17.09.2012.By.Rajah.இயக்குனர் சசிகுமார் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் 'சுந்தர பாண்டியன்'. |
இப்படத்தை அவரது உதவி இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகரன், சூரி, அப்புக்குட்டி, நரேன், தென்னவன், சௌந்திரராஜா, நாயகி லட்சுமி மேனன், துளசி, சுஜாதா, நீது நீலாம்பரன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். காதல் விவகாரத்தில் நாயகனின் நண்பர்களே அவருக்கு துரோகிகளாக மாறினால் என்ன நடக்கும் என்பது தான் இந்த சுந்தர பாண்டியன் படம். நாயகி லட்சுமி மேனனை இனிகோ ஒரு தலையாக காதலிக்கிறார். இவருக்கு நாயகன் சசியும், சூரியும் உதவி செய்கிறார்கள். அப்புக்குட்டியும் நாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறார். பஸ்ஸில் நடக்கும் தகராறில் அப்புக்குட்டி இறக்கிறார். சசி சிறைக்கு செல்கிறார். சசியும், நாயகியும் ஆழமாக காதலிக்கிறார்கள். சசிகுமாரின் அப்பா நரேனும், நாயகியின் அப்பாவும் பேசி திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்புக்குட்டியின் மரணத்தை மறக்காத நண்பன், நாயகியை கை பிடிக்க துடிக்கும் விஜய் சேதுபதி இணைந்து நாயகனுக்கெதிராக சதி வலை விரிக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி நாயகன் சசிகுமார், நாயகியை கைப்பிடிக்கிறாரா என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ். இயல்பான கிராமத்து நாயகனாக சசி அசத்தியிருக்கிறார். 'குத்தியவன் நண்பனாக இருந்தால், அதை வெளியே சொல்லக்கூடாது, அதுதான் நட்பு' என்று நட்புக்கு அதிரடி இலக்கணத்தை சொல்லியிருக்கிறார்கள். கேரள நாயகி லட்சுமி மேனன், கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பைக்காட்டியிருக்கிறார். சூரி வரும் காட்சிகளில் காமெடி துள்ளி விளையாடுகிறது. க்ளைமாக்சில் மரணத்தின் விளிம்புக்கு செல்லும் சசி, தமிழ் சினிமா நாயகர்களுக்கே உரிய அதிரடி ஸ்டைலில் சண்டை போட்டு ரசிகர்களை வியக்க வைக்கிறார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக