சனி, 17 ஆகஸ்ட், 2013

ஜஸ்வர்யா ராயின் குத்துப்பாடலுக்கு மேடை ரெடி! ]


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ராம் லீலா படத்தில் குத்தாட்டம் ஆடுவதற்கு ரெடியாகிவிட்டாராம் ஜஸ்வர்யா ராய்.
திருமணத்திற்குப் பின்பும் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், குழந்தை பிறந்த பிறகு நடிப்பதை நிறுத்தினார்.
கடந்த 2 வருடமாக அவர் சினிமாப் பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் 2 வருட வனவாசத்திற்குப் பின்பு மீண்டும் சினிமாவுக்குத் திரும்புகிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால் இம்முறை ஐட்டம் பாட்டுக்கு ஆடப்
போகிறார்.
ஐஸ்வர்யா ராயை சம்மதிக்க வைத்து விட்டாராம் பன்சாலி. டான்ஸ் ஆடுவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறதாம்.
மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா ஆகியோரைத் தாண்டி இந்த குத்தாட்டத்திற்காக ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.
முதலில் குத்துப் பாட்டுக்கு ஆடுவதா என்று யோசித்தாராம் ஐஸ்வர்யா. ஆனால் பன்சாலி தொடர்ந்து பேசி சமரசப்படுத்தியதால் தற்போது சம்மதம் கொடுத்து விட்டாராம் ஐஸ்வர்யா.
இந்தப் பாட்டை ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் ஸ்டூடியோவில் செட் போட்டு படமாக்குகிறார்கள். செட்டும் ரெடியாகி விட்டதாம்.
10 நாட்களுக்குப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஒகஸ்ட் 26ம் திகதி படப்பிடிப்பு தொடங்கி செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் பன்சாலி
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக