ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இளையதளபதியிடம் நடிப்பு பயின்ற அமலாபால்..


மைனாவுக்கு பிறகு பல படங்களில் நடித்தபோதும் இரண்டாம்தட்டு நடிகை பட்டியலிலேயே இருந்தார் அமலாபால். ஆனால், இப்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பதையடுத்து மேல்தட்டு ஹீரோயினி என்ற அங்கீகாரத்தைப்பெற்று விட்டார். அதனால் இதற்கடுத்தபடியாக தனுசுடன் வேலையில்லா பட்டதாரி என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார் அமலா. அதனால், தமிழில் மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட அறிகுறி தென்படுவதால், அடுத்து தெலுங்கு, மலையாள படங்களை குறைத்து விட்டு தமிழில் முழுவீச்சில் இறங்கப்போகிறாராம் அமலாபால். இந்த நேரத்தில், தலைவாவில் விஜய்யுடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சிலிர்ப்புடன் சக கலைஞர்களிடம் சொல்லிக்கொண்டு வருகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக