அஜித்சினிமாசெய்திதலைஅஜித்திரைமணம்நியூஸ்படம்பரபரப்புலேட்டஸ்வீரம்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். அப்படத்தில் நடித்தபோது பலதடவை விபத்துக்களில் சிக்கினார் அஜீத். இருப்பினும், ஆக்சன் காட்சிகளில் டூப் பயன்படுத்தாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்தார். பின்னர் அப்படத்தை முடிக்கும்போது அஜீத்திற்கு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால்தான் இனிமேல் அவரால் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க முடியும் என்றும் சொன்னார்கள்.
ஆனால் அப்படி எதுவும் அவர் செய்து கொள்ளவில்லை. சமீபத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு மோட்டார் சைக்கிளிலேயே விழிப்புணர்வு பயணம் சென்று வந்த அஜீத், இப்போது நடித்து வரும் வீரம் படத்திலும் சண்டை காட்சிகளில் டூப் இலலாமல நடிக்கிறாராம். அதிலும் பீகாரில் நடந்த ஒரு சண்டை காட்சியின்போது ரயிலில் தொங்கியபடி தைரியமாக நடித்துள்ளாராம் அஜீத்.
இதனால் இந்த முறையும் எதிர்பாராதவிதமாக விபத்துக்கள் ஏற்பட்டால், படப்பிடிபபு தள்ளிப்போய்விடுமே என்ற அச்சத்தில் இருந்தாராம் சிறுத்தை சிவா. ஆனால் அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்காமல், அந்த காட்சியில் தில்லாக நடித்தாராம் அஜீத். அதோடு, வீரம் படம் அதிரடியான படம் என்பதால், பக்கா ஆக்சன் ஹீரோவாக தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடித்து வருகிறாராம் அஜீத்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக