27.09.2012.By.Rajah.சமூகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதன்முறையாக ஆவணப் படமொன்றில் நடித்துள்ளார். |
சத்யராஜின் மூத்த மகன் சிபிராஜ், ஏற்கனவே லீ, நாணயம் உட்பட பல படங்களில்
நடித்துள்ளார். இருப்பினும் சிபிராஜின் படங்கள் இன்னும் வரவேற்பை பெற வில்லை. இந்நிலையில் சத்ய ராஜின் மகள் திவ்யா முதன்முறையாக ஆவணப்படமொன்றில் அறிமுகமாகி நடித்துள்ளார். இப்படத்தைப் பார்த்த சிபிராஜ், திவ்யாவின் நடிப்பை பாராட்டினாராம். மேலும் இப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை கொல்கத்தாவை சேர்ந்த சிர்ஷாய் என்பவர் இயக்கி உள்ளார். இந்த வேடத்தில் நடிக்க முதலில் கங்கானா ரனாவத்தை அணுகினார். ஆனால் இவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் திவ்யாவை நடிக்க வைத்தனர் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக