27.09.2012.By.Rajah.மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த ரன் பேபி ரன் வெற்றிக்குப் பின்பு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அமலாபால். |
தற்போது ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் படத்தில் நடித்து வரும் அமலாபால்
தமிழில் எப்படியாவது நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக
இருக்கிறார். அனுஷ்கா தெலுங்கில் அக்கறை காட்டி வருகிறார், நயன்தாராவுக்கு தமிழ் படங்களில் ஆர்வம் இல்லை. காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் இந்தி படங்களின் பக்கம் கவனம் செலுத்துகிறார்கள். த்ரிஷா கல்யாண மூடில் இருக்கிறார். எனவே தமிழில் நம்பர் ஒன் நடிகை என்ற தற்போதைக்கு யாரையும் குறிப்பிட முடியாது அந்த இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்கத்தான் அமலாபால் முயற்சி செய்து இருக்கிறார். தற்போது அவருக்கு இருக்கும் ஒரே போட்டியாளர் ஹன்சிகா மட்டுமே அவருக்கு வடக்கத்திய முகசாயல் இருப்பதால் எல்லா கதாபாத்திரத்துக்கும் அவர் பொருந்த மாட்டார். ஆனால் அமலாபாலுக்கு உள்ளூர் முகம், கவர்ச்சி, நடிப்பு என எல்லாமே இருப்பதால் எளிதில் நம்பர் 1 இடத்தை பிடித்து விடுவார் என்று சொல்கிறார்கள். நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் விஜய் இயக்க இருக்கும் புது படத்தில் அமலாபால்தான் கதாநாயகி என்று இப்போதே பேச்சு இருக்கிறது. மொத்தத்தில் நம்பர் 1 இடத்தை பிடிப்பதில் உறுதியாக இருக்கிறார் அமலாபால் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக