ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜூம், பின்னணி இசையை அனிருத்தும் அமைத்திருக்கிறார்கள். இப்படம் வரும் 22-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில், இப்படத்திற்கு தற்போது அனிருத் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இரண்டு பாடல்களில் ஒரு பாடலை இவர் மட்டும் பாடியுள்ளார். மற்றொரு பாடலை சின்மயி உடன் இணைந்து பாடியுள்ளார்.
தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வரும் அனிருத் இப்படத்தில் பின்னணி இசையை மட்டும் கவனிப்பார்
என்ற ரீதியிலேயே முதலில் ஒப்பந்தமானார். இந்நிலையில், அனிருத் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருப்பது இப்படத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக