நீண்ட கால இடைவெளிக்கு பின்பு விடியும் முன் பேசு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தோன்றியுள்ளார் நடிகை பூஜா.
இதன் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பூஜா, நீண்ட நாட்களுக்குப் பின்பு பழகிய முகங்களைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது.
நான் கடவுளுக்குப் பின்பு நான் எதிர்ப்பார்த்த மாதிரி வந்த கதை இதுதான்.
படத்தின் போஸ்டர்களைப் பார்த்து சீமான் என்னிடம் தொலைபேசியில் வாழ்த்திப் பேசினார்.
விழாவில் போய் ஆங்கிலத்தில் பேசினால் கொலை பண்ணிடுவேன். தமிழில் பேசு' என்றார்.
அவரிடமிருந்து முதல் வாழ்த்து வந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.
பாலாவின் 'பரதேசி' படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. திரையுலகம் ஸ்ட்ரைக், படம் தாமதம் என படபிடிப்பு தள்ளிப் போனது.
அந்த நேரத்தில் தான் 'விடியும் முன்' படத்தின் கதையை இயக்குனர் பாலாஜி கே.குமார் என்னிடம் சொன்னார்.
உடனே பாலா சாருக்கு போன் பண்ணி ‘சார், மன்னிச்சுடுங்க விடியும் முன் படத்துக்கு நான் கால்ஷீட் கொடுத்துவிட்டேன்.
அதனால் பரதேசியில் நடிக்க முடியாது' என்றேன். பாலா சார் கொஞ்சம் கூட கோபப்படாமல் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். உனக்கு என்னோட வாழ்த்துக்கள்' என்று பாராட்டினார்.
பாலா சாருக்கு என் மனமார்ந்த நன்றிகளை சொல்லவேண்டும் என்கிறார் பூஜா.
{புகைபடங்கள், }
0 கருத்துகள்:
கருத்துரையிடுக