திங்கள், 2 செப்டம்பர், 2013

தனுஷ் நடிக்கும் அனேகன்

 
ஆனந்த்சினிமாசெய்திதனுஷ்திரைமணம்நியூஸ்படம்பரபரப்புலேட்டஸ்ஹாரிஸ்
மாற்றான் படத்தின் தோல்வியை தொடர்ந்து அடுத்த படத்தை மிகுந்த கவனத்துடன் எடுக்கவிருக்கிறார் கே.வி ஆனந்த்.
இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி ஆனந்த் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு அநேகன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கதாநாயகியை தேடுவதில் அதிக கவனம் செலுத்தி வந்த கே.வி ஆனந்த் இப்போது அவரையும் தேர்வு செய்துவிட்டாராம். பாலிவுட்டில் இசாக் என்ற படத்தில் நடித்தவர் அமிரா டஸ்டர். இவர் டவ், வோடபோன் போன்ற பல விளம்பர படங்களில் நடித்தவர்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிகர் கார்த்திக் (மௌன ராகம்) நடிக்கிறார். படத்தின் மற்ற விவரங்கள் விரெயில் என்கிறார் இயக்குனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக