சனி, 6 ஜூலை, 2013

கொலிவுட்டுக்கு மீண்டும் வரத்துடிக்கும் அசின்


கொலிவுட்டில் மீண்டும் கால்பதிக்கலாம் என்ற எண்ணத்தில் அசின் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த போது பாலிவுட்டில் சாதிக்க வேண்டும் என மும்பைக்கு போனார் அசின்.
ஆனால் அவருக்கு பாலிவுட்டில் சரியாக வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில் கௌதம் மேனன் தனது துருவநட்சத்திரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் அல்லது சோனம் கபூரை தெரிவு செய்யலாம் என திட்டமிட்டுள்ளாராம்.
அவ்வாறு துருவநட்சத்திரம் படத்திற்கு அசினை தெரிவு செய்தால் அவருக்கு இது பெரிய உதவியாக இருக்குமாம்.
தன்னை துருவநட்சத்திரம் படத்தின் கதாநாயகியாக தெரிவு செய்தால் மீண்டும் கொலிவுட்டில் கால்பதித்த விடலாம் என்ற எண்ணத்தில் அசின் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக