ரமணா’ படம் தமிழில் 2002–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் விஜயகாந்த், சிம்ரன் நடித்து இருந்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
விஜயகாந்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அமலாபாலை தேர்வு செய்தனர். அமலாபாலும் இந்தியில் அறிமுகமாக விருப்பமாக இருந்தார். ஆனால் அமலாபாலிடம் தற்போது கால்ஷீட் இல்லை. எனவே நடிக்க இயலாது என மறுத்து விட்டார்.
அமலாபால் கைவசம் தமிழ், தெலுங்கில் 6 படங்கள் உள்ளன. இந்த வருடம் புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க அவரிடம் தேதி இல்லை. எனவே அக்ஷய்குமார் படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக