சனி, 16 நவம்பர், 2013

கவர்ச்சி நடிகையின் உதட்டைக் கடித்த கஞ்சா கருப்பு!


வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தில் தன்னோடு குத்தாட்டம் போட்ட கவர்ச்சி நடிகை ரகசியாவின் உதட்டைக் கடித்துவிட்டாராம் கஞ்சா கருப்பு.
கே.கே. பிலிம் இண்டர் நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாராகும் படம் வேல்முருகன் போர்வெல்ஸ். இதன் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ கஞ்சா கருப்புதான்.
அங்காடித் தெரு மகேஷ்
 இன்னொரு நாயகனாக அங்காடி தெரு மகேஷ் நடிக்கிறார். வடிவேலுவுடன் நடித்த அனைத்து காமெடி நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி எம்.பி.கோபி இயக்குகிறார். இவர் மலையன் படத்தை இயக்கியவர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
போர்வெல் ஓனர்
 கிராமம் கிராமமாக போய் போர்வெல் போட்டு பிழைப்பு நடத்துபவர்களை பற்றிய கதை. போர்வெல் உரிமையாளராக வருகிறார் கஞ்சா கருப்பு.
ரகசியா ஜோடி
 சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு போரூர் கார்டனில் நடந்தது. கஞ்சா கருப்பு-ரகசியா புது திருமண தம்பதி. கஞ்சா கருப்பு போர் போடும் தொழில் செய்பவர் என்பதால் தனது மனைவியை பிரிந்து நண்பர்களுடன் வெளியூருக்கு போர் போட சென்றுவிடுகிறார். இப்படி பல நாட்கள் கழித்து வீடு திரும்பும் அவரை, ரகசியா அரவணைத்து வரவேற்பது போன்று காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
உதட்டைக் கடித்தார்
 இந்த காட்சியில் கஞ்சா கருப்பு நடித்த போது உணர்ச்சிவசப்பட்டு திடீரென ரகசியாவின் உதட்டை கடித்து விட்டாராம். இதில் கடும் கோபமடைந்தாராம் ரகசியா.

படப்பிடிப்புக்கு வர மறுப்பு
 கஞ்சா கருப்பை அவர் ஸ்பாட்டிலேயே திட்டியதோடு படப்பிடிப்புக்கும் வர மறுத்துவிட்டாராம். அதன் பிறகு இயக்குனர் கோபியும் படப்பிடிப்பு குழுவினரும் சமாதானம் செய்து ரகசியாவை நடிக்க வைத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக