொண்டார். அப்போது தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர், அவரை பார்த்து அசந்து விட்டனராம். உடனே அக்ஷரா அம்மா சரிகாவிடம் தங்கள் படத்தில் நடிக்க வைக்க திகதிகள் கேட்டு வருகின்றனர். குறிப்பாக, சிரஞ்சீவியின் தம்பியும் தெலுங்குப்பட தயாரிப்பாளருமான நாகபாபுவின் மகன் வருண்தேஜ் அறிமுகமாகும் படத்துக்கு அக்ஷராவை கேட்டு வருகிறார்கள். ஆனால் நடிப்பதில் போதிய ஆர்வம் இல்லாமல் இருக்கும் அக்ஷரா எந்த சாதகமான பதிலை சொல்லாமல் இழுத்தடிக்கிறாராம். மணிரத்னம் தன் கடல் படத்தில் அக்ஷராவை அறிமுகப்படுத்துவதாகவே இருந்தார். நல்லவேளை அக்ஷரா தப்பிக்க துளசி மாட்டிக்கொண்டார்

சிம்புவின் 'டேட்டிங்' நாயகி

கொலிவுட்டின் இளம் நட்சத்திர நாயகன் சிம்பு சில காதல்களுக்கு பின்பு தற்போது லேட்டஸ்ட் காதலில் மூழ்கி, தனது டேட்டிங் நாயகியுடன் இணைந்திருப்பதாக பட உலகில் தகவல் பரவியுள்ளது. சிம்புவின் தற்போதைய டேட்டிங் நாயகி பட உலகில் பிரபல நடிகை. கடந்த ஒரு வருடத்தில் அவருடன் தான் சிம்பு இணைந்திருக்கிறார். காதல் உறவு பலப்பட்ட பின்பு அதை வெளியிட அவர் முடிவு செய்திருக்கலாம். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியான சிம்புவின் 'வாலு' பட லவ் பாடலே அதற்கு முக்கியமான சாட்சி. அவர் அடி மனதில் இருந்த காதலை பாடல வரிகளில் அப்படியே கொட்டியிருக்கிறார். காதல், திருமணம், டேட்டிங் நாயகி பற்றியும் விரைவில் சிம்பு மனம் திறப்பார் என்கிறது பட வட்டாரம்.{காணொளி}

தென்கொரியாவில் நீர்ப்பறவை


ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து சீனுராமசாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட படம் ‘நீர்ப்பறவை.’
இந்த படத்தில் விஷ்ணு, சுனைனா, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, நந்திதாதாஸ் ஆகியோர் நடித்து இருந்தார்கள்.
மீனவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரித்த படமான இது, தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோலில் நடக்கும் 14–வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப்பிரிவில் திரையிட தெரிவாகியிருக்கிறது.
எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி முதல் மார்ச் 3ம் திகதி வரை நடக்கும் இந்த படவிழாவில், இயக்குனர் சீனுராமசாமி, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தென்கொரிய நாட்டின் அழைப்பின் பேரில் சென்று கலந்து கொள்கிறார்கள்.

கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்த அக்கா, தங்கை


சமீபத்தில் யான் படப்பிடிப்பில் தங்கை துளசியை பார்க்க சென்றுள்ளார் அக்கா கார்த்திகா.
கோ படம் அறிமுகம் என்றாலும் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வருகிறார் கார்த்திகா.
பாரதிராஜா இயக்கம் மற்றும் அருண் விஜய்யுடன் இணைந்து நடித்துகொண்டிருக்கும் கார்த்திகாவுக்கு தங்கை துளசியை பார்க்க நேரமே கிடைக்காமல் இருந்தது.
துளசியும் கடலை முடித்துவிட்டு தற்போது ஜீவாவுடன் யான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையிலேயே படப்பிடிப்பின் இடைவேளையின் போது கார்த்திகா வந்து துளசியை சந்தித்திருக்கிறார்.
இருவரும் கட்டியனைத்து அன்பையும் கண்ணீரையும் பரிமாறிக்கொண்டனர்.
அம்பிகா, ராதா போல நல்ல அக்கா, தங்கைகளாக வளர்ந்து வருகிறார்கள் கார்த்திகா, துளசி.
 

சனி, 23 பிப்ரவரி, 2013

விஷால் மீது தயாரிப்பாளர் புகார்


கொலிவுட்டில் திரு இயக்கத்தில் விஷால், திரிஷா நடித்து வெளிவந்த சமர் படத்தை டி ரமேஷ் தயாரித்தார்.
‘சமர்’ படத்தில் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் அதனை வாங்கி தரும் படியும் நடிகர் சங்கத்தில் விஷால் புகார் அளித்தார். இதன் மீது நடிகர் சங்கம் விசாரணை நடத்தியது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ‘சமர்’ பட தயாரிப்பாளர் டி.ரமேஷ், விஷாலுக்கு சம்பள பாக்கி இல்லை. முழு தொகையையும் கொடுத்து விட்டேன்.
‘சமர்’ படத்தில் விஷாலுக்கு சம்பளமாக ரூ.3 கோடியே 75 லட்சம் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
இது மட்டுமின்றி பேசிய சம்பளத்தை விட மேலும் ரூ.25 லட்சம் அதிகமாக கொடுத்துள்ளேன். மொத்தம் ரூ.4 கோடி விஷாலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
விஷாலுக்கு பணம் கொடுத்ததற்கான தஸ்தா வேஜுகளை நடிகர் சங்கத்திடம் ஒப்படைத்து விட்டேன்.
ஒரு பைசா கூட விஷாலுக்கு கொடுக்க வேண்டியது இல்லை என் மேல் பொய் புகார் அளித்துள்ளார்.
‘சமர்’ படத்தை வாங்கி வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று தயாரிப்பாளர் ரமேஷ் கூறியுள்ளார்.
 

முன்னணி நாயகியானார் ஹன்சிகா மோத்வானி


தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் ஹன்சிகா மோத்வானி கொலிவுட்டின் முன்னணி இடத்தை பிடித்துள்ளார்.
தமிழில் தொடர்ந்து ஏழு படங்களில் நடிக்கும் ஹன்சிகாவின் திகதிக்காக பிரபல இயக்குனர்கள் காத்து நிற்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக ஹன்சிகா தினந்தோறும் படப்பிடிப்புக்கு செல்வதாக பட வட்டாரம் கூறுகிறது.
கொலிவுட்டின் பிஸி நடிகையான ஹன்சிகா மோத்வானி ஏப்ரல் மாதம் வரைக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார்.
அதற்கு பின்பு தான் சற்று இளைப்பாற திட்டமிட்டுள்ளார். சின்ன வயதிலிருந்தே ஹன்சிகா கடும் உழைப்பை பலமாக எண்ணியிருக்கிறார்.
தெளிவாக திட்டமிட்டு உழைத்து வருகிறார். கொஞ்சம்கூட குழப்பம் இல்லாமல் கைவசம் உள்ள படங்கள் அனைத்தையும் முடித்து தருவதில் உறுதியாக இருக்கிறார்.
இதில் பிடித்த பட வாய்ப்புகளையும் ஏற்று நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'பிரியாணி'யில் இளம் ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்தில் வருகிறார்.
ஹைதராபாத்தில் நடக்கும் சுந்தர்.சி இயக்கும் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்கிறது பட வட்டாரம்

சிவ கார்த்திகேயன் நடிக்கும் "நீங்க நல்லா வருவீங்க"


எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிகர் சிவ கார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது அப்படத்திற்கு 'நீங்க நல்லா வருவீங்க' என்று பெயரை முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீவித்யா நடிக்கிறார். படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார்.
படத்துக்கான முதல் கட்டப் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்துள்ளார் இயக்குநர் பொன் ராம்.
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இரண்டு வாலு நண்பர்களுக்கு இடையே நடைபெறும் சம்பவங்களே கதையின் முக்கியக் கருவாகும்.
இப்படம் தேனிப் பகுதியைச் சுற்றி நடப்பது போல் கதை எடுக்கப்பட்டுள்ளது
 

திரையிடப்பட்ட 'ஹரி தாஸ்' படம்


டொக்டர் வி. ராமதாஸ் தயாரிப்பில் இயக்குனர் ஜி.என்.குமாரவேலு இயக்கத்தில் வெளி வந்துள்ள படம் தான் ஹரி தாஸ்.
சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் ஊடகத்தினருக்காக 'ஹரிதாஸ்' படம் திரையிடப்பட்டது.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனுக்கும், அவனுடைய பொலிஸ் தந்தைக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டத்தை இந்த 'ஹரிதாஸில்' அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.
ஆட்டிசம் மகனை சாதனை வீரராக மாற்ற அரும்பாடு படும் என்கவுண்டர் பொலிஸ் அதிகாரியாக கிஷோர் வருகிறார். மனைவியை இழந்து, மகனை வளர்க்க கஷ்டப்படுகிறார் கதையின் நாயகன் கிஷோர்.
நாயகனின் 'ஸ்பெசல் சைல்ட்' படிக்கும் பள்ளியின் ஆசிரியை சினேகாவுக்கும் நாயகனுக்கும் இடையே மெல்லிய நேச உறவு இழையோடுகிறது. ப்ருதிவி ராஜ் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக நடித்துள்ளார். புரோட்டோ சூரி சில காட்சிகளில் கொமெடி பண்ணியிருக்கிறார்.
தாதா வில்லன் பிரதீப் ராவத் கும்பலால் பொலிலிஸ் டீமில் இருந்தவர் கடத்தப்படுகிறார். திடீரென கிஷோரின் மகனும் காணாமல் போகிறார். இதைத் தொடர்ந்து இரு வேறு உணர்வுகளில் தத்தளிக்கும் காட்சிகளில் கிஷோர் தன்னை தேர்ந்த நடிகராக நிரூபித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி கிஷோர் விரும்பியபடி அவருடைய மகன் சாதனை விளையாட்டு வீரராக வளர்கிறாரா என்பதுதான் 'ஹரிதாஸ்' படம்
 

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

இன்று இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பு,


உதயநிதி - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இது கதிர்வேலன் காதல் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது.
சுந்தரபாண்டியன் படப் புகழ் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் உதயநிதி ஸ்டாலினின் இரண்டாவது படமாகும்.
இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு குறித்து மிகவும் டென்ஷனாகக் காணப்படுகிறார் உதயநிதி.
ஏன் என்று கேட்டால், புது இயக்குநர், புது நடிகை என்பதால் சற்று பரபரப்பாக இருக்கிறது என்கிறார்.
ஆனால் இதையெல்லாம் விட, சந்தானம் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் நடிப்பது தனக்கு மிகப்பெரிய பலம் என்கிறார் உதயநிதி.
 

படக்குழுவினரை தவிக்கவிட்ட கதாநாயகி

 
பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரைப்படக் கல்லுரி மாணவர் ஆஷிக் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் படம் "உ".
தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க 25க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது.
இயக்குநர் ஆஷிக் விரும்பிய கதாநாயகி கிடைக்காமல் தாமதப்பட்டு வந்தது இப்படத்தின் படப்பிடிப்பு.
இறுதியில் கேரளாவில் இருந்து ஒரு புதுமுக கதாநாயகியை தெரிவு செய்துவிட்டு, படப்பிடிப்பு திகதியையும் உறுதி செய்து விட்டு ஒருநாள் முன்னதாகவே கொடைக்கானல் கிளம்பி சென்றனர் உ படக்குழுவினர்.
மறுநாள் கதாநாயகி வந்த உடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று இருந்த படக்குழுவுக்கு போனில் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி.
தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் கொடைக்கானல் வரமுடியவில்லை என்று கூலாக சொன்னார் அந்த புதுமுக கதாநாயகி.
படத்தில் தான் கதாநாயகிகள் தவிக்க விடுவார்கள் என்று பார்த்தால் நிஜத்தில் உ படக்குழுவினரை தவிக்க விட்டார் அந்தக் கதாநாயகி.
அதன்பின் பாண்டிச்சேரியில் "மிஸ் தமிழச்சி"யாக தெரிவு செய்யப்பட்ட நேகா ஒரே நாளில் உ படத்திற்கு திடீர் கதாநாயகி ஆனார்.
படக்குழுவில் உள்ள அனைவருமே நண்பர்கள் தான். அந்த நண்பர்கள் குழுவில் ஒருவருக்கு தோழியாக இருந்த நேகா நடிக்க ஆர்வமாக இருப்பது தெரிந்து, நேகா புகைப்படத்தை மெயிலில் அனுப்பச்சொல்லி, பார்த்து உடனடியாக ஓகே சொன்னார் இயக்குநர் ஆஷிக்.
அன்று மாலையே கொடைக்கானல் கிளம்பி வரச்சொல்லி படப்பிடிப்பு நடத்தி சென்னை திரும்பி இருக்கிறார்கள். நேகா கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்து பாண்டிச்சேரியில் படித்துகொண்டிருக்கும் தமிழ் யுவதி.
தமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த தமிழ் கதாநாயகிகள் வரிசையில் நேகா புதுவரவு.
கிட்டத்தட்ட 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. படத்தின் நான்கு பாடல்களும் பதிவாகி விட்டது. பாடல்களுக்கு இறுதிக்கட்ட மிக்ஸிங் வேலைகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.
சென்னை, கொடைக்கானல், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ள படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஆஷிக்
ஒளிப்பதிவு : ஜெயப்பிரகாஷ்
இசை: அபிஜித் ராமசுவாமி
பாடல்கள்: முருகன் மந்திரம்
எடிட்டிங்: கமல்ஜி
நிர்வாகத் தயாரிப்பு: முருகன் மந்திரம்
தயாரிப்பு: அசோக்குமார், ப.ராமசுவாமி, பா.நந்தகுமார்
நடிகர்கள்: தம்பி ராமையா, மதன்கோபால், சத்யா, ஸ்மைல் செல்வா, ராஜ்கமல், சூப்பர் சிங்கர் ஆஜீத், வருண், நேகா, தீப்ஸ், ராஜசிவா, காளி, பேபி மதுமிதா இவர்களுடன் பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா, யோகி தேவராஜ் மற்றும் பலர்
 

மரியான் பார்வதியாக மாறும் பூ பார்வதி,,


கொலிவுட்டில் ஸ்ரீகாந்துடன் பூ என்ற படத்தில் அறிமுகமான பார்வதி, தன்னுடைய பெயரின் அடைமொழி மாறுவதாக தெரிவித்துள்ளார்.
மிக அழகான, இயல்பான நடிப்பின் மூலம் அப்படத்தின் தலைப்பையே தனது பெயருக்கு அடைமொழியாக்கிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக நடித்தவர் பார்வதி.
தற்போது தனுஷுடன் மரியான் என்ற படத்தில் நடித்துள்ளார். மீனவர்களின் வாழ்க்கையைப் படமாக்கியுள்ள மரியான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள பார்வதியின் இயல்பான நடிப்பு, ஒரு மீனவப் பெண்ணுக்கே உரித்தான இயல்புடன் உள்ளது.
அவரது உடைகள், உணர்ச்சி, நடிப்பு, வசனம் அனைத்தும் உண்மையில் மீனவப் பெண்ணோ என்ற அளவுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.
இப்படத்தில் தனுஷ், பார்வதி இடையேயான காதல் காட்சிகளை நிச்சயம் தமிழ் ரசிகர்கள் விரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மரியான் படத்தில் நடித்திருப்பது பற்றி பார்வதி கூறுகையில், படத்தைப் பற்றி எதுவும் கூற முடியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல முடியும்.
இப்படம் வெளியான பின்பு பூ பார்வதி என்ற அடைமொழி, மரியான் பார்வதி என்று மாறும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

பாலிவுட்டில் நாயகி வாய்ப்பு வாங்கித்தந்த

தமிழில் காதல் அழிவதில்லை படம் மூலம் நாயகியாக அறிமுகமான சார்மி தற்போது தெலுங்கில் முன்னணி குத்தாட்ட நாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில் இந்தி படம் ஒன்றில் நாயகியாக நடிக்க உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தியில் ஏற்கனவே அமிதாப்புடன் ஒரு படத்தில் நடித்திருந்தேன். ஆனால், தற்போது விவேக் ஓபராயுடன் ‘சில்லா காஸியாபாத்’ படம்தான் முறைப்படி நாயகியாக பாலிவுட்டில் நான் அறிமுகமாகும் படம். இந்த வாய்ப்பு எனது நெருங்கிய நண்பர் சோனு சூட் (வில்லன் நடிகர்) வாங்கித்தந்தார். பழமையில் ஊறிய இளம்பெண் வேடம் என்பதால் எனது பாவனைகள், பேச்சு வழக்கு மாற்ற வேண்டி இருந்தது. இதற்காக பயிற்சி எடுத்தேன். நான் ஒரு பஞ்சாபி பெண். இந்தியைவிட தெலுங்கு, தமிழ் நன்றாக பேசுவேன். ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானபோது சிம்பு, நான் இருவருமே சின்ன பிள்ளைகள்போல சண்டை போட்டுக்கொள்வோம். பின்னர் எனக்குள் ஒரு நடிகை இருப்பதை உணர ஆரம்பித்தேன். லாரன்ஸ், பிரபுதேவா போன்றவர்கள் என் வளர்ச்சிக்கு உதவினார்கள். கிளாமர் வேடங்களில் நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். அதேநேரம் மாறுபட்ட வேடங்களையும் ஏற்று நடித்தேன் என்றும் தற்போது எனது தோழி த்ரிஷாவுடன் ‘ரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன் எனவும் கூறினார்.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

ஓர் காணொளிக்கழ்ச்சிகள் ,,,

பதுமையான வடிவில் ஓர் காணொளிக்கழ்ச்சிகள் வாசகரின் மனதை உருக்கும் காட்சிகள் இதோ உங்களுக்காக ,,,,,,,,...

வியாழன், 14 பிப்ரவரி, 2013

விளையாட்டில் கவனம் செலுத்தும் சமந்தா


ஒரே நேரத்தில் மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் நடிக்க சமந்தா தேர்வாகியிருந்தார்.

ஆனால் திடீரென அப்படங்களிலிருந்து தோல் அலர்ஜி காரணமாக விலகினார். ஓய்வில் இருந்த அவர், மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
தற்போது அவர், தெலுங்கு நடிகர் பவன் கல்யானுடன் நடிக்கும் திரிவிக்ரம் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பில் இருக்கும் அவர், மாலை நேரங்களில் பேட்மின்டன் ஆடுகிறார்.
சிறு வயது முதலே பேட்மின்டன் ஆடுவதில் சமந்தாவுக்கு விருப்பம் அதிகமாம்.
அதில் வீராங்கனையாவது தான் அவரது ஆசையாகவும் இருந்ததாம். தற்போது மீண்டும் விளையாட்டு பக்கம் தனது கவனத்தை அவர் திருப்பியுள்ளார்.
இதனால் போட்டிகளில் பங்கேற்கும் விதமாக அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது
 

சந்தானத்துக்கு ஜோடியான சந்தியா


கொலிவுட்டில் 'காதல்' படத்தின் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சந்தியா.
பின்பு இவர் நடித்த 'டிஷ்யூம்', 'வல்லவன்' படங்களைத் தவிர மற்ற படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
சமீபகாலமாக, தமிழில் போதுமான பட வாய்ப்பு இல்லாததால் தாய்மொழியான மலையாளத்திற்கு போனார்.
ஆனால், அங்கேயும் இவரை யாரும் கதாநாயகி வேடத்துக்கு அணுகவில்லையாம். வெறும் குணச்சித்திர வேடங்களுக்கு இவரை அழைத்தனர்.
அதனால், மீண்டும் தமிழில் பிரவேசிக்க முயற்சி எடுத்த அவருக்கு தற்போது ‘யா யா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலும், கதாநாயகி வேடமில்லை. சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தில் சந்தானத்தை அவ்வப்போது கலாய்க்கும் பவர் ஸ்டார் சீனிவாசன், சில காட்சிகளில் சந்தியாவையும் கலாய்க்கும் விதமாக காட்சிகள் உள்ளதாம்.
மேலும் சந்தானம், சந்தியா இருவரும் இதற்கு முன்னரே 'வல்லவன்', 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

புதன், 13 பிப்ரவரி, 2013

கமலின் ஹாலிவுட் படத்தின் தலைப்பு ,,,

கமல் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்து விட்டு ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன் தயாரிப்பில் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டாலும், தலைப்பு பற்றி இன்னும் முடிவு செய்யப்படாமல் இருந்தது. தற்போது இந்த ஹாலிவுட் படத்திற்கு ஆல் ஆர் கின் (All Are Kin) என்று பெயரிட்டிருக்கின்றனர். இந்த தலைப்பை கமல் ஏற்கெனவே தனது தமிழ் படத்திற்காக தேர்வு செய்து வைத்திருந்தாராம்

ஈழத்தமிழர்கள் நடிப்பில் வெளியாகும் “மாறு தடம்

ஓசை பிலிம்ஸின் முதற் தயாரிப்பாக கலைவளரி சக.ரமணாவின் "மாறு தடம்" எனும் முழுநீளத் திரைப்படம் உருவாக்கப்பட்டு சுவிஸில் வெளிவரவுள்ளது.
இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் பற்பல துறைகளில் தங்களை முன்னேற்றி மாபெரும் உலகத் தமிழ்ச் சமூகமாக மாற்றம் கண்டுள்ளனர்.அவர்களுடைய உழைப்பு, புலம் பெயர்வு மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும்போது மிகப்பெரியது. ஒவ்வொரு துறைகளிலும் வெற்றி கண்டுவரும் இவர்கள், நாடகத்துறை, திரைப்படத்துறை போன்றவற்றில் பெரிதாக வளர்ச்சி காணவில்லை.
அதற்கு தகுந்த தயாரிப்பாளர்கள், சந்தை மற்றும் ஒத்துழைப்பின்மை போன்ற பற்பல நடைமுறை காரணங்களால் கலைஞர்கள் துணிந்து திரைத்துறைக்குள் நுழைய முடியவில்லை. இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே ஓசை பிலிம்ஸ்.

இதன் நோக்கம் திரைக்கலைத்திறன் மிக்க கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுடைய திறமைக்கு ஏற்ப வாய்ப்புகளை வழங்குவதே ஆகும். இந்நிலையில் ஓசை பிலிம்ஸ் மற்றும் விஷ்னி சினி ஆர்ட்ஸ் இணைந்து மாறு தடம் என்ற புதிய படத்தை உருவாக்கியுள்ளது.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த 27.01.2013 Restaurant Steinhof - Bernstrasse 61 - 3400 Burgdorf - ல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அகண்ட திரையரங்கில் காண்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக சுவிஸின் பல பாகங்களிலும் மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, கொலண்ட், லண்டன், இத்தாலி, நோர்வே, டென்மார்க், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வெளியிடப்படவுள்ளது.

படத்தில் ரமணா, மீனாபிரகாஷ், அனுசாந், விதுசன், விஷ்ணி, கஜன், சாய்ராஜ், கீதா, சுகிர்தா, யசோ, முரளி, இந்துசன், தனுஜன், விஜயன், பாஸ்கர், அனுக்ஷன், சஞ்சி, நிசிதன், சிவசங்கரன், தயா, பாலகிருஷ்ணன், கிருஷ்ணா, சுகந்தி, ஓவியன், விவேதா, விவேகா, இனியன், ஸ்ரெபானி, சிமோனெ, மச்சி பாலா, ரஞ்சினி, சுந்தரம், தர்சிகா, சுவேரா, நிவேதா, சுருதிகா, சிந்துயா, லக்ஷன், ரவி, அருண், பிரா, ஜெனிஸ்ரன், லக்ஷகன், அஜித், கௌசி, லோகதாசன் நடித்துள்ளனர்.

மேலும் பெர்மினஸ், கொலின் (திருமறைக் கலா மன்றம்), மனோரஞ்சினி, வி.ரி.அரசு, நிந்துஜா, அன்றூ, ஜசீதரன், கலைதாசன், துர்க்கா, மதுஷா, யுகன், பவிசரணி, கோபிதர்சன், தரிசனன் இலங்கை யாழ்ப்பாண கலைஞர்களும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாரிஸ் கலைஞர் ஏ.ரகுநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இசை, வா.யதுர்சன்(சுவிஸ்), மு.உதயன் (சுவிஸ்). ஒளித்தொகுப்பு, கிருபா(சுவிஸ்), யசீதரன் (யாழ்ப்பாணம்). பிரத்தியேக சத்தம், டனா (நித்தி விஷன் யாழ்ப்பாணம்), டி.ரி.எஸ்(D.T.S). ஸ்டார் ஸ்டுடியோ (சாலிகிராமம் சென்னை) கிராபிக்ஸ் & டிசைன், விஜிதன் சொக்கா (பாரிஸ்), ராகவன் (கோடம்பாக்கம் சென்னை).வண்ணக்கலவை, பிஷல் ஷேக் (கோடம்பாக்கம் சென்னை). ஒப்பனை, தயா லோகதாசன்(சுவிஸ்), அன்றூ (யாழ்ப்பாணம்). இணைக்கதை, பாலகிருஷ்ணன். ஒளிதொகுப்புத் தயாரிப்பு, விஷ்னி சினி ஆர்ட்ஸ்.தயாரிப்பு,ஓசை பிலிம்ஸ். கதை, எழுத்து, படத்தொகுப்பு, பாடல்கள், ஆக்கம்,கலைவளரி சக.ரமணா (ரமணதாஸ்
{காணொளி, }

திங்கள், 11 பிப்ரவரி, 2013

பில்லா கில்லாடி ரங்காவில் சிம்பு ?

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு சிம்பு, யுவன் சங்கர் ராஜா இணைந்து பாடலொன்றை பாடியிருக்கிறார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விமல், சிவகார்த்திகேயன் இணைந்து நடித்து வருகின்றனர். பிந்து மாதவி,ரெகினா இருவரும் நாயகிகளாக நடிக்க படம் முழுவதும் திருச்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு நா.முத்துகுமார் பாடல்கள் எழுத யுவன் இசையமைக்கிறார். இந்நிலையில் சிம்பு பாடிய பாடல் வீடியோவாக யூடியுப்பில் வெளியாகியுள்ளது,{காணொளி }

இலங்கை அரசியல் வாதிகளின் ,,.,,

இணையத்தில் கலக்கும் மகிந்தாவின் நடனம்,{காணொளி}

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013


கொலிவுட்டில் பி.டி. செல்வகுமார் இயக்கத்தில் வினய், சத்யன், அரவிந்த், லட்சுமிராய் நடிக்கும் படம் ஒன்பதுல குரு. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு பவர் ஸ்டார் சீனிவாசனுடன் லெட்சுமிராய் நடனம் ஆடி
இருக்கிறார். முதலில் இதுபற்றி படத்தின் இயக்குனர் செல்வகுமார், லெட்சுமிராயிடம் கேட்டபோது, பவர்ஸ்டாருடன் போய் எப்படி ஆடுவது என்று முகம் சுழித்தாராம். அதற்கு இயக்குனர் இந்த படத்துக்கு வரவேற்பே அவரை வைத்துதான். வினய்யை வைத்து இல்லை. அதனால் அவருடன் நீங்கள் ஆடுவது போன்று இப்போது கதையை திருத்தம் செய்திருக்கிறேன். இப்போது பவர்ஸ்டாரை முக்கியமான நடிகராக்கி, அவருடன் ஆடியே ஆக வேண்டும் என்று அடித்து சொல்லிவிட்டாராம் இயக்குனர். அதன் காரணமாக மனதை இறுக்கமாக வைத்துக் கொண்டு முகத்தில் சிரிப்பை வெளிப்படுத்தியபடி பவர்ஸ்டாருடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார் லட்சுமிராய்

சனி, 9 பிப்ரவரி, 2013

தடைகளை தாண்டி சாதனை படைத்தது விஸ்வரூபம்


சர்வதேச அளவில் சினிமா விவரங்கள் தரும் இணையதளமான IMDBயில் கமலின் விஸ்வரூபம் படம் அதிக புள்ளிகள் பெற்று சாதனை புரிந்துள்ளது. கமல் படங்களில் அதிக பரபரப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான படம் விஸ்வரூபம்தான் என்பது அனைவரும் அறிந்த விடயமாகிவிட்டது. தமிழ், இந்தி என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இணையத்திலும் விஸ்வரூபம் புதிய சாதனை செய்துள்ளது. இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10க்கு 9.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்துக்கு இதுவரை 12800க்கும் அதிகமான வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இதுவும் ஒரு புதிய சாதனைதான். ஒருவேளை இந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டினால், உலக அளவில் புகழ்பெற்ற 250 படங்களின் பட்டியலில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இடம்பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது

மணிரத்னம் வீட்டை விநியோகஸ்தர்கள் முற்றுகை


மணிரத்னம் இயக்கி, தயாரித்த கடல் படம் ரிலீசாகி தமிழகம் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறதுஇதில் நடிகர் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் அறிமுகமானார்கள். அர்ஜுன், அரவிந்தசாமியும் நடித்துள்ளனர்.இப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறினர். மணிரத்னத்திடம் தொடர்ந்து நஷ்டஈடு கேட்டும் வற்புறுத்தினர். இதனைத்தொடர்ந்து மணிரத்னம் வீட்டில் முற்றுகையிட முடிவு செய்தனர். அடையாறு கிரீன்வேஸ் ரோட்டில் மணிரத்னம் வீடு உள்ளது. தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகமும் அங்கு செயல்படுகிறது. விநியோகஸ்தர்கள் பலர் இன்று பகல் இந்த வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அலுவலகத்தில் நுழைந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதையடுத்து மணிரத்னம் வீட்டில் பொலிசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்

வியாழன், 7 பிப்ரவரி, 2013

சேட்டை படப்பாடல்களை பாராட்டிய


கொலிவுட்டில் ஆர்யா, பிரேம்ஜி, சந்தானம், ஹன்சிகா மோத்வானி, அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'சேட்டை'. இந்தி 'டெல்லி பெல்லி' படத்தின் ரீமேக்கான இப்படத்தை இயக்குனர் கண்ணன் இயக்கியுள்ளார். இந்தியில் 'டெல்லி பெல்லி' படத்தை இயக்கிய அபிநய் டியோ, சமீபத்தில் 'சேட்டை' படப்பாடல்களை ரசித்து, மனம் விட்டு பாராட்டியுள்ளார்.
இது குறித்து அபிநய் கூறுகையில், இந்தி டெல்லி பெல்லி படத்தை 'சேட்டை' படமாக தமிழில் இயக்குனர் கண்ணன் நன்றாக எடுத்துள்ளார். அதில் நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனக்கு அதிகமாக தமிழ் தெரியாது என்றாலும் கண்ணனிடம் பேசி 'சேட்டை' பற்றி தெரிந்து கொண்டேன் என்றார். சுவிட்சர்லாந்து மற்றும் நியுசிலாந்தில் படமாக்கியுள்ள படத்தின் பாடல் காட்சிகளை கண்டு பிரமித்தேன் எனவும் கூறியுள்ளார்

ரசிகர்களுக்காக ஏங்கும் அமலா பால்

தமிழிலும் தெலுங்கிலும் பரபரப்பாக நடித்து வரும் நடிகைகளில் மைனா நாயகி அமலா பால் முன்னணியில் இருக்கிறார்.
இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக "தலைவா" என்ற படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக"நிமிர்ந்து நில்" என்ற படத்திலும் அமலா நடித்து வருகிறார்.
இதுதவிர, இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.
இந்த நான்கு படங்களின் படப்பிடிப்புகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வருவதால் டுவிட்டர் மூலம் ரசிகர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்களின் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பார்க்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருக்கிறார் அமலா பால்.
படப்பிடிப்புகளிலிருந்து சிறிது இடைவெளி கிடைத்ததும் முழு வீச்சில் டுவிட்டர் மூலம் ரசிகர்களை தொடர்பு கொண்டு அவர்களின் நலன் விசாரிக்கப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார் அமலா
 

புதன், 6 பிப்ரவரி, 2013

புத்தகம். திரைவிமர்சனம்


நடிகர்கள்                                 : சத்யா, ராகுல் ப்ரீத், சஞ்சய் பாரதி, சுரேஷ்

இசை                                        : ஜேம்ஸ் வசந்தன்
தயாரிப்பு    : வி ராமதாஸ்  இயக்கம்  ,, விஜய் ஆதிராஜ் ,,            ஆர்யாவின் தம்பி சத்யா, இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் ஹீரோக்களாக அறிமுகமாகியுள்ள படம் புத்தகம். சீரியல் நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கியுள்ளார். புதுமுகம் ராகுல் ப்ரீத் ஹீரோயின்.
எம்ஜி ஆர் காலத்துக் கதை. காதலிக்காக சத்யசோதனை புத்தகத்தை லைப்ரரியில் எடுத்துவருகிறார் சத்யா. அதில் இருக்கும் ஒரு சீட்டில் ஒரு கல்லறையில் பெரும் பணம் புதைத்துவைக்கப்பட்டிருப்பதாகக் குறித்துவைக்கப்பட்டுள்ளது. அதை நண்பர்களுடன் தேடிப் போய் எடுத்துவிடுகிறார் ஹீரோ.
ஆனால் அந்தப் பணத்துக்கு சொந்தக்காரர் ஒரு அமைச்சர். எப்படியாவது பணத்தைக் கைப்பற்ற அடியாட்களுடன் திட்டம் போடுகிறார். பணம் யாருக்குக் கிடைத்தது என்பது க்ளைமாக்ஸ். பழைய கதை என்றாலும் கொஞ்சம் முயன்றிருந்தால் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம். ஆனால் பழக்க தோஷத்தில் ரொம்பவே சீரியல்தனமாக்கிவிட்டார் விஜய் ஆதிராஜ்.
ஆர்யா தம்பியின் நடிப்பைப் பற்றி எழுத அவர் இன்னும் இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும். சஞ்சய் பாரதியும், ஹீரோயின் ராகுல் ப்ரீத்தும் பரவாயில்லை. மனோபாலா இப்போது கிட்டத்தட்ட செட் ப்ராபர்ட்டி மாதிரி ஆகிவிட்டார். சுரேஷ் போலவே அவர் நடிப்பும் ரொம்ப பழசு. ஜேம்ஸ் வசந்தன் வழக்கம்போல சொதப்பியிருக்கிறார். நடிகராக தேறாமல் போன விஜய் ஆதிராஜ், இயக்குநராக பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார்!

விஸ்வரூப பிரச்னையில் சர்ச்சையை கிளப்பிய

விஸ்வரூபம் படத்துக்கு இவ்வளவு சிக்கல் இருக்கிறது, இந்த நடிகர் சங்கம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது. இது நடிகை வரலட்சுமி எழுப்பிய கேள்விகளில் ஒன்று. சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்திருந்த வரலட்சுமி, விஸ்வரூபம் பிரச்சனையில் இங்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. நடப்பதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் நடிகர் சங்கம் இந்த விடயத்தில் இன்னும் ஏன் மெளனமாக உள்ளது? என்றும் நான் உங்களுக்கு ஆதராவாக இருப்பேன் கமல் சார், என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார். வரலட்சுமியின் அப்பா சரத்குமார்தான் நடிகர் சங்கத்தின் தலைவர் என்பதும், அவர் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ. என்பதும் வரலட்சுமிக்கு தெரியாதா? போய் தன் அப்பாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை ட்விட்டரி்ல் கேட்டுக் கொண்டிக்கிறாரே என்று கமெண்ட்கள் பறந்தன கொலிவுட்டில். இன்னொரு பக்கம், இதே கேள்வியைத்தான் விஷாலும் கேட்டிருந்தார். அவரை சங்கத்திலிருந்தே விலக்கும் அளவுக்கு காரசாரமாக விவாதிக்கும் நடிகர் சங்கம், சங்க தலைவர் மகளை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது ஏன் என்றும் இப்போது கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது விஸ்வரூப பிரச்னை முடிவுக்கு வந்தாலும் வரலட்சுமி கூறிய கருத்துக்கள் கோடம்பாக்கத்தாரின் நெஞ்சில் பதிந்து விட்டது

சேட்டையில் நீத்துவின் ஆட்டம்

ஆர்யா நடிக்கும் சேட்டை படத்தில் நடிகை நீத்து சந்திரா, குத்தாட்டம் ஆட உள்ளார். ஆதிபகவன் படத்தில் நடித்திருக்கும் நீத்து, ஏற்கனவே யுத்தம் செய் படத்தில் "கன்னித்தீவு பொண்ணா" என்ற பாடலுக்கு ஆடியுள்ளார். தற்போது ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி நடிக்கும் டெல்லி பெல்லி ரீமேக் சேட்டை படத்தில் "லைலா லைலா" என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ளார். இப்படத்தில் ஏற்கனவே உதட்டு முத்தம், அஞ்சலி, ஹன்சிகாவின் கவர்ச்சி என ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய பல சமாச்சாரங்கள் உண்டு. இந்நிலையில் நீத்துவின் குத்தாட்டத்தையும் படத்தில் இணைக்க உள்ளார்கள். விரைவில் இதற்கான படப்பிடிப்பு நடக்குமென தெரிகிறது

புடவை கட்டி நடிக்கும் மல்லிகா


பாலிவுட்டின் குத்தாட்ட நடிகை மல்லிகா ஷெராவத், முதன் முறையாக சேலை கட்டி நடிக்க உள்ளாராம். தன் திரைப்பட வாழ்விலேயே மிக வித்தியாசமான ஒரு வேடத்தில் மல்லிகா தற்போது நடித்து வரும் படம் அங்கோலி தேவி. இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன், இராஜஸ்தானில் பிரபலமாக பேசப்பட்ட பன்வாரி தேவி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது. இதுவரை நடித்த படங்களில் அரைகுறை உடையுடன் ஆட்டம் போட்ட மல்லிகா ஷெராவத், இந்த படம் முழுவதும் புடவை அணிந்து தான் நடிக்கிறார். இந்த படத்தில் நான் நடிப்பதாக தகவல்கள் வெளியானதும் ஏராளமான மிரட்டல்கள் வந்தன. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடிக்கிறேன். படம் முழுவதும் புடவை அணிந்து நடிப்பது ரொம்ப வித்தியாசமான அனுபவமாக உள்ளது. புடவை எனக்கு, வசதியான உடையாக தெரியவில்லை என்கிறார் மல்லிகா

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

மூன்றாவது திருமணம் செய்துள்ளார் டைட்டானிக் நாயகி

டைட்டானிக் நாயகி கேத் வின்ஸ்லெட் மூன்றாவது திருமணம் செய்துள்ளார். 37 வயதாகும் பிரிட்டிஷ் நடிகையான கேத் வின்ஸ்லெட் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். முதல் கணவர் இயக்குனர் ஜிம் தெரபில்டன் இவரை 2001 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக ஷேம் மெண்டீஸ் என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது தன்னை விட இளையவரான 34 வயதாகும் நெட் ராகென்ரோல் என்பவரை காதலித்து வந்தார். இவர் விண் வெளி ஆய்வு நிறுவனத்தில் பணி புரிகிறார். அவரைத்தான் இப்போது 3-வதாக திருமணம் செய்து கொண்டார் கேத் வின்ஸ்லெட். இவர்களது திருமணம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் முன்பே நடந்துவிட்டது. ஆனால் கொஞ்சநாள் இதை ரகசியமாக வைத்திருந்த வின்ஸ்லெட் - நெட் ராகென்ரோல் ஜோடி நேற்றுதான் உலகுக்கு வெளிப்படுத்தினர். ராக்கென்ரோலின் உறவினர்தான் பிரபல பிஸினஸ்மேன் சர் ரிச்சர்டு பிரான்ஸ்மேன். வர்ஜின் குழும தலைவர். 400 நிறுவனங்களுக்கு அதிபர். கேத் வின்ஸ்லெட் - ராக்கென் ரோல் திருமணப் பரிசாக இருவரையும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப் போகிறாராம் பிரான்ஸ்மேன்