வியாழன், 19 செப்டம்பர், 2013

பாடகியின் நிர்வாண உடலை கிண்டலடித்த பொலிசாரால்



லாஸ் ஏஞ்செல்ஸில் பிரபல பாடகியின் உடலைப் பார்த்து கிண்டலடித்த பொலிசாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல பாடகியான ஒய்ட்னி ஹூஸ்டன் தனது 48வது வயதில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் திகதி ஒட்டலில் பிணமாகக் கிடந்தார்

இவரின் இறந்த உடலை துணியைக் கொண்டு மூடாமலும், அவரது நிர்வாண உடலைப் பார்த்து கை தட்டி இப்போதும் கூட அழகாக இருப்பதாகவும் கமெண்ட் அடித்ததாக பொலிஸ் அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.
அந்த அதிகாரியின் பெயர் டெர்ரி நூடல். இவரது செயல்பாடு குறித்து சக அதிகாரியான பிரையன் வெயர் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்
ளார்.
அதில் ஹூஸ்டன் உடலைப் பார்த்து மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டது குறித்து கூறிய வெயர், ஹூஸ்டனின் உடல் அருகே வந்த நூடல், அவரது உடல் மீ்து போர்த்தியிருந்த துணியை முதலில் விலக்கியுள்ளார்.


பின்பு ஹூஸ்டனின் நிர்வாண உடலுக்கு மிக அருகே போய் உடலைத் தொட்டுப் பார்ப்பது போல நின்றும் மேலும் அந்தரங்கப் பகுதியைப் பார்த்த அவர் சிரித்தபடி இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறது
பாருங்கள் என்று அசிங்கமாக கமெண்ட் அடித்துள்ளார்.

அத்துடன் நில்லாமல் ஹூஸ்டன் உடலை மேலும் கீழும் பார்த்தபடி வயதுக்கு மீறிய அழகுடன் இருப்பதாகவும் பேசியுள்ளார் என்று கூறியுள்ளார்.
ஆனால் வெயரின் குற்றச்சாட்டை பொலிஸ் துறை மறுத்துள்ளது.

இருப்பினும் நூடல் மீ்து நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் மீது அடுத்த 30 நாட்களில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.







 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக