திங்கள், 24 செப்டம்பர், 2012

மனைவி பிறந்த நாளை தாஜ் மஹாலில் கொண்டாடிய பிரகாஷ் ராஜ்!


24.09.2012.By.Rajah.மனைவி போனி வர்மாவின் பிறந்த நாளை தாஜ் மஹாலில் வைத்துக் கொண்டாடினார் நடிகரும் தயாரிப்பாளருமான பிரகாஷ் ராஜ்.
இரு ஆண்டுகளுக்கு முன், மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்டு, போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ்.
இருவரும் மும்பையில் வசிக்கின்றனர். அவ்வப்போது சென்னைக்கும் வருகின்றனர்.
இருவருமே சினிமாவில் படுபிஸியாக இருக்கின்றனர்.
தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் பரபரப்பாக இயங்கி வரும் பிரகாஷ்ராஜ், அடுத்து ராதாமோகன் இயக்கும் �கவுரவம்' படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து வருகிறார்.
இந்தி நடன இயக்குனரான போனி வர்மா, பாலிவுட்டில் நிறைய படங்கள் செய்து வருகிறார். இருவருமே பரபரப்பாக உள்ளதால், வெளியில் சென்று ஓய்வாக நேரத்தை செலவிட முடியவில்லையாம்.
இந்த நிலையில் போனி வர்மா பிறந்த நாளையொட்டி அவரை தாஜ்மகாலுக்கு அழைத்து சென்று சந்தோஷப்படுத்தினாராம் பிரகாஷ்ராஜ்.
இருவரும் தாஜ்மகாலில் பல மணி நேரம் செலவிட்டதோடு, விரும்பிய படி படங்களை எடுத்துக் கொண்டு திரும்பினார்களாம்.
இந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது என போனி வர்மா பின்னர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக