வியாழன், 11 ஜூலை, 2013

பெண் இனத்திற்கு என்னால் ஆன உதவி


 
மாலினி 22 பாளையங்கோட்டை என்ற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று(09.08.13) நடந்தது. 19 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஸ்ரீபிரியா திரையுலகிற்கு இயக்குனராக இத்திரைப்படத்தின் மூலம் ரிஎன்ட்ரி கொடுக்கிறார். ஸ்ரீப்ரியா இயக்கும் இத்திரைப்படத்தை, ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் தயாரிக்கிறார். நடிகையாக 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஸ்ரீப்ரியா திடீரென இயக்குனரானதற்கு காரணம் பெண் இனத்திற்கு தன்னால் ஆன சிறு உதவியை செய்வதற்காகத்தானாம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது ஸ்ரீப்ரியா “ நாம் பத்திரிக்கையை படிக்கும் போது ஒரே மாதிரியாக பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தினம் தினம் நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதைப் படிக்கும் போது வருவது சிறிய கோபமல்ல, பெரிய கோபம். ஆனால் நம்மால் என்ன செய்ய முடிந்தது. பெண் இனத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காகத் தான் இந்த முயற்சி. தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் தான் இந்த கொடுமை அதிகமாக நடந்துவருவதால் தமிழிலும், தெலுங்கிலும் இந்த திரைப்படத்தை எடுக்கிறோம்” என்று கூறினார். மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படம் ஒரு மலையாள திரைப்படத்தின் ரீமேக்காம். ஆனால் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, அந்த மலையாளத் திரைப்படத்தின் பெயரை ஸ்ரீப்ரியா சொல்ல மறுத்துவிட்டார். மலையாளத் திரைப்படத்திலிருந்து தமிழ் ரீமேக் பலவிதங்களில் மாறுபட்டு இருப்பதால் இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்யவேண்டாம் எனவும் கூறினார். மேலும் பெண் இனத்திற்காக போராடுவது மட்டுமல்லாமல், சமீபத்தில் ஏற்பட்ட உத்திரகாண்ட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்காளுக்காக 23 லட்ச ரூபாய் நிதி வழங்கியிருக்கிறது ஸ்ரீப்ரியா குடும்பம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக