பாலிவுட்டில் சண்டைக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை இலியானா அடம்பிடித்து வருகிறார்.
அசின், காஜல் அகர்வாலை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றார் இலியானா.
தற்போது “படா போஸ்டர் நிக்லா ஹீரோ” என்ற இந்தி படத்தில் ஷாஹித் கபூர் ஜோடியாக நடித்து வருகிறார்.
இதில் தென்னிந்திய படங்களில் இடம்பெறுவதுபோல் ஆக்ரோஷமான சண்டை காட்சிகளில் இலியானா நடிக்க வேண்டி இருந்தது.
தன்னுடைய தோல் மிகவும் மென்மையானது என்றும் அதனால் எனக்கு சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கு பயம் எனவும் கூறி தப்பிக்க பார்த்துள்ளார் இலியானா.
முதலில் கோபமடைந்த இயக்குனர் பின்பு அவருக்கு தைரியம் கூறி சண்டைக்காட்சியில் நடிக்கவைத்துள்ளார், இருந்த போதிலும் இலியானா பயந்தபடியே சண்டைக் காட்சியில் நடித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக