30.09.2012.By.Rajah.கொலிவுட்டில் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை விஜயலட்சுமி. |
இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். தற்போதும்
வெளியாகவுள்ள வனயுத்தம் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக
நடித்துள்ளார். அடுத்து வர இருப்பது தமிழ் படம் எடுத்த சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம். இதில் விஜயலட்சுமி படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், படத்துல எனக்கு நெகட்டிவ் கேரக்டர். எதையும் தூசு மாதிரி பார்க்குற பொண்ணு. எவ்வளவு திமிரா நடிக்க முடியுமோ, அவ்வளவு திமிரா நடிச்சிருக்கேன். எத்தனை படத்துலதான் குடும்ப குத்துவிளக்காக நடிச்சிட்டிருக்க முடியும். அதான் கிளாமரா நடிச்சிருக்கேன். ஏன் நான் கவர்ச்சியா நடிக்க கூடாதா என்ன? வனயுத்தம் பார்த்துட்டு ரெண்டாவது படம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ஷாக்காத்தான் இருக்கும் என்கிறார் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக