30.09.2012.ByRajah.நடிகை அனுஷ்கா, நடிப்பதோடு மட்டும் நில்லாமல் தன்னுடன் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவர். |
தன் உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு(வானம்) தான் நடிக்கும் திரைப்படங்களில்
சிறு கதாபாத்திரங்களைக் கொடுக்குமாறு இயக்குனரிடம் பரிந்துரை செய்கிறார். இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் சக நடிகர், நடிகைகளுக்கு யோகா கற்றுத் தந்தார். தெலுங்கில் நடிகை அமலா பாலுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறார். இது தவிர தற்போது புதிய விடயம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தனக்கு நீண்ட காலமாக கார் ஓட்டியவருக்கு ஒரு காரைப் பரிசளித்துள்ளாராம். என்ன தான் நீண்ட காலமாக வாகன ஓட்டுநராக இருந்தாலும் யாரும் காரை பரிசளிப்பதில்லை. ஆனால் அனுஷ்கா இவ்வாறு செய்தமை அவருடைய நன்மதிப்பை திரையுலகில் சற்றே உயர்த்தியிருக்கிறது. தற்போது இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக