ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

கலக்கலான கொமெடி படத்தில் விவேக்-சோனியா அகர்வால் ஜோடி

30.09.2012.By.Rajah.கொலிவுட்டில் விரைவில் வெளியாக உள்ள த்ரில்லர் படமான 'சௌந்தர்யா'வை இயக்கியவர் சந்திரமோகன்.
இவர் தற்போது ஏ.பி.சி.ட்ரீம்ஸ் எண்டர்டெயினர்ஸ் சார்பில் 'பாலக்காட்டு மாதவன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில் கொலிவுட்டின் நட்சத்திர கொமெடியன் விவேக், நடிகை சோனியா அகர்வாலுடன் இணைந்து நடித்துள்ளார்.
இது குறித்து சந்திரமோகன் கூறுகையில், கதையின் நாயகனாக கலக்கல் கதாபாத்திரத்தில் விவேக் ரசிகர்களை சிரிக்க வைக்கப்போகிறார்.
கதையின் நாயகியாக நடித்துள்ள சோனியா அகர்வாலுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்.
தமிழ் சினிமாவின் திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
அவரின் ஆலோசனையில் படத்தின் திரைக்கதை மேலும் சுவாரஸ்யமாகி வலிமை பெற்றுள்ளது.
மலையாள பட உலகின் பழம்பெரும் நடிகை 'செம்மீன்' ஷீலா, இப்படத்தின் கதையை கேட்டு சிரித்து, சிரித்து கண்கலங்கினார் என்றும் மலையாள படங்களுக்கு இசையமைத்த அஜம்ல் அஜீஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்

நான் கவர்ச்சியா நடிக்கக் கூடாதா? விஜயலட்சுமி

30.09.2012.By.Rajah.கொலிவுட்டில் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை விஜயலட்சுமி.
இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். தற்போதும் வெளியாகவுள்ள வனயுத்தம் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்துள்ளார்.
அடுத்து வர இருப்பது தமிழ் படம் எடுத்த சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம்.
இதில் விஜயலட்சுமி படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், படத்துல எனக்கு நெகட்டிவ் கேரக்டர். எதையும் தூசு மாதிரி பார்க்குற பொண்ணு. எவ்வளவு திமிரா நடிக்க முடியுமோ, அவ்வளவு திமிரா நடிச்சிருக்கேன்.
எத்தனை படத்துலதான் குடும்ப குத்துவிளக்காக நடிச்சிட்டிருக்க முடியும். அதான் கிளாமரா நடிச்சிருக்கேன்.
ஏன் நான் கவர்ச்சியா நடிக்க கூடாதா என்ன? வனயுத்தம் பார்த்துட்டு ரெண்டாவது படம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ஷாக்காத்தான் இருக்கும் என்கிறார்

ஆதிபகவன் படப்பிடிப்பு முடிந்தது: ஜெயம் ரவி மகிழ்ச்சி

30-09-2012.By.Rajah.அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி இசை சேர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக ஆதிபகவனுக்காக விதவிதமான கெட்-அப்புகளை போட்டு அதை மறைத்து வாழ்ந்து வந்த ரவி இப்போது நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஆதிபகவன்ல ஒப்பந்தம் ஆகுறப்பவே இவ்ளோ காலம் ஆகும்னு எனக்குத் தெரியும்.
கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் பரவாயில்லையான்னு அமீர் சார் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார்.
ஏன்னா இது நிழல் உலக தாதாக்களோட கதை. படப்பிடிப்பு நடந்தப்போ கஷ்டமாத்தான் இருந்திச்சு.
அமீர் சார் அவர் நினைக்கிறது நம்மகிட்டேருந்து வர்ற வரைக்கும் விடமாட்டார்.
ஒரு சின்ன ஷாட்டுக்கு ஒரு நாள் வரைக்கும்கூட மெனக்கெடுவார். என்னடா நல்லா மாட்டிக்கிட்டோமேன்னு சில நேரங்கள்ல யோசிச்சிருக்கேன்.
ஆனா இப்போ படத்தை பார்க்குறப்போ அவ்ளோ சந்தோஷமா இருக்கு.
ரவி உங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்குறேன்னு அவரும் சொல்லியிருக்கார் என்றும் அது நடக்கும்னு நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்

அனுஷ்காவின் பெரிய மனசு

30.09.2012.ByRajah.நடிகை அனுஷ்கா, நடிப்பதோடு மட்டும் நில்லாமல் தன்னுடன் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்.
தன் உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு(வானம்) தான் நடிக்கும் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களைக் கொடுக்குமாறு இயக்குனரிடம் பரிந்துரை செய்கிறார்.
இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் சக நடிகர், நடிகைகளுக்கு யோகா கற்றுத் தந்தார்.
தெலுங்கில் நடிகை அமலா பாலுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறார். இது தவிர தற்போது புதிய விடயம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தனக்கு நீண்ட காலமாக கார் ஓட்டியவருக்கு ஒரு காரைப் பரிசளித்துள்ளாராம்.
என்ன தான் நீண்ட காலமாக வாகன ஓட்டுநராக இருந்தாலும் யாரும் காரை பரிசளிப்பதில்லை. ஆனால் அனுஷ்கா இவ்வாறு செய்தமை அவருடைய நன்மதிப்பை திரையுலகில் சற்றே உயர்த்தியிருக்கிறது.
தற்போது இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

வித்யாபாலனுக்கு பூனை என்றாலே அலர்ஜியாம்

 
 
30.09.2012.By.Rajah.கமெரா முன்பு கவர்ச்சி காட்டவே பயம் கொள்ளாத பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு பூனை என்றாலே அலர்ஜியாம்.
மறைந்த நடிகை சில்க் கதாப்பாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
இதன் மூலம் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்புகளில் மிகவும் தைரியமாக நடந்து கொள்ளும் வித்யாவுக்கு பூனைகள் என்றால் அலர்ஜியாம்.
ஒரு தடவை கமலிஸ்தான் ஸ்டியோவில் நடந்த படப்பிடிப்பிற்காக வந்திருந்தார் வித்யா பாலன்.
பரபரப்பான படப்பிடிப்புக்கு மத்தியில் உணவு இடைவேளை வந்தது.
அப்போது தனக்குரிய கேரவனுக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது சில பூனைகள் உள்ளே நுழைய, மிகவும் சப்தமிட்டுள்ளார் வித்யா பாலன்.
உடனே படக்குழுவினர் விரைந்து கேரவனை திறந்து பூனைகளை விரட்டியுள்ளனர்

சனி, 29 செப்டம்பர், 2012

கோலிவுட்’ன் அழகு பதுமை அமலா பால்’ன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்





       

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

வைரமுத்து வின் மூன்றாம் உலக போர் { காணொளி}

28.09.2012.By.Rajah.

வீரபாண்டிய கட்டபொம்மனை ரீமேக் பண்ணுகிறார் மணிரத்னம்!!!!!






28.09.2012.By.Rajah.தலைப்பை பார்த்துவிட்டு புது மேட்டரா இருக்கே என படிக்க வந்த அனைவருக்கும் வணக்கம்! ஒரு நகைச்சுவை (கற்பனை) பதிவை போடலாம்னு கழிவறையில் உட்கார்ந்து கன நேரம் யோசிச்சபோ கிடைத்த தலைப்பு தான் இது
.
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த எழுத வில்லை! அதையும் மீறி புண் படுத்தி இருந்தால் தயை கூர்ந்து மன்னித்தருள்க!

சரி நாம மேட்டருக்கு வருவோம்! நம்ம மணி ரத்தினம் சார் வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்த ரீமேக் பண்ணி வசனம் எழுதி இருந்தார்னா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை!!!!


இடம்: ஒரு அருவி அருகில் அரண்மனை ! ( மணிரத்னம் படம்ல அருவி கண்டிப்பா இருக்கணும்)
நேரம் : இரவு (மேல சொன்ன அதே மணி ரத்னம் தான் காரணம் )

( நம்ம தமிழ் படத்துல தான் இங்கிலீஷ் காரன் கூட தமிழ் பேசுவான் அதனால லாஜிக்லாம் பாக்க கூடாது வசனம் தான் முக்கியம் )
காட்சி- 1
ஜாக்சன் :- ஜாக்சன் !
வீர பாண்டிய கட்ட பொம்மன்: பொம்மன் ! வீர பாண்டிய கட்ட பொம்மன் !! (மீசையை முறுக்கி கொண்டே )
பெயரின் நீளம் கருதி இனி ஜாக்சன் , ஜாக் எனவும் வீரபாண்டிய கட்ட பொம்மன் .வீரா வாகவும் !!



ஜாக்: குடுக்கணும் !
வீரா : என்ன ?!
ஜாக்: வரி,வட்டி,கிஸ்தி!
வீரா: முடியாது!?
ஜாக்: குடுக்க வைப்பேன்

வீரா: மிரட்டுறீங்களா கலெக்டர் சார், இது வீரா சார், வீராப்பு காட்டாதீங்க! , வீணா போய்டுவீங்க!
ஜாக் : நிறுத்து உன் பேச்சை !
வீரா : முதல்ல நீ நிறுத்து! நான் நிறுத்துறேன் !!
ஜாக்: எதை நிறுத்தனும் ?
வீரா: ஒங்க ஊரு பொருள விக்கிறதுக்கு வந்த நீ!, எங்ககிட்டயே வரி வாங்குறியே அத நிறுத்து ! நான் நிறுத்துறேன் !

எங்க ஆளுங்கள கைக்குள்ள போட்டுக்கிட்டு எங்களையே காட்டி குடுக்க சொல்ற பார்! அத நிறுத்து! நான் நிறுத்துறேன் !

நீ காசு குடுத்ததும் பல்ல காட்டிகிட்டு எங்கள காட்டி குடுக்குறான் பார் ஒரு கம்மிநாட்டி அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் !



அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன்!!!!


(வில்லன் வாய்ஸ் கொடுப்பது நம்ம கெளதம் -எப்பவும் அவர்தானே வில்லனுக்கு வாய்ஸ் கொடுப்பாரு )


ஜாக்சன் ( தனது கூட்டாளிகளுடன் ) : நாம எங்க போனாலும் -----தா அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும் ! அந்த ஊரை நாம ஆளனும்!
அந்த பாண்டியன் ரொம்ப பிரச்சினை பண்றான் ! தூக்கிருங்க ! என்று சொல்லி கொண்டிருக்கும்போதே!

தூரத்தில் கோட்டையின் கதவுகளை உடைத்து கொண்டு வீர பாண்டியன் எனும் பாண்டியன் வருகிறார்!

பாண்டியன்:- இந்த பாண்டியன் ரொம்ப பிரச்சினை பண்றான் ! கிஸ்தி! வரி ! வட்டி எதுவும் தரமட்டிகிறான், அவன் கண்ண எடுத்துட்டு வந்தா எதோ ஐம்பது பொன் காசு தாரேன்னு சொன்னியாமே ! வா ! என் கண்ண பொட்டயாக்கு ! என தனது இமைகளை கைகளால் விரித்து கண்களை காட்டுகிறார்

ஜாக்சன்: வேணாம் பாண்டியன் என்னபத்தி உனக்கு தெரியாது !?

பாண்டியன் : நீ யாருன்னும் தெரியும் ! ஒங்க அம்மா இங்க எப்படி வந்தாங்க அப்படின்னும் தெரியும்டா!

அந்த நேரத்தில் பின்னணி பாடலுடன் ஒரு சண்டை காட்சி!

என்ன பாக்குறீங்க ! படம் முடிஞ்சு போச்சு ! ஒரே காட்சியில ரெண்டு படம் பாத்த மாதிரி இருந்துச்சா ! அப்புறம் என்ன ! பதிவு எப்படி இருக்கிறது என மறக்காமல் கமெண்ட் போட்டுட்டு கெளம்புங்க !!!

யார் நடிகன் ? யார் கதாநாயகன்!

 



28.09.2012.By.Rajah.வணக்கம் நண்பர்களே !
என்னுடைய முந்தைய பதிவான புரியாத பாடல்வரிகளும் ! அதன் அர்த்தங்களும் ! பதிவு அனைவருக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.நிறைய பேர் பாராட்டி எழுதி இருந்தனர்.அனைவருக்கும் நன்றி !


அண்மை காலமாக திரை உலகில் நான் அடிக்கடி கேள்விப்படும் ஒரு நிகழ்வு.அதாவது ஒரு பெரிய இயக்குனரும்,பெரிய நடிகரும் இணைந்து ஒரு படம் பண்ண ஒப்புகொண்டு பின்னர் அதை கைவிடுவது! காரணம் கேட்டால், அந்த பெரிய நடிகர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிடுவார்.அது என்னவெனில்" இந்த கதை எனக்கு பொருந்தாது" "என்னுடைய ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்" என்று கூறுவார். இதை பற்றிய ஒரு சிறு அலசல் இந்த பதிவு.



               எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் கதையின் கருவை உள் வாங்கி கொண்டு,கதைக்கு பொருந்தி, அதற்கேற்றாற்போல் தம்மை மெருகேற்றி நடிக்க கூடியவர்தான் கதையின் நாயகன் ! ஆனால் இன்று கதா நாயகன் வெறும் நாயகனாக மட்டுமே நமக்கு தோற்றமளிக்கிறார். அன்றைய காலத்தில் நடிகர் திலகம் திரு .சிவாஜி அவர்கள் கதைக்காக மட்டுமே நடித்தார். அவர் அவ்வாறு நடிக்கவில்லை எனில் ஒரு வீரபாண்டிய கட்டபோம்மனையோ, கப்பலோட்டிய தமிழனயோ , கர்ணனயோ நாம் அவர் உருவில் கண்டிருக்க முடியாது !

ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ,பொது மக்களின் எதிர்பார்ப்பும் !

என்னதான் மக்களுக்காக நடித்தாலும் ரசிகர்கள்தான் தியேட்டருக்கு முதல் நாளில் வந்து எங்களை வாழ்த்துகிறார்கள் ! படம் வெளியிடும் முதல் நாள் வேலையை விட்டு விட்டு விடிய விடிய உழைக்கிறார்கள் அதனால் அவர்களின் ரசனைக்குத்தான் படம் எடுக்க முடியும் என்று கூறலாம் ! ஒரு ரசிகன் எதனால் ஒரு நடிகருக்கு ரசிகராகிறான் ! அந்த நடிகரானவர் ஏதோ ஒரு வகையில் அந்த ரசிகனை ஈர்க்கிறார்! உடனே அந்த நடிகர் மீது பற்று உண்டாகிறது.அவ்வளவுதான் அடுத்து வரும் படங்களில் அந்த நடிகர் நடித்தாலும் சரி! இல்லை என்றாலும் சரி! ஆனால் ஒரு சாதாரண , நடுநிலையான ஒருவர் படத்தில் நடிகரின் நடிப்பையோ , அவர் செய்யும் சாகச காட்சிகளையோ மட்டும் விரும்புவதில்லை மாறாக படத்தின் அத்தனை அம்சங்களையும் விரும்புவார் ! பிடித்திருந்தால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிந்துரை செய்வார்! இவ்வாறு பரிந்துரை செய்த படங்கள் தான் நூறு நாட்களுக்கு ஓடுகிறது!

கதைக்காக நடித்ததால்தான் சிவாஜிக்கு இன்றளவும் நமது தாத்தா ,பாட்டி கூட ரசிகர்களாக இருக்கிறார்கள். மக்கள் அவருக்கு நடிகர் திலகம் என பட்டம் சூட்டினரே அன்றி யாரும் ரசிகர் திலகம் என்று பட்டம் கொடுக்கவில்லை! ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டத்துக்கு மட்டும் நடிப்பேன் என்று சொன்னால் அந்த நடிகரை மக்கள் மறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை

அப்பாவும் நானும்! தொடர்பதிவு-1!

 





  
                     28.09.2012.By.Rajah வணக்கம் நண்பர்களே!ஒவ்வொருவருக்கும் தனது முதல் ரோல் மாடல் தனது தந்தைதான் என்று சொன்னால் அது மிகை ஆகாது! எனக்கும் அதுபோலத்தான். என் தந்தைக்கும் எனக்கும் இடையில் நடந்த சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
அரசாங்க பணியில் விருப்ப ஒய்வு வாங்கிவிட்டு சொந்தமாக தொழில் செய்வதற்காக சென்னையில் சிறிய மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார். வருமானம் சொல்லும் படியாக இல்லை . விடுமுறை தினங்ளில் அடிக்கடி கடைக்கு சென்று வருவேன். ஒரு நாள், தந்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது நான் கடையை பார்த்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு வாடிக்கையாளர், தம்பி! க்ளோசப் பேஸ்ட் ஒன்னு கொடு! என கேட்டார், நான் தேடி பார்த்துவிட்டு,க்ளோசப் இல்லைங்க! என்றேன். உடனே அப்பா உள்ளிருந்து சார் கோல்கேட் தரட்டுமா? என்றார்! வாடிக்கையாளரும் சரி என வாங்கி சென்றார். உடனே என் தந்தை என்னை பார்த்து வியாபாரம் எப்படி செய்யனும்னு கத்துக்க! கெடுக்காத என்றார், அசிங்கமாக போய் விட்டது எனக்கு! எப்படியாவது தந்தையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என உறுதி எடுத்துகொண்டேன். சற்று நேரத்தில் இன்னொரு வாடிக்கையாளர், தம்பி ! வாழைப்பழம் இருக்கா? என கேட்டார். அப்போதுதான் விற்று தீர்ந்தது வாழைப்பழம். ஆனாலும் என் தந்தையிடம் நல்ல பெயர் வாங்கும் ஆர்வத்தில் , சார் பேரீச்சம்பழம் இருக்கு தரட்டுமா? என்றேன். வாடிக்கையாளரும் அப்பாவும் என்னை பார்த்து சிரித்தனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா முதல் முதலாக சபரிமலைக்கு மாலை போட்டார்! எங்கள் வீட்டில் அதிக சந்தோஷம் எனக்குத்தான். காரணம். மாலை போட்டால் அப்பா அடிக்கமாட்டார், திட்டமாட்டார் என அம்மா சொன்னார்! அது போலவே அப்பாவும் என்னை வாங்க சாமி,போங்க சாமி என்றார். ஒரு நாள் மொத்த வியாபாரம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு கடை திரும்பினேன். என் போதாத நேரம் , ஒரு பொருள் மிஸ்ஸிங். சரி அப்பாதான் மாலை போட்டிருக்கிறாரே நம்மை திட்ட மாட்டார் என சந்தோஷமாக இருந்தேன். இடிவிழுந்தது அந்த எண்ணத்தில், அட புறம்போக்கு சாமி! எருமமாடு சாமி ! உனக்கு அறிவு இருக்கா சாமி! என மரியாதையோடு திட்ட ஆரம்பித்தார்! கொடுமைடா சாமி என நானே நொந்துகொண்டேன் !

இளையதளபதியின் “துப்பாக்கி” பெயரில் மாற்றம் இல்லை ??

 

 
27.09.2012.By.Rajah.பல நாட்களாக நீடித்து வரும் பெயர் சிக்கலில் உள்ள படம் , இளைய தளபதியின் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உள்ள “துப்பாக்கி”. இதின் தலைப்புக்காக நீதிமன்றம் சென்றனர் படக்குழுவினர். பலதடவை வாய்தா வாங்கி,வாங்கி சோர்ந்துபோயினர் படக்குழுவினர்.
இந்நிலையில் படத்தின் தலைப்புக்கு “சரவெடி” அல்லது “மும்பை தமிழன்” பெயர்கள் மாறலாம் என்று அரசால் புரசலாக செய்திகள் வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் தலைப்பு வழக்கு தள்ளிப் போய்கொண்டு இருந்தது. படத்தின் ட்ரைலர் கூட வெளியிட முடியாமல் தினறிக்கொண்டு இருந்தனர் குழுவினர். இளைய தளபதியின் ரசிகர்கள் இந்த படத்தை பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் ஒன்றில் கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி , துப்பாக்கி அதே தலைப்புடன் வெளி வரும் , அதற்க்கான முழு முயற்ச்சியில் இயக்குனரும், இளையதளபதியும் ஈடுபட்டுள்ளனர் , இளைய தளபதி ரசிகர்கள் கவலயடைய வேண்டாம் என்று கூறியிருக்கிறார். எது எப்படியோ, பெயர் மாற்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரசிகர்கள் “இளைய தளபதியை” கொண்டாடுவார்கள், படமும் பெரும் வெற்றியடையும்

வியாழன், 27 செப்டம்பர், 2012

கர்ப்பமாக கூடாதா? பட வாய்ப்பை ஏற்க மறுத்த கரீனா

27.09.2012.By.Rajah.பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி எடுக்கும் படமான ராம் லீலாவில் நடிக்க பல நடிகைகள் விருப்பம் தெரிவித்தபோதிலும் அவர் கரீனா கபூரை ஒப்பந்தம் செய்யவே விரும்பினார்.
பன்சாலி படத்தில் நடிப்பது என்பது பல இந்தி நடிகைகளின் கனவாகும்.
எனவே, இந்த வாய்ப்பு தன்னைத் தேடி வந்ததில் கரீனா மகிழ்ச்சியாக இருந்தார்.
இந்நிலையில் கரீனா தனக்கும், சைப் அலி கானுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்ற அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தார்.
உடனே பன்சாலி தனது படம் முடியும் வரை கர்ப்பமாகக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார்.
அவரது நிபந்தனையை ஏற்க மறுத்ததால் கரீனா இந்த பட வாய்ப்பை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக மாதுர் பண்டர்கரின் ஹீரோயின் படத்தில் ஒப்பந்தமான பின்பு ஐஸ்வர்யா ராய் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார்.
அதன் பின்பு இயக்குனர் இறுதியில் கரீனாவை வைத்து படத்தை எடுத்து ரிலீஸும் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

முதலிடத்தை பிடிக்க தயாராகும் அமலாபால்

27.09.2012.By.Rajah.மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த ரன் பேபி ரன் வெற்றிக்குப் பின்பு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அமலாபால்.
தற்போது ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் படத்தில் நடித்து வரும் அமலாபால் தமிழில் எப்படியாவது நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்.
அனுஷ்கா தெலுங்கில் அக்கறை காட்டி வருகிறார், நயன்தாராவுக்கு தமிழ் படங்களில் ஆர்வம் இல்லை. காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் இந்தி படங்களின் பக்கம் கவனம் செலுத்துகிறார்கள். த்ரிஷா கல்யாண மூடில் இருக்கிறார்.
எனவே தமிழில் நம்பர் ஒன் நடிகை என்ற தற்போதைக்கு யாரையும் குறிப்பிட முடியாது அந்த இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்கத்தான் அமலாபால் முயற்சி செய்து இருக்கிறார்.
தற்போது அவருக்கு இருக்கும் ஒரே போட்டியாளர் ஹன்சிகா மட்டுமே அவருக்கு வடக்கத்திய முகசாயல் இருப்பதால் எல்லா கதாபாத்திரத்துக்கும் அவர் பொருந்த மாட்டார்.
ஆனால் அமலாபாலுக்கு உள்ளூர் முகம், கவர்ச்சி, நடிப்பு என எல்லாமே இருப்பதால் எளிதில் நம்பர் 1 இடத்தை பிடித்து விடுவார் என்று சொல்கிறார்கள்.
நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் விஜய் இயக்க இருக்கும் புது படத்தில் அமலாபால்தான் கதாநாயகி என்று இப்போதே பேச்சு இருக்கிறது.
மொத்தத்தில் நம்பர் 1 இடத்தை பிடிப்பதில் உறுதியாக இருக்கிறார் அமலாபால்

ஒக்ரோபர் 12ல் திரைக்கு வரும் மாற்றான்


27.09.2012.By.Rajah.சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்த 'மாற்றான்', ஒக்ரோபர் 12ம் திகதி திரைக்கு வருகின்றது.
ஐரோப்பியா, ரஷ்யா நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள மாற்றானின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் தியேட்டர்கள் ஒப்பந்தத்தை படு ஜோராக நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்தையும் இயக்குனர் கே.வி முடித்து விட்டார்.
ஒரு சில மாற்றங்களுடன் க்ளைமேக்ஸ் காட்சி மட்டுமே தற்போது நடைபெற்று வருகின்றன.
மாற்றான் படத்தின் கால அளவு 168 நிமிடங்களாம். படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து, சென்சாருக்கு செப்டம்பர் 28ம் திகதி அல்லது ஒக்ரோபர் 1ம் திகதி அனுப்ப இருக்கிறார்கள்.
ஏற்கனவே திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால் ஒக்ரோபர் 12ம் திகதி 'மாற்றான்' திரைக்கு வருகின்றது.
'மாற்றான்' படத்தின் தமிழ் டப்பிங், தெலுங்கு டப்பிங் என தான் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் சூர்யா முடித்துக் கொடுத்து விட்டார்

இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல்

27.09.2012.By.Rajah.மனம் கொத்தி பறவை கொமெடி படத்துக்கு பின்பு, விமல் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குனர் எழில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலிவுட்டில் 'கூத்து', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' மற்றும் 'மூன்று பேர் மூன்று காதல்' படங்களில் நடித்து வருகிறார் விமல்.
தற்போது மனம் கொத்தி பறவை படத்தை இயக்கிய எழில் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளார்.
இந்தப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார். முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள்.
எதிர் வரும் ஓக்ரோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டின் இறுதியில் முடிவடைய இருப்பதாக கூறுகிறார்கள்.
கொமெடி கலாட்டா படமாக எடுக்க இயக்குனர் எழில் திட்டமிட்டுள்ளார் என்கிறது பட வட்டாரம்

கந்தகோட்டை பட இயக்குனரின் அடுத்த படம் “ஈகோ”

27.09.2012.By.Rajah.நகுல், பூர்ணா, சந்தானம் நடித்த கந்தகோட்டை படத்தை இயக்கிய சக்திவேல் “ஈகோ” என்னும் பெயரில் புதிய படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் வேலு என்னும் புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் அமெரிக்காவில் பொறியியல் படித்தவர்.
நாயகியாக அனஸ்வரா நடிக்கிறார். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் புகழ் பெற்ற பாலா கொமெடி வேடத்தில் நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் சக்திவேல் கூறுகையில், அழகான பொய்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களால் உண்டான நட்பு, காதல், வெறுப்பு மற்றும் ஈகோ நாயகன் நாயகி வாழ்கையை புரட்டி போடுகின்றன.
அதன் பின்பு அவர்கள் வாழ்க்கையில் என்ன ஆகிறது என்பது தான் கதை.
இந்த கதையை நகைச்சுவையோடு கலகலப்பாக எல்லா தரப்பினரும் ரசிக்கும் படி சொல்லியிருகிறோம் என்று கூறியுள்ளார்.
முதல் கட்ட படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்ட படபிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்றது.
பாடல்கள் நியூசிலாந்தில் படமாக்கப்பட்டன. இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் திரைக்கு வருகிற‌து இந்த ப‌டம் என்கிறது படக்குழு.

நடிகை மீது நடன இயக்குனர் பரபரப்பு புகார்

27.09.2012.By.Rajah.கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடனம் ஆட மறுத்து, தகராறு செய்தார் என்று நடிகை ஆண்டிரிட்டா ராய் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார் நடன இயக்குனர்.
கன்னடத்தில் உருவாகும் படம் ரஜினி காந்தா. இப்படத்தில் துன்யா விஜய் நாயகனாகவும், ஆண்டிரிட்டா ராய் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இவர் மீது நடன இயக்குனர் இம்ரான் சர்தார்யா புகார் கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, நயன்தாரா, திவ்யா, பிரியாமணி, ராதிகா பண்டிட், பாவனா என பல கதாநாயகிகளுடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்கள் தொழிலுக்கு முரண்பட்டு நடந்தது கிடையாது.
தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா இரண்டையும் பிரித்து கையாண்டார்கள். படத்தை பொறுத்தவரை தங்கள் திறமையை வெளிப்படுத்த கடினமாக உழைப்பார்கள்.
ரஜினி காந்தா படத்திற்கான நடன காட்சிகளை முடிக்க எனக்கு குறைந்த கால அவகாசமே தரப்பட்டது. ஆனால் அதை ஆண்டிரிட்டா புரிந்து கொள்ளவில்லை.
கதாநாயகனுடன் நெருக்கமான இருக்கும் படி நடிக்க சொன்னால் பிரச்னை செய்வார். இரவு நேர பார்ட்டிகளில் கலந்துகொண்டுவிட்டு பகலில் படப்பிடிப்புக்கு வரும்போது தூக்க கலக்கத்துடனே வருவார்.
மேக்கப் போட்டு மறைத்தாலும் அதை மறைக்க முடியாது. ஆண்டிரிட்டாவை நடனம் ஆட வைப்பதற்குள் நரக வேதனை அனுபவித்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஆண்டிரிட்டா ராய் கூறுகையில், தேவையில்லாத காரணங்களை வைத்துக்கொண்டு என் மீது இம்ரான் குற்றம் சாட்டுகிறார். அவர் சொல்வதற்கு ஆதாரம் கிடையாது.
என் மீது இவ்வளவு புகார் சொல்பவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பே படப்பிடிப்பு நடந்த போது ஏன் சொல்லவில்லை. ஆதாரமற்ற புகார் சொல்ல அவர் ஏன் 2 மாதம் காத்திருந்தார் என்று தெரியவில்லை என்றார்.

அக்ஷய்குமாருக்கு பெண் குழந்தை பிறந்தது

27.09.2012.By.Rajahபாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் அக்ஷய் குமாருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
அக்ஷய்குமார் மனைவி டுவிங்கிள் கண்ணா, முன்னாள் கதாநாயகி டிம்பிள் கபாடியாவின் மகள் ஆவார்.
கர்ப்பமாக இருந்த மனைவி டுவிங்கிளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த அக்ஷய் தனது ஓ மை காட் படப்பிடிப்பை இரத்து செய்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
அப்போது டுவிங்கிளுக்கு பெண் குழந்தை பிறந்தது.
அக்ஷய் கூறும் போது என் சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.
வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் நன்றி. எனது மனைவி டுவிங்கிள் கண்ணா போல் இருக்கிறார் என்றார்

சத்யராஜ் மகள் ஆவணப் படத்தில் அறிமுகம்

27.09.2012.By.Rajah.சமூகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதன்முறையாக ஆவணப் படமொன்றில் நடித்துள்ளார்.
சத்யராஜின் மூத்த மகன் சிபிராஜ், ஏற்கனவே லீ, நாணயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் சிபிராஜின் படங்கள் இன்னும் வரவேற்பை பெற வில்லை.
இந்நிலையில் சத்ய ராஜின் மகள் திவ்யா முதன்முறையாக ஆவணப்படமொன்றில் அறிமுகமாகி நடித்துள்ளார்.
இப்படத்தைப் பார்த்த சிபிராஜ், திவ்யாவின் நடிப்பை பாராட்டினாராம். மேலும் இப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தை கொல்கத்தாவை சேர்ந்த சிர்ஷாய் என்பவர் இயக்கி உள்ளார்.
இந்த வேடத்தில் நடிக்க முதலில் கங்கானா ரனாவத்தை அணுகினார். ஆனால் இவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் திவ்யாவை நடிக்க வைத்தனர்

புதன், 26 செப்டம்பர், 2012

கவர்ச்சியும் சினிமாவில் ஒரு அங்கம்.. நான் கவர்ச்சிக்கு ரெடி!- ஸ்வாதி

26,09,20120.By.Rajah.சினிமாவில் கவர்ச்சியும் ஒரு அங்கமாகிவிட்டது. எனவே நானும் அந்த மாதிரி வேடங்களில் நடிக்கத் தயார் என்று சுப்பிரமணியபுரம் பட நாயகி ஸ்வாதி கூறியுள்ளார்.
�சுப்பிரமணியபுரம்', 'போராளி' படங்களில் நடித்தவர் ஸ்வாதி. தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக உள்ளார்.
குடும்பப்பாங்கான கேரக்டர்களை மட்டுமே ஸ்வாதி செய்து வருகிறார். இதனால் கதாநாயகியே குத்தாட்டம் ஆட வேண்டிய கட்டாயம் உள்ள தமிழில் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.
தன் வாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு செல்வதால், தானும் கவர்ச்சி களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கவர்ச்சி என்பது சினிமாவில் ஒரு அங்கமாகி விட்டது. எனவே நானும் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளேன். இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுப்பிரமணியபுரம் வந்து இத்தனை ஆண்டுகளில் நான் இரண்டு தமிழ்ப் படங்கள்தான் செய்தேன். எனக்கான வாய்ப்புகள் நிச்சயம் வரும்," என்றார்

காதலா ? காமமா ? அதையும் தாண்டியதா ?

26,09.2012,By,Rajah.காதல் என்ற வார்த்தை எத்தனையோ இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இடம், பொருளைப் பொருத்துதான் அது புனிதத்துவம் பெறுகிறது. பதின் பருவத்தில் வரும் காதல் இனக்கவர்ச்சி என்றும், படித்து முடித்து கைநிறைய சம்பாதிக்கும் போது வருவதுதான் உண்மைக் காதல் என்றும் திருமணத்திற்குப் பின்னர் வேறொருவடன் ஏற்படுவதை கள்ளக்காதல் என்றும் சொல்கின்றனர். ஆனால் காதல் என்பது அன்புரீதியானதா? உணர்வுகளை மட்டுமே அதை புரியவைக்க முடியுமா? எதுவும் எதிர்ப்பார்த்து வருகிறதா? என்றால் எவராலும் புரியவைக்க முடியவில்லை. காதலோ, காமமோ எதுவென்றாலும் ஹார்மோன்கள் செய்யும் மாயம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

பட்டாம்பூச்சி பறக்கும்

காதல் என்பதை மனதில் தோன்றுகின்ற உணர்வுகளில் மிகத் தூய்மையானது என்கிறார் ஜான் ட்ரைடன். அந்த பெண்ணை நினைச்சாலே பறக்கிற மாதிரி இருக்கு. வயிற்றில பட்டாம்பூச்சி பறக்குது என்கின்றனர் சிலர். அதேபோலதான் பெண்களுக்கும், காதல் வந்தலே தூக்கம் தவறிப்போகும். உணவு ருசிக்காது. ஆனால் காதலுக்கும், காமத்திற்கும் நூழிலைதான் வித்தியாசம் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள் சற்று பிசகினாலும் காதல், காமத்திற்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது.

என்ன வித்தியாசம் ?

வாழ்வு, காதலால் நிரம்பியிருக்கிறது. அதன் முடிவடையாத தொடர்ச்சிக்கு காமம் தேவைப்படுகிறது. ஆனால், காதலுக்கும் , காமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார்கள். காதல் என்கிற உணர்வு மனதிலும், உடலிலும் உருவாக்குகிற தொடர்பு நிகழ்வுகளுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் வெளிவந்து விட்டன. காதலின் முதல் ஆரம்ப்புள்ளி 'லஸ்ட்', அடுத்த பால் மேடு மேற்படுத்துகிற காமத்துப்பால், கவர்ச்சி.

ஹார்மோன்களின் வேலை

ஆளு அழகா சூப்பரா இருக்காளே என்ற ரீதியில் பார்க்கத் தொடங்கி பிறை மாதிரி நெற்றி, குவளைக் கண், கூர்மையான மூக்கு என்று வர்ணிப்பதில் நிற்கும். இதற்குக் காரணம் உடலில் சுரக்கும் டெஸ்டரோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன்கள்.

மனிதர்கள் பிறந்ததிலிருந்தே உடலில் இருந்தாலும் பருவத்தில், நமக்குரிய பெண் / ஆணை பக்கத்தில் சந்திக்கும் போது தான் விழித்துக் கொள்கின்றன. அப்போது இதயத்தில் ஒரு மின்னல் வெட்டும், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சியும் பறக்கின்றனர். காதுக்குள் இளையராஜாவின் வயலின் இசை ரீங்காரமிடும்.

நீங்கள் சந்தித்த நபர் உங்களை விட்டு கடந்து போன பின்னும் உங்கள் மனம் அவரைச் சுற்றியே வரும். விஞ்ஞானிகள் இந்த நிலையை 'அட்ராக்ஷ்ன்' என்று வர்ணிக்கிறார்கள். காதல் அந்த இடத்தில் தடுக்கி நிற்கிறது. சிலருக்கு நொண்டி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ஏன் ஸ்ட்ரக்? தடை என்று சொல்கிறீர்கள்?

அந்தப் பெண்ணை பார்த்த்திலிருந்து சரியாகச் சாப்பிட முடியவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. பசி போச்சு, தூக்கம் போச்சு, படிப்பில் கவனம் போச்சு, எங்கேயோ பேய் அடித்த மாதிரி பார்க்க வேண்டியிருக்கிறது. உள்ளங்கை வேர்த்துப் போகிறது. ஒழுங்காக யோசிக்க கூட முடியவில்லை. இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று இதற்கும் பதில் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

காதல் ரசாயனங்கள்

நம் மூளையில் சுரக்கும் டோபமைன் என்ற ஹார்மோன்தான் இத்தகைய கிறுக்குத்தனங்களை செய்கிறது என்கின்றனர். இந்த காதல் ரசாயனம்தான் மனதிற்குள் மின்னலை வெட்டிக்கொண்டே இருக்கிறது. காதலிக்கும் நபரைப் பற்றிய சிந்தனைகளை தூண்டிவிடுகின்றனவாம். இந்த ரசாயனம் சாக்லெட்டிலும், ஸ்ட்ராபெரியிலும் இருக்கின்றன. சாக்லெட்டை காதலர்கள் உதட்டுக்கு உதடு மாற்றுவதற்குப் பின்னணியில் இந்தக் காரணம் தான் இருக்கிறது என்கிறார்கள். இந்த காதல் ரசாயனத்தை PEA என்கிற விஷயம்தான் கட்டுப்படுத்துகிறது. இதுதான் காமநிலையில் இருந்து காதல் நிலைக்கு மாற்றுகிறது. காதலிக்கும் பெண்ணின் முகம் திரும்ப திரும்ப வருகிறதா? அவளின் நினைவில் பைத்தியம் பிடித்துப் போகிறதா? மூளையில். PEA பிடித்து ஆட்டுகிறது.

பிரிக்க முடியாத நிலை

இந்த இரண்டு நிலைகளையும் தாண்டிய பிறகு வருவதுதான் 'அட்டாச்மெண்ட்' என்கிற மூன்றாவது நிலை. அதாவது நீ இல்லை என்றால் நான் இல்லை என்ற உயிரில் கலந்த உணர்வு நிலை. இந்த அட்டாச்மெண்ட் நிலைக்கு தள்ளுவது இரண்டு ஹார்மோன்கள் ஒன்று ஆக்ஸிடோஸின் என்பது மற்றொன்று வாஸோப்ரஸின். ஆக்ஸிடோஸின் காதலர்களுக்கு இடையிலான இணைப்பை உறுதி செய்கிறது. பலப்படுத்துகிறது. வாழ்நாள் முழுக்க ஒரு பந்தம் தொடர வைக்கிறது இல்லையா? அதை வாஸோப்ரஸின் செய்கிறது.

உண்மைக்காதல் உடல்ரீதியாக பார்க்காது உணர்வுரீதியாகத்தான் பார்க்கும். உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும். எதையும் எதிர்பார்க்காது. ஆனால் உடலை மட்டுமே பார்க்கும் காமநிலைக்குதான் அதிகம் எதிர்பார்ப்பு இருக்கும் ஒரு பொஸசிவ்னெஸ் இருக்கும். உங்களுடையது காதலா, காமமா? அதையும் தாண்டியதா?

என்னை கன்னடர்கள்தான் அதிகம் பார்த்து ரசிக்க வேண்டும்.. லட்சுமி ராய்

26.09.2012.By.Rajah.பெல்காம் பைங்கிளி லட்சுமி ராய் கை நிறையப் படங்களுடன் இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் கூட பயங்கர பிசியாகத்தான் இருக்கிறார். விக்ரமுடன் தாண்டவம் படத்தை முடித்துள்ள லட்சுமி ராய் இப்போது தாய் மொழியான கன்னடத்தில் 2 படங்களில் நடித்து வருகிறாராம். தன்னை மற்ற மொழி ரசிகர்களை விட கன்னடத்து ரசிகர்கள்தான் அதிகம் பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் மொழிப் பற்றுடன் பேசுகிறார் லட்சுமி.
லட்சுமி ராய் நடித்து வந்த படங்களை விட அவரை வைத்து வந்த வதந்திகள்தான் ஏகம். இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், தான் உண்டு, தனது வேலையுண்டு என்று பிசியாகத்தான் இருந்து வருகிறார் லட்சுமி.
கன்னடத்திலிருந்து ஆரம்பித்த அவரது திரை வாழ்க்கை இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எங்கெங்கோ போய் விட்டது. இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் அட்டகாசா மற்றும் கல்பனா ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார் லட்சுமி ராய்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கன்னடத்தில் நடிப்பதை எப்போதுமே வெறுத்ததில்லை. உண்மையில் இங்குதான் எனது வாழ்க்கை தொடங்கியது. மற்ற மொழி ரசிகர்களை விட கன்னட ரசிகர்கள்தான் என்னை அதிகம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றார் அவர்.
தமிழில் ஹிட்டடித்த காஞ்சனா படம்தான் கன்னடத்தில் கல்பனா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமிழில் நடித்த அதே வேடத்தில்தான் கல்பனாவிலும் லட்சுமி ராய் நடிக்கிறார்.
மேலும் லட்சுமி கூறுகையில், நான் நடிக்க வந்து 13 வருடங்களாகி விட்டது. இன்னும் அலுப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறேன்.இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. பாலிவுட்டுக்கும் போவேன். எனக்கு வயது இருப்பதால் அதற்கேற்ப கவர்ச்சியுடனும் நான் நடித்து வருகிறே

தமிழில் நடிக்கவிடாமல் எனக்கெதிராக பெரிய சதி நடக்கிறது! - தமன்னா பரபரப்பு புகார்

26.09.2012.By.Rajah.தமிழ்ப் படங்களில் என்னை நடிக்க விடாமல் செய்ய பெரிய சதி நடக்கிறது என்று நடிகை தமன்னா குற்றம்சாட்டியுள்ளார்.
'கேடி' படம் மூலம் 2005-ல் அறிமுகமானார் தமன்னா. அப்போது அவருக்கு வயது 16தான். முதல் படம் தோற்றாலும் அடுத்த படமான கல்லூரியில் அவர் தேர்ந்த நடிகையாக பிரபலமானார். அடுத்தடுத்து தனுஷ், பரத் ஜோடியாக நடித்தார். சூர்யா ஜோடியாக நடித்த "அயன்" படம் அவரை முதல் நிலை நாயகியாக்கியது.
2011-ல் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் வெற்றிப் படங்களின் நாயகியாகத் திகழ்ந்தார்.
கார்த்தியுடன் பையா. சிறுத்தை என இரு படங்களில் நடித்தார். ஆனால் திடீரென்று அவர் தமிழ்ப் படங்களில் நடிப்பதே நின்றுபோனது.
தெலுங்கில் மட்டும் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் தமன்னா, இப்போதும் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் ஹிம்மத் வாலா படத்தில் நடிக்கிறார்.
தமன்னாவுக்கு இந்தியில் மேலும் இரு படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. அதில் ஒன்று விஜயகாந்த் நடித்து தமிழில் ஹிட்டான ரமணாவின் ரீமேக்.
ஆனால் தமிழில் ஒரு படம் கூட இல்லை. தமிழ்ப்பட உலகினர் தன்னை ஒதுக்குவதாக நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். தமிழ்ப்பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்க விடாமல் யாரோ மறைமுகமாக சதி செய்வதாக தமன்னா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்பவே ஆசையாக உள்ளது. ஆனால் இது நிறைவேறுமா என்று தெரியவில்லை. எனக்கெதிராக அந்த அளவுக்கு சதி நடக்கிறது," என்றார்

சாட்டை

26.09.2012.By.Rajah.நடிகர்களின் பெயர்கள் போடும் பொழுதே அரசுப் பள்ளிகளின் மீது சாட்டையை வீச தொடங்கி விடுகிறார் அறிமுக இயக்குனர் அன்பழகன். லட்சிய ஆசிரியர் ஒருவர் அலட்சியமாக இயங்கும் அரசுப் பள்ளிக்குள் நுழைந்தால் என்னாகும் என்பது தான் படம்.

ஈசன் படத்தில் உதவி ஆணையாளர் சங்கைய்யா பாத்திரத்திற்கு சரியாக பொருந்தியது போலவே இப்படத்திலும் சமுத்திரக்கனி.. தயாளன் என்னும் ஆசிரியர் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். புகார் பெட்டி ஒன்று வைத்து மாணவர்களின் பிரச்சனைகளையும், எதிர்பார்ப்புகளையும் கேட்டறியும் உன்னத ஆசிரியராக வலம் வருகிறார். அமெரிக்கப் பள்ளியில் மாணவர்கள் தினம் 15 நிமிடம் தோப்புக்கரணம் போடுவதால் சுறுசுறுப்பாக இருக்கின்றனர் என கையில் வைத்திருக்கும் 'டேப்'பில் காண்பிக்கிறார். திக்கிப் பேசும் மாணவிக்கு 'டங் ட்விஸ்ட்டிங்' பயிற்சி அளிக்கிறார்.

இப்படி அவர் எது சொன்னாலும், செய்தாலும் ரசிக்க தயாராக உள்ளார் பள்ளி ஹெட்மாஸ்டராய் வரும் ஜூனியர் பாலய்யா. 22 வருட அனுபவத்தில் ஒன்றுமே சாதித்ததில்லை என சுய கழிவிரக்கம் கொள்ளும் இடத்தில் ஜூனியர் பாலய்யா அசத்தினாலும் போக போக சமுத்திரக்கனியின் சைலன்ட் ஜால்ராவாக ஆஃப் ஆகி விடுகிறார். சமுத்திரக்கனியைக் கண்டாலே வெறுக்கும் ஆசிஸ்டென்ட் ஹெச்.எம்.மாக தம்பி இராமைய்யா. வட்டிக்கு பணம் கொடுத்து, அந்தக் கணக்கை பள்ளி நோட்டீஸ் போர்ட்டிலேயே எழுதும் சர்வ அலட்சியம் மிக்க ஆசிரியர். மற்ற கதாபாத்திரங்கள் தரும் இயல்பான தாக்கத்தை தம்பி இராமைய்யாவின் சேஷ்டைகள் தரவில்லை. ஒருவேளை நகைச்சுவை என நினைத்து நடித்திருப்பாரோ என்னவோ!?

காதல் இல்லையேல் சாதல் என்பது தமிழ்ப்படங்களிற்கு பொருந்தும் போல. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பழனிமுத்துவிற்கும், அறிவழகிக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் வாத்தியாரின் பெயர் கெட்டுப் போக கூடாதென காதலை தியாகம் செய்கிறான் பழனி. தமிழ்நாட்டில் தியாக சீலர்களுக்கு பஞ்சமில்லை என புல்லரிப்பு ஏற்பட்டாலும், அந்த வயதில் தோன்றுவது காதல் இல்லை என 'தயாளு சார்' எடுத்து சொல்லவில்லை. மாறாக நான் எட்டாவது படிக்கும் பொழுதே ரவுடி என சாட்டையை அந்தப் பையன் மீது வீசுகிறார் சமுத்திரக்கனி.

பழனியாக நடித்திருக்கும் யுவனின் மூர்க்கம் அச்சத்தையே ஏற்படுத்துகிறது. காதலிப்பதால் தனக்கு நாயகன் அந்தஸ்து கிடைக்கிறது என்ற தவறான எண்ணத்திலேயே அலைகிறான். வரும் அத்தனை படங்களும் மாணவர்கள் யாரையேனும் காதலித்தே ஆக வேண்டும் என்பது போன்ற அழுத்தத்தை தருபவையாக உள்ளன. இந்தப் படமும் அதற்கொரு விதிவிலக்கில்லை என்பது மிக வருத்தத்தற்குரிய விடயம். மாணவிகளுக்கு வரும் காதல் கடிதங்கள் சகஜம் தான். பெற்றோர்கள் தான் பிள்ளைகள் மீது நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென பெற்றோர்களுக்கு அட்வைஸ் வேறு செய்கிறார். அழகான பள்ளி மாணவி அறிவழகியாக மகிமா. படிப்பு தான் எனக்கு முக்கியம் என காதலில் விழுந்து(!?) தொலைக்கிறார்.

100% தேர்ச்சி. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பேசப்படும் விடயம். தனியார் பள்ளிகளுக்குப் போட்டியாக தொடையைத் தட்டிக் கொண்டு அரசுப் பள்ளிகளும் இறங்கி விட்டன. இதனால் அரசுப் பள்ளிகளிலும் பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்புகளில் சரியாக படிக்க மாட்டார்கள் என கருதும் மாணவர்களை அனுமதிப்பதில்லை.

சமுத்திரக்கனி அடிப்பட்டு பாவம் மருத்துவமனையில் இருக்கார். ஆனால் பள்ளியின் வெற்றி 100% தேர்ச்சியில் தான் அடங்கியுள்ளது என வலியைப் பொருட்படுத்தாமல் கடமையை ஆற்ற வந்து விடுகிறார். என்ன இருந்தாலும் நாயகன் அல்லவா? போருக்கு தயாராவது போல் பாசறை எல்லாம் அமைத்து படிக்கின்றனர். குன்றின் மீது உச்சிப் பாறையில் அமர்ந்து படிக்கின்றனர். மெழுகுவர்த்தி கொண்டு இரவெல்லாம் படிக்கின்றனர். யாராவது தப்பித் தவறி ஃபெயிலாகி விட்டால், சமுத்திரக்கனியின் சார்பாக நாமே திரைக்குள் சென்று அந்த மாணவரை அடித்து துவைத்து விடுவோம் போல.

கல்வி இவ்ளோ சுமையா என பயம் கொள்ள வைக்கிறது. நல்ல குரு தோற்க கூடாது என மாணவர்கள் விழுந்து விழுந்து படிப்பது எல்லாம்.. ஏதோ படம் சுபமாய் முடிந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் பொதுவில் தேர்வு முடிவுகள் வாழ்வா, சாவா என்ற முடிவிற்கு தள்ளும் அளவு மாணவனை பாதிக்கிறது. சாட்டை பட வேண்டிய இடங்கள் நிறையவே மிச்சம் உள்ளன.

சில வக்கிரம் பிடித்த ஆசிரியர்களால் மாணவிகளுக்கு நிகழும் கலவியல் தொந்தரவுகளை, மாணவிகள் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். 'ரோட்டரி கிளப்' நடத்தும் போட்டிகளில் வெல்வதற்காக பேரம் பேசும் தனியார் பள்ளியின் கேவலமான வியாபார எண்ணத்தையும் இயக்குனர் பட்டும் படாமலும் சுட்டிக் காட்டியுள்ளார். படத்தை தயாரித்தவர் 'மைனா' பட இயக்குனர் பிரபு சாலமன். இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஆவதாலோ என்னமோ நல்ல படங்களும் ஒன்றிரண்டு வருவதும் போவதுமாய் உள்ளன

3 D’ யில் கலக்க வர்றாள் ‘காஞ்சனா’


    26.09.2012.ByRajah ராகவா லாரன்ஸ் இயக்கம் , நடிப்பில் 2011ம் ஆண்டு வெளிவந்த ‘காஞ்சனா’ திரைப்படம் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது இந்த படத்தை ‘3 டி’ தொழில்நுட்பத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற உள்ளன.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் அப்படத்தின் தயாரிப்பாளர் பெல்லம்கொன்டா சுரேஷ், இத் தகவலை உறுதி செய்தார். 3டி க்காக ராகவா லாரன்ஸ் புதிய பாடல் ஒன்றையும் சேர்க்க உள்ளதாகவும், இந்த 3டி தொழில்நுட்பம் மாற்றம் ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.
இது பற்றி ராகவலா லாரன்ஸ் தெரிவிக்கையில், “தற்போது நான் இயக்கியுள்ள ‘ரிபெல் ’ தெலுங்கு திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டு வேலையில் பிஸியாக இருப்பதால், காஞ்சனா பற்றிய தகவல்களை தற்போது தெரிவிக்க இயலாது, ஆனால் நாங்கள் காஞ்சனா படத்தை 3டி க்கு மாற்றி வெளியிட இருப்பது உண்மைதான்” என்றார்.
ஏவிஎம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப் படமான ‘சிவாஜி’ படமும் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவர தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தக்காளி… கவலைப்பட வச்ச தக்காளி..

 
26.09.2012.By.Rajah.தக்காளி தோட்டம் போட்டிருந்த ஒருத்தனுக்கு அசாத்திய கவலை. எல்லா தக்காளியும் அழுகி அழுகி போயிருதே. எல்லாத்தையும் வீட்ல வளர்த்த பண்ணிக்குட்டிக்குதானே போட வேண்டியிருக்கு. அழுகாம ஒரு காயை கூட எடுக்க முடியலையே. நஷ்டத்துக்கு மேல நஷ்டமால்ல இருக்குன்னு கடவுள்கிட்ட போய் வேண்டினானாம். அதிசயமா அடுத்த நாள்லயிருந்து ஒரு தக்காளியும் அழுகலையாம். கொள்ளை லாபமாம். ஆனாலும் அந்த பயபுள்ள கவலையோட இருந்தானாம். ஏன்னு கேட்டா அவன் வீட்டு பண்ணிக் குட்டிக்குப் போட ஒரு அழுகின தக்காளி கூட இல்லியாம். அத நினைச்சிதான் கவலையாம்.. இது ஒரு கத.

இன்று கல்லூரியில சின்ன சலசலப்பு. பரபரப்புடன் ஆசிரியைகள் அந்த வகுப்பை நோக்கி ஓடினார்கள். கும்பல் போவுதுன்னா என்ன ஏதுன்னு கேட்காம நாமளும் பின்னால போவோமில்ல. போய் கும்பலோடு எட்டிப் பார்த்தால் வகுப்பறையில் ஒரு மாணவி மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாள். பேச்சி மூச்சில்லாம. தண்ணி ர் தெளிச்சி பார்த்தாச்சி. அசைவே இல்ல. கன்னத்தை தட்டி பேரைச் சொல்லி கூப்பிட்டு பார்த்தாங்க. அசைச்சி பார்த்தாங்க.. பயனே இல்ல.. வாத்தியார் பயந்து போனார். இனி தாமதிக்க முடியாது. எல்லாருமா சேர்ந்து தூக்கி வண்டியில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தோம். [ நல்ல கனத்த உடம்பு] எல்லா பரிசோதனையும் முடிவதுவரை படபடப்போடு நகம் கடித்துக் கொண்டிருந்தோம். வீட்டில ஏதும் பிரச்சனையா, தீராத வியாதியா, தற்கொலை முயற்சியா.. என்னவெல்லாமோ நினைப்பு தோன்றி கலக்கமூட்டியது.…

டாக்டர் வந்து ஒரு பிரச்சனையுமில்ல. எந்த நோய்க்கான அறிகுறியுமில்லை. என்றார். ‘அப்பாடா’ என்றிருந்தது. பிறகு ஏன் மயங்கினாள்…. ரெண்டு நாளா சாப்பிடலையாம். அவ்வளவு வறுமையிலா இருந்தாள். ம்ஹும்.. பெருத்து போனாளாம். மெலியணுமாம். அதுக்குதான் இந்த உண்ணாவிரதம்..

மனுசனுக்கு கவலைபட என்னவெல்லாம்தான் விசயங்கள் இருக்கின்றன

ரகசியமாய் எடுத்த படங்கள்.


26.09.2012.By.Rahah.ஒரு திருமண வரவேற்பு நிகழ்சி. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே போய்விட்டேன்.
அப்போதான் இவுக வந்தாக

இடம் இதுதானான்னு விசாரிச்சு தெளிவு படுத்திக்கிட்டாக

வரவேற்பை பெருந்தன்மையா ஏத்துக்கிட்டாக.


அப்படியே போய் அவுக உட்கார்ந்த இடம்தான் இது.



அப்புறம் யாரையோ எதிர்பார்த்து ஏக்கத்தோடு எவ்வளவு நேரம்தான் காத்திருக்கிறது. [எப்போடா வருவ....? ]


[உயிரை பணயம் வைத்து (!) பின் தொடர்ந்து சென்று ரகசியமாய் கைபேசியில் இவ்வளவுதான் படம் எடுக்க முடிந்தது..]