புதன், 28 ஆகஸ்ட், 2013

‘பீட்சா’ நிறுவனத்துடன் இணைந்த நந்திதா


'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதையடுத்து, சிவகார்த்திகேயனுடன் ‘எதிர்நீச்சல்’ படத்தில் நடித்தார். இந்த இரண்டு படமும் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது. தற்போது இவர் ‘நளனும் நந்தினியும்', விஜய்சேதுபதியுடன் இணைந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ‘பீட்சா’ படத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு வந்துள்ளது. இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து சி.வி.குமார் தயாரிக்கிறார். 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ராம் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘முண்டாசுபட்டி’ என பெயர் வைத்துள்ளனர். விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

புதியவன்அருமையான குறும் படம்””காணொளி"",


 
அனைவரும் பார்க்க வேண்டிய படம்மன்னிக்க தெரிந்த மனமே மனிதனுக்குரியது.அத்துடன் பொறுமையும் நிதானமும் சேர்ந்து கொண்டால் மகத்தான மனிதனாகின்றான்.குறைந்த நேரத்தில் நிறைந்த கருத்தாளம் அமைதியான தத்துரூபமான காட்சியமைப்பு இக் குறும்படத்தை உருவாக்கிய அத்தனை உள்ளங்களுக்கும் இந்த இணையத்தின் நன்றிகலந்த வாழ்த்துக்கள்,{காணொளி,}

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இளையதளபதியிடம் நடிப்பு பயின்ற அமலாபால்..


மைனாவுக்கு பிறகு பல படங்களில் நடித்தபோதும் இரண்டாம்தட்டு நடிகை பட்டியலிலேயே இருந்தார் அமலாபால். ஆனால், இப்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பதையடுத்து மேல்தட்டு ஹீரோயினி என்ற அங்கீகாரத்தைப்பெற்று விட்டார். அதனால் இதற்கடுத்தபடியாக தனுசுடன் வேலையில்லா பட்டதாரி என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார் அமலா. அதனால், தமிழில் மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட அறிகுறி தென்படுவதால், அடுத்து தெலுங்கு, மலையாள படங்களை குறைத்து விட்டு தமிழில் முழுவீச்சில் இறங்கப்போகிறாராம் அமலாபால். இந்த நேரத்தில், தலைவாவில் விஜய்யுடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சிலிர்ப்புடன் சக கலைஞர்களிடம் சொல்லிக்கொண்டு வருகிறார்.

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்..

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்..

2014ம் ஆண்டில் மூணுஷா வீட்டில் கட்டாயம் கேட்கப்போகுது கெட்டிமேளம். தாய்க்குலம் அதுக்கான ஏறு்பாட்டுல தீவிரமா இறங்கிட்டாங்க. மகளுக்கு சினிமா வாய்ப்பு எதுவும் இல்லை. வயசு முப்பதை தாண்டிவிட்டதால 50 வயசை தாண்டிய யங் ஹீரோக்கள் கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்குறாங்க. ஒரு காலத்துல மூணுஷா கால்ஷீட்டுக்கு காத்துக்கிடந்தவங்க இப்போ கண்டுக்காம இருக்காங்க. நம்ம சீசன் முடிஞ்சிடுச்சிடியம்மா, இனி கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு என்னை சீக்கிரம் பாட்டியாக்குன்னு தாய்க்குலம் மகளை ப்ரைன் வாஷ் பண்ணிட்டாராம். அதோட தீவிரமாக மாப்பிள்ளைதேடும் படலத்தையும் ஆரம்பிச்சிட்டாராம். உன் இஷ்டப்படியே பண்ணும்மா; ஆனா வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம். உள்ளூர்லயே பாருன்னு ஒரு செல்ல கண்டிஷன் மட்டும் போட்டிருக்காராம் மகள்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை!

 
:இந்தநிகழ்சிஎவர்மனதயும்புண்படவைப்‌பதற்க்குஅல்ல உயிருக்கு போராடியவரை வேடிக்கை பார்த்த கொடூரம்பாருங்கள்,,


ஜேம்ஸ் வசந்தனின் செவ்வி,

உங்கள்உள்ளத்தைகொள்ளைகொள்ளும்மிகவும்சிறந்தகாணொளிமீண்டும்மீண்டும்பார்க்கத்தோன்றும்,,,ஜேம்ஸ் வசந்தனின் செவ்வி .,,,


உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்  

சனி, 17 ஆகஸ்ட், 2013

ஜஸ்வர்யா ராயின் குத்துப்பாடலுக்கு மேடை ரெடி! ]


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ராம் லீலா படத்தில் குத்தாட்டம் ஆடுவதற்கு ரெடியாகிவிட்டாராம் ஜஸ்வர்யா ராய்.
திருமணத்திற்குப் பின்பும் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், குழந்தை பிறந்த பிறகு நடிப்பதை நிறுத்தினார்.
கடந்த 2 வருடமாக அவர் சினிமாப் பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் 2 வருட வனவாசத்திற்குப் பின்பு மீண்டும் சினிமாவுக்குத் திரும்புகிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால் இம்முறை ஐட்டம் பாட்டுக்கு ஆடப்
போகிறார்.
ஐஸ்வர்யா ராயை சம்மதிக்க வைத்து விட்டாராம் பன்சாலி. டான்ஸ் ஆடுவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறதாம்.
மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா ஆகியோரைத் தாண்டி இந்த குத்தாட்டத்திற்காக ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.
முதலில் குத்துப் பாட்டுக்கு ஆடுவதா என்று யோசித்தாராம் ஐஸ்வர்யா. ஆனால் பன்சாலி தொடர்ந்து பேசி சமரசப்படுத்தியதால் தற்போது சம்மதம் கொடுத்து விட்டாராம் ஐஸ்வர்யா.
இந்தப் பாட்டை ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் ஸ்டூடியோவில் செட் போட்டு படமாக்குகிறார்கள். செட்டும் ரெடியாகி விட்டதாம்.
10 நாட்களுக்குப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஒகஸ்ட் 26ம் திகதி படப்பிடிப்பு தொடங்கி செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் பன்சாலி
 

நடிகை பூஜாவை செல்லமாய் திட்டிய சீமான்


நீண்ட கால இடைவெளிக்கு பின்பு விடியும் முன் பேசு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தோன்றியுள்ளார் நடிகை பூஜா.
'நான் கடவுள்' படத்துக்குப் பின் வேறு படங்களில் நடிக்காமல் இருந்தார் பூஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்போது அவர் நடிக்கும் படம் 'விடியும் முன் பேசு'.
இதன் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பூஜா, நீண்ட நாட்களுக்குப் பின்பு பழகிய முகங்களைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது.
நான் கடவுளுக்குப் பின்பு நான் எதிர்ப்பார்த்த மாதிரி வந்த கதை இதுதான்.
படத்தின் போஸ்டர்களைப் பார்த்து சீமான் என்னிடம் தொலைபேசியில் வாழ்த்திப் பேசினார்.
விழாவில் போய் ஆங்கிலத்தில் பேசினால் கொலை பண்ணிடுவேன். தமிழில் பேசு' என்றார்.
அவரிடமிருந்து முதல் வாழ்த்து வந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.
பாலாவின் 'பரதேசி' படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. திரையுலகம் ஸ்ட்ரைக், படம் தாமதம் என படபிடிப்பு தள்ளிப் போனது.
அந்த நேரத்தில் தான் 'விடியும் முன்' படத்தின் கதையை இயக்குனர் பாலாஜி கே.குமார் என்னிடம் சொன்னார்.
உடனே பாலா சாருக்கு போன் பண்ணி ‘சார், மன்னிச்சுடுங்க விடியும் முன் படத்துக்கு நான் கால்ஷீட் கொடுத்துவிட்டேன்.
அதனால் பரதேசியில் நடிக்க முடியாது' என்றேன். பாலா சார் கொஞ்சம் கூட கோபப்படாமல் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். உனக்கு என்னோட வாழ்த்துக்கள்' என்று பாராட்டினார்.
பாலா சாருக்கு என் மனமார்ந்த நன்றிகளை சொல்லவேண்டும் என்கிறார் பூஜா.
{புகைபடங்கள், }

 

நயன்தாராவை விட்டு பிரியாத பிரபுதேவா


பிரபுதேவாவை விட்டு நயன்தாரா விலகி விட்டாலும் கூட அவரது கையிலிருந்து இன்னும் போகாமல் அடம் பிடிக்கிறாராம் பிரபுதேவா.
நடிகை நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்கும் போது அவருடைய பெயரை பச்சை குத்திக் கொண்டாராம்.
ஆனால் காதலில் பிரிந்துவிட்டாலும், அவருடைய பெயரை மட்டும் நயன்தாராவால் நீக்கமுடியவில்லையாம்.
கையில் குத்திய பச்சையுடன் சென்னையில் ஜெயா பாலாஜி ரியல் மீடியா நிறுவனத்தின் புதிய படத் தொடக்க விழாவுக்கு வந்திருந்தார் நயன்தாரா.
நீளமான கை உடைய ஆடையில் அவர் வந்திருந்தாலும் கூட பச்சை
அவ்வப்போது எட்டிப் பார்த்தபடியே இருந்தது
கோபிசந்த்துடன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை ஏவி.எம் பிள்ளையார் கோவிலில் நடந்தது. அதில் நயன்தாரா கலந்து கொண்டார்.
அதில் கலந்து கொண்டவர்கள் அத்தனை பேரும் நயன்தாராவின் கையில் பளிச்சென தெரிந்த பிரபு என்ற பச்சையையே பார்த்துக் கொண்டிருந்தனராம்

இணையத்தில் வெளியான பிரியாணி பாடல்: கடுப்பில் படக்குழு


'ஸ்டுடியோ க்ரீன்' நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி - ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள படம் 'பிரியாணி.
யுவன் சங்கர் ராஜா இசையில் த்ரில் கலந்த கொமெடியுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது யுவனுக்கு 100வது படம்.
இந்தப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலை கார்த்தியும், பிரேம்ஜியும் பாடியுள்ளனர். கூடுதலாக இயக்குநர் வெங்கட்பிரபுவும் அந்தப் பாடலுக்கு ஜதி சொல்லியிருக்கிறார்.
மேலும், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, டி.இமான், எஸ்.எஸ்.தமன் ஆகிய 4 இசையமைப்பாளர்களும் இணைந்து யுவனின் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.
பிற இசையமைப்பாளர்களின் இசையில் மற்றவர்கள் பாடுவது சகஜம்தான் என்றாலும், ஒரே நேரத்தில் 4 பேரும் பாடியதால் மகிழ்ச்சியாக இருந்தது 'பிரியாணி' படக்குழு.
தன்னுடைய நூறாவது படம் என்பதால், இதுபோல் பல்வேறு அதிரடி ஆச்சரியங்கள் தரக் காத்திருந்தார் யுவன்.
உச்சகட்டமாக ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து 'பிரியாணி'யின் ஓடியோவை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அதற்குள் பாடல்கள் இணையதளத்தில் ரிலீஸாகிவிட்டன.
இது குறித்து வெங்கட்பிரபு, "பாடல்கள் இணையதளத்தில் வெளியானது வருத்தமாக இருக்கிறது. நாங்கள் அதைத் தடைசெய்ய முயற்சித்தோம். ஆனால், மக்கள் இந்தத் திருட்டை விரும்புகிறார்கள்" என்று தன்னுடைய டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
யுவன்சங்கர் ராஜா, "இப்படி திருடுவது தவறானது. இதனால் எனக்கு கவலையாக இருக்கிறது. ஆகஸ்ட் 31ம் திகதி பாடல்களை வெளியிட முடிவு செய்திருந்தோம். என் பிறந்தநாளின்போது ரசிகர்களுக்கு இந்தப் பாடல்கள் விருந்தாக இருக்கும் என நினைத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ராஜா ராணி பாடல் உருவான விதம்


இணையத்தளம் உங்களை அன்புடன் அழைக்கின்றோம்!
ஆர்யா, நயன் தாரா நடித்து அட்லீ இயக்கியுள்ள படம் ராஜாராணி. இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட்ட விதம் குறித்த வீடியோ ஒன்று இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏ. ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார். இசை ஜி.வி.பிரகாஷ்குமார். (சுவாரசிய காணொளி, இணைப்பு)
 

சனி, 10 ஆகஸ்ட், 2013

தனி அறையில்நட்பின் வானம்!!


                                               ஒரு ஆணும் பெண்ணும்
         ஒரு தனி அறையில் அரை மணிநேரம்பேசிக் கொடிருந்தால்
வெளியில் உள்ளவர்களுக்கு    ஆரோக்கியமான எண்ணம் ஏற்படுவதில்லை
  நானும் நீயும் இரவெல்லாம்இலக்கியம் பேசினோம்
 புத்தகம் விமர்சித்தோம்
  என்பதைஉன்னை மணக்க இருப்பவள்நம்பாமல் போனதில்
  பிரிந்ததில் ஆச்சரியம் இல்லைஆண் பெண் நட்புஇங்கே
 ஒரு சதுரத்திற்குள்தான்சாத்தியம்அது விரும்பும்விரிந்த வானமும்
   இறக்கையும் அதற்கு இங்கே இல்லை
 மானுடம்இங்கே!!!!!!
BY.தினேஷ் புத்தூர்...

 

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

உறவு திரைப்படம்! எம்மவர் ஆக்கத்தில்



Canada சகா டைரக்டர் திவ்ஜராஜன் வழங்கும் உறவு திரைப்படம் Bern ரசிகர்களுக்காக சிறப்புககாட்சி எம்மவர் ஆக்கத்திற்கு வண்ணத் திரையில் ஈழத் தமிழன் என்னக் கதவை திறந்து பறக்க ஆக்கம் செய்வோர்க்கு ஊக்கம் அளிப்போம் அகிலம் எல்லாம் நம் புகழை பதியம் போட இது போன்ற ஆக்கத்துக்கு ஊக்கமளிப்போம் இவர்கள் முயற்ச:சி வெற்றி பொற எங்கள் மனமார்ந்த வரி்த்துக்கள்
08.08.2013 வியாழன் பி.ப 18.45க்கு Ostermundigen நீலவானி கடைக்கு அருகாமையில் காணத்தவறாதீர்கள்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஈழத்து முதல் பெண் இசையமைப்பாளர் பிரபாளினி!


எமது ஈழத்து முதல் பெண் இசையமைப்பாளராகத் திகழும் எம்.பி. பிரபாளினியின் இசையில் வெளியாகியுள்ள பாடலை
 இங்கே தருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
எமது கலைஞர்களின் ஆக்கங்களை முன்நிலைப்படுத்தும் நோக்கத்தில் இன்று இவர் பாடல் இணைப்பதையிட்டு மிக மிக மகிழ்ச்சியடைகிறோம் ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தாலும்
 எம் மண்ணின் கலை விழுமியங்களைக் காக்கும் இளம் தலைமுறையைச் சேர்ந்த பிரபாளினி அவர்கள் இசையமைப்பதோடு நின்று விடாமல் பாடல் எழுதும் திறனும் உள்ளவர்.
அதுமட்டுமல்லாமல் அவர் குரல் கூட இனிமையானது என்பதை இந்தப்பாடல் மூலம் அறியக் கூடியதாக இருக்கும் அத்தோடு கலைத் தாகம் உள்ள இளம் கலைஞர் இவர் வரலாறு எழுத நாள் போதாது இவர் தந்தை வரலாறை ஈழ தேசம் மறவாது முதல் முதல் இசைத்தட்டை தமிழில் தங்கள் சொந்த ஆக்கத்தில் வந்த பாடலை இசைத் தட்டாக வெளியிட்டு வெற்றி கண்டவர்.
அவர் வேறு யாருமல்ல எம்.பி பரமேஸ் அவர்கள். இவரது தாயார் கூட கலை மாமணிப்பட்டம் பெற்றவர் மட்டுமல்ல ஈழத்தில் எம்.பி பரமேஸ் அவர்களுடன் இணைந்து பட்டி தொட்டியெல்லாம் பாடி மக்களை இசைப் பரவசத்தில் ஆழ்தியவர் ஈழவர் ஆக்கத்துக்கு முன் உதாரனமானவர்கள் இவர்கள் வரலாறு ஈழ வரலாற்றில் எழுதப்படும் ஓர் சரித்திரமாகும் அப்படிப்பட்ட குடும்ப பின்ணனியில் இருந்து வந்த இவர் இசைத்தாகம் என்ன தணியுமா?
இவர் யேர்மனியில் வாழ்ந்த போதும் சரி இன்று அமெரிக்காவில் வாழும் போதும் சரி இவரின் படைப்புக்கள் மிளிர்ந்த வண்ணமே உள்ளது வளமையில் பெண் கலைஞர்கள் குடும்பம் குழந்தைகள் என்று ஒதுங்குவது வழக்கம் ஆனால் அதை எல்லாம் தாண்டி கலைப்பணியாற்றும் இவருக்கு எமது பாராட்டுக்கள் வாழ்க உங்கள் கலைப்பணி வளர்க உங்கள் கலைப்பணி என்று வாழ்த்துகிறோம்
{காணொளி,}
 

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

இளமை இனிமையான கானக்குயில்லின்??

துளிர்த்து வளர்ந்து வரும் எங்கள் இளம் கலையர்களுக்கு எமதுவாழ்த்துக்களும்  பாரட்டுக்களும் உரித்தாகுக    இந்த இனிமையான குரலுக்கு எத்தனை பேர் அடிமை?...

அமெரிக்கப் பெண்ணின் இனிமையான தமிழ்ப் பாடல்



  எம் தமிழ் உறவுககளே பிள்ளைக்கு தமிழ் தெரியாது தாம் வாழும் நாட்டு மொழிதான்தெரியும் என்று கூறும்அன்புத்தந்தை தாய்க்கு இந்த அமெரிக்கப் பெண்ணின் அழகான தமிழ்ப் பாடல்ஓர் எடுத்து காட்டு ?இந்தப் பாடல் கட்சியை பார்த்தாவது  நாம் தமிழைவளர்போம்,,நன்றி""

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

தோல் மிகவும் மென்மையானது: அடம் பிடிக்கும்


பாலிவுட்டில் சண்டைக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை இலியானா அடம்பிடித்து வருகிறார்.
அசின், காஜல் அகர்வாலை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றார் இலியானா.
தற்போது “படா போஸ்டர் நிக்லா ஹீரோ” என்ற இந்தி படத்தில் ஷாஹித் கபூர் ஜோடியாக நடித்து வருகிறார்.
இதில் தென்னிந்திய படங்களில் இடம்பெறுவதுபோல் ஆக்ரோஷமான சண்டை காட்சிகளில் இலியானா நடிக்க வேண்டி இருந்தது.
தன்னுடைய தோல் மிகவும் மென்மையானது என்றும் அதனால் எனக்கு சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கு பயம் எனவும் கூறி தப்பிக்க பார்த்துள்ளார் இலியானா.
முதலில் கோபமடைந்த இயக்குனர் பின்பு அவருக்கு தைரியம் கூறி சண்டைக்காட்சியில் நடிக்கவைத்துள்ளார், இருந்த போதிலும் இலியானா பயந்தபடியே சண்டைக் காட்சியில் நடித்தார்.