ரஜினி பற்றிய இசை ஆல்பத் துக்கு ஷாருக்கான், தீபிகா படுகோன் லுங்கி கட்டிக்கொண்டு நடனம் ஆடினார்கள். ராப் பாடகர் ஹனி சிங், பாலிவுட் பட அதிபர் புஷன் குமார் இருவரும் இணைந்து ரஜினி பற்றிய இசை ஆல்பம் உருவாக்குகின்றனர். இதற்கு தலைவர் என்று பெயரிட்டுள்ளனர். இந்த பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக ஷாருக்கானிடம் கேட்டபோது உடனடியாக ஒப்புக்கொண்டார். இது பற்றி ஷாருக்கான் கூறும்போது, ரஜினிக்கு எல்லோருமே ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அவரை பற்றி உருவாகும் தலைவர் இசை ஆல்பத்தில் நடனம் ஆட கேட்டார்கள். நானும் அவருடைய ரசிகன் என்ற முறையில் என்னுடைய பங்கும் ஆல்பத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆட ஒப்புக்கொண்டேன். தீபிகாவும் இதில் ஆடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி அவரிடம் கேட்டேன். அவரும் ரஜினியின் பெரிய ரசிகை. உடனே ஒப்புக்கொண்டார். ஜாலியான பாடல், ரஜினி ஸ்டைலில் இருக்கும் என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக