சனி, 6 ஜூலை, 2013

டென்னிஸ் ரசிகையான காஜல் அகர்வால்


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வாலுக்கு டென்னிஸ் விளையாட்டு என்றால் கொள்ளை பிரியமாம்.
அதுமட்டுமல்லாமல் நன்றாக டென்னிஸ் ஆடவும் தெரியுமாம்.
ஆனால் தற்போது படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால், டென்னிஸ் ஆட முடியாமல் போனது.
இதற்கிடையே சமீபத்தில் பிரேக் கிடைத்ததால், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்க்க லண்டனுக்கு கிளம்பி விட்டார் காஜல்.
ஏற்கனவே அங்கு சென்றிருந்த தங்கை நிஷா அகர்வாலுடன் போட்டிகளை பார்த்து ரசித்தாராம்.
மேலும் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கும் சென்று விட்டு, புதிய உற்சாகத்துடன் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.
இதுதவிர முன்னணி நாயகர்களின் படங்களை தவிர்த்து வரும் காஜல், சம்பள விடயத்திலும் படு கறாராக இருக்கிறார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக