27.09.2012.By.Rajah.நகுல், பூர்ணா, சந்தானம் நடித்த கந்தகோட்டை படத்தை இயக்கிய சக்திவேல் “ஈகோ” என்னும் பெயரில் புதிய படத்தை இயக்குகிறார். |
இந்த படத்தில் வேலு என்னும் புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். இவர்
அமெரிக்காவில் பொறியியல் படித்தவர். நாயகியாக அனஸ்வரா நடிக்கிறார். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் புகழ் பெற்ற பாலா கொமெடி வேடத்தில் நடிக்கிறார். படம் குறித்து இயக்குனர் சக்திவேல் கூறுகையில், அழகான பொய்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களால் உண்டான நட்பு, காதல், வெறுப்பு மற்றும் ஈகோ நாயகன் நாயகி வாழ்கையை புரட்டி போடுகின்றன. அதன் பின்பு அவர்கள் வாழ்க்கையில் என்ன ஆகிறது என்பது தான் கதை. இந்த கதையை நகைச்சுவையோடு கலகலப்பாக எல்லா தரப்பினரும் ரசிக்கும் படி சொல்லியிருகிறோம் என்று கூறியுள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்ட படபிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்றது. பாடல்கள் நியூசிலாந்தில் படமாக்கப்பட்டன. இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் திரைக்கு வருகிறது இந்த படம் என்கிறது படக்குழு. |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக