வெள்ளி, 15 நவம்பர், 2013

ரஜினியின் கோச்சடையான் – அஜித், விஜய் படங்களுக்கு சிக்கல்


பொங்கலையொட்டி ஜனவரி 10 ஆம் தேதி கோச்சடையான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கலை குறி வைத்திருக்கும் வீரம், ஜில்லா படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும் நிலையில் 750 திரையரங்குகளே உள்ளன. முன்னணி நடிகரின் படம் வெளியானால் இரண்டாவது படத்தை வெளியிட திரையரங்குகள் கிடைப்பதில்லை. அதிலும் ரஜினி படம் வெளியாகிறது என்றால் மற்றப் படங்கள் சில வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

அஜித்தின் வீரம், விஜய்யின் ஜில்லா இரண்டும் 2014 பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தன. பொங்கல் புதன்கிழமை வருவதால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை – அதாவது 10 ஆம் தேதியே ஜில்லாவை வெளியிட திட்டமிட்டிருந்தனர். எல்லா திட்டமும் கோச்சடையானின் வரவால் தகர்ந்திருக்கிறது.

ரஜினி படம் வெளியானால் திரையரங்கு உரிமையாளர்கள் அதற்கே முன்னுரிமை தருவார்கள். மேலும் ஜனவரி 10 ஆம் தேதியே கோச்சடையானை வெளியிடுகின்றனர். வேறு படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினம். அதனால் அஜித், விஜய் படங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.
கோச்சடையான் வழக்கமான ரஜினி படமல்ல. அனிமேஷன் படம். அவதார், டின்டின்னுக்கு இணையாக என்று ஜல்லியடித்தாலும் படத்தின் குவாலிட்டி கார்ட்டூன் படம் பார்ப்பது போலதான் உள்ளது.

 ரஜினியின் பிற படங்களை ரசிப்பது போல் இதனை ரசிகர்கள் ரசித்து ஏற்றுக் கொள்வார்களா என்பது முக்கியமான கேள்வி. அதேநேரம், அவதார் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் படத்தைப் பார்க்க ரசிகர்களை தாண்டி பொதுமக்களுக்கும் ஆவல் உள்ளது.
இந்த ஆர்வம்தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கப் போகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக