.
.
26.09.2012.BY.Rajah.கடவுளின் சொந்த நாடான கேரளா, [அவர்கள் விளம்பர வாசகம் அப்படிதான் சொல்கிறது] கலைகளின் நாடாகவும் சொல்லப்படுகிறது.
கேரளாவில் திருச்சூரில் அமைந்த புகழ்பெற்ற சிற்பகூடத்தின் நுழைவு பாதை இது
மனிதனை கடவுள் படைத்ததாக வேதங்கள் சொல்கின்றன. இங்கோ விதவிதமாக கடவுளைப் மனிதன் படைத்து விற்றுக் கொண்டிருக்கிறான்.
கேரளா மட்டுமல்லாது தமிழ் நாட்டிலிருந்தும் தேவாலயங்களில் வழிபடுவதற்கான சுருபங்கள் இங்கே வந்து விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றனவாம்.பெரும்பாலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்படும் இந்த சுருபங்கள் தத்ரூபமாக அமைந்திருப்பதுதான் கொள்ளை கொள்ளும் சிறப்பு.
களிமண்ணாலும் மரத்தாலும் கூட சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன. கடவுள் நேரடியாக இறங்கி வந்து உடனிருப்பதைப் போன்ற ஒரு உணர்வை தருகின்றன அந்த சிலைகள். கனிவு கொண்ட கண்கள் , பேச எத்தனிக்கிற உதடு, மேனியில் மென்மை, போர்த்திவிட்ட மாதிரி ஆடைகள். கலைஞர்களின் கைவண்ணம் நிஜம் போலவே அதை ஆக்கியிருக்கிறது.
விதவிதமான வடிவங்களில், வடிவங்களுக்கேற்ற விலைகளில் கடவுள்கள் விற்பனைக்கு தயார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக