செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஈழத்து முதல் பெண் இசையமைப்பாளர் பிரபாளினி!


எமது ஈழத்து முதல் பெண் இசையமைப்பாளராகத் திகழும் எம்.பி. பிரபாளினியின் இசையில் வெளியாகியுள்ள பாடலை
 இங்கே தருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
எமது கலைஞர்களின் ஆக்கங்களை முன்நிலைப்படுத்தும் நோக்கத்தில் இன்று இவர் பாடல் இணைப்பதையிட்டு மிக மிக மகிழ்ச்சியடைகிறோம் ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தாலும்
 எம் மண்ணின் கலை விழுமியங்களைக் காக்கும் இளம் தலைமுறையைச் சேர்ந்த பிரபாளினி அவர்கள் இசையமைப்பதோடு நின்று விடாமல் பாடல் எழுதும் திறனும் உள்ளவர்.
அதுமட்டுமல்லாமல் அவர் குரல் கூட இனிமையானது என்பதை இந்தப்பாடல் மூலம் அறியக் கூடியதாக இருக்கும் அத்தோடு கலைத் தாகம் உள்ள இளம் கலைஞர் இவர் வரலாறு எழுத நாள் போதாது இவர் தந்தை வரலாறை ஈழ தேசம் மறவாது முதல் முதல் இசைத்தட்டை தமிழில் தங்கள் சொந்த ஆக்கத்தில் வந்த பாடலை இசைத் தட்டாக வெளியிட்டு வெற்றி கண்டவர்.
அவர் வேறு யாருமல்ல எம்.பி பரமேஸ் அவர்கள். இவரது தாயார் கூட கலை மாமணிப்பட்டம் பெற்றவர் மட்டுமல்ல ஈழத்தில் எம்.பி பரமேஸ் அவர்களுடன் இணைந்து பட்டி தொட்டியெல்லாம் பாடி மக்களை இசைப் பரவசத்தில் ஆழ்தியவர் ஈழவர் ஆக்கத்துக்கு முன் உதாரனமானவர்கள் இவர்கள் வரலாறு ஈழ வரலாற்றில் எழுதப்படும் ஓர் சரித்திரமாகும் அப்படிப்பட்ட குடும்ப பின்ணனியில் இருந்து வந்த இவர் இசைத்தாகம் என்ன தணியுமா?
இவர் யேர்மனியில் வாழ்ந்த போதும் சரி இன்று அமெரிக்காவில் வாழும் போதும் சரி இவரின் படைப்புக்கள் மிளிர்ந்த வண்ணமே உள்ளது வளமையில் பெண் கலைஞர்கள் குடும்பம் குழந்தைகள் என்று ஒதுங்குவது வழக்கம் ஆனால் அதை எல்லாம் தாண்டி கலைப்பணியாற்றும் இவருக்கு எமது பாராட்டுக்கள் வாழ்க உங்கள் கலைப்பணி வளர்க உங்கள் கலைப்பணி என்று வாழ்த்துகிறோம்
{காணொளி,}
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக