ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ஆதிபகவன் படப்பிடிப்பு முடிந்தது: ஜெயம் ரவி மகிழ்ச்சி

30-09-2012.By.Rajah.அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி இசை சேர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக ஆதிபகவனுக்காக விதவிதமான கெட்-அப்புகளை போட்டு அதை மறைத்து வாழ்ந்து வந்த ரவி இப்போது நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஆதிபகவன்ல ஒப்பந்தம் ஆகுறப்பவே இவ்ளோ காலம் ஆகும்னு எனக்குத் தெரியும்.
கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் பரவாயில்லையான்னு அமீர் சார் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார்.
ஏன்னா இது நிழல் உலக தாதாக்களோட கதை. படப்பிடிப்பு நடந்தப்போ கஷ்டமாத்தான் இருந்திச்சு.
அமீர் சார் அவர் நினைக்கிறது நம்மகிட்டேருந்து வர்ற வரைக்கும் விடமாட்டார்.
ஒரு சின்ன ஷாட்டுக்கு ஒரு நாள் வரைக்கும்கூட மெனக்கெடுவார். என்னடா நல்லா மாட்டிக்கிட்டோமேன்னு சில நேரங்கள்ல யோசிச்சிருக்கேன்.
ஆனா இப்போ படத்தை பார்க்குறப்போ அவ்ளோ சந்தோஷமா இருக்கு.
ரவி உங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்குறேன்னு அவரும் சொல்லியிருக்கார் என்றும் அது நடக்கும்னு நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக