கோடம்பாக்கம் மைனா’ அமலா பாலுக்கும், சொந்த குரலில் பேசும், ஆசை வந்து விட்டது. சமீபத்தில், அவர் நடித்த,’தலைவா’ படத்தில், முதல் முறையாக, சொந்த குரலில் பேசினார். இதைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழில், அவருக்கு போதிய அழைப்பு இல்லாததால், முழு வீச்சில், தன், தாய்மொழியான மலையாளத்தை நம்பி, கேரளா பக்கம் போய் விட்டார்.
அங்கு, அவரிடம்,’நேற்று வந்த நடிகைகள் எல்லாம், தேசிய, மாநில

அளவிலான விருதுகளை வாங்கி குவிக்கின்றனர். உங்களுக்கு அந்த ஆசையில்லையா’ என, சிலர், தூபம் போட்டுள்ளனர். இதனால், சமீபகாலமாக, அமலாவின் நடவடிக்கைகளில், மாற்றம் ஏற்பட்டுள்ளது. தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் மலையாள இயக்குனர்களிடம்,’படத்தில், சொந்த குரலில் தான் பேசுவேன்’ என, எடுத்த எடுப்பிலேயே, நிபந்தனை விதிக்கிறாராம். ‘அமலாவின் கண்களில் விருது வெறி தெரிகிறது.

இதனால், எப்படியும், அடுத்தாண்டுக்குள், விருது வாங்காமல் விட மாட்டார் போலிருக்கிறது’ என்கின்றனர், கேரள திரைப்படத் துறையினர்