சனி, 17 ஆகஸ்ட், 2013

இணையத்தில் வெளியான பிரியாணி பாடல்: கடுப்பில் படக்குழு


'ஸ்டுடியோ க்ரீன்' நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி - ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள படம் 'பிரியாணி.
யுவன் சங்கர் ராஜா இசையில் த்ரில் கலந்த கொமெடியுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது யுவனுக்கு 100வது படம்.
இந்தப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலை கார்த்தியும், பிரேம்ஜியும் பாடியுள்ளனர். கூடுதலாக இயக்குநர் வெங்கட்பிரபுவும் அந்தப் பாடலுக்கு ஜதி சொல்லியிருக்கிறார்.
மேலும், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, டி.இமான், எஸ்.எஸ்.தமன் ஆகிய 4 இசையமைப்பாளர்களும் இணைந்து யுவனின் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.
பிற இசையமைப்பாளர்களின் இசையில் மற்றவர்கள் பாடுவது சகஜம்தான் என்றாலும், ஒரே நேரத்தில் 4 பேரும் பாடியதால் மகிழ்ச்சியாக இருந்தது 'பிரியாணி' படக்குழு.
தன்னுடைய நூறாவது படம் என்பதால், இதுபோல் பல்வேறு அதிரடி ஆச்சரியங்கள் தரக் காத்திருந்தார் யுவன்.
உச்சகட்டமாக ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து 'பிரியாணி'யின் ஓடியோவை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அதற்குள் பாடல்கள் இணையதளத்தில் ரிலீஸாகிவிட்டன.
இது குறித்து வெங்கட்பிரபு, "பாடல்கள் இணையதளத்தில் வெளியானது வருத்தமாக இருக்கிறது. நாங்கள் அதைத் தடைசெய்ய முயற்சித்தோம். ஆனால், மக்கள் இந்தத் திருட்டை விரும்புகிறார்கள்" என்று தன்னுடைய டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
யுவன்சங்கர் ராஜா, "இப்படி திருடுவது தவறானது. இதனால் எனக்கு கவலையாக இருக்கிறது. ஆகஸ்ட் 31ம் திகதி பாடல்களை வெளியிட முடிவு செய்திருந்தோம். என் பிறந்தநாளின்போது ரசிகர்களுக்கு இந்தப் பாடல்கள் விருந்தாக இருக்கும் என நினைத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக