முதலிடம் என்பது நிலையானதல்ல, ஆனாலும் ரசிகர்களின் அன்பில் மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.
2012-ல் மக்களை அதிகம் கவர்ந்த பெண்கள் பற்றிய கருத்துக்கணிப்பில் தமன்னாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தமன்னா கூறுகையில், என் தோற்றம் என்பது இல்லாமல் சினிமாவில் எப்படி நடிக்கிறேன் என்பதை வைத்து முதலிடத்துக்கு என்னை தெரிவு செய்துள்ளனர்.2012-ல் மக்களை அதிகம் கவர்ந்த பெண்கள் பற்றிய கருத்துக்கணிப்பில் தமன்னாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
குடும்ப பாங்காகவும், ஜாலியான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறேன்.
ஆண்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளும் எனக்கு நிறைய இருக்கிறார்கள்.
நடிகர்களில் எனக்கு ஹிருத்திக் ரோஷனை பிடிக்கும். நான் அவருடைய ரசிகை.
சூர்யா, விஜய், ஜெயம் ரவி போன்றோர் பிரமாதமாக நடிக்கின்றனர். அவர்களையும் எனக்கு பிடிக்கும்.
ரசிகர்கள் எனது கட்அவுட்களுக்கு பூஜை, பால்அபிஷேகம் செய்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனாலும் இந்த மரியாதைகள் நிரந்தரம் அல்ல என்று எனக்கு தெரியும். இது வரும் போகும்.
பட உலகம் போட்டி நிறைந்ததாக உள்ளது. இன்று நான் இருக்கிறேன், நாளை வேறொருத்தர் வருவார்.
நம்பர் ஒன் இடம் என்பது நிரந்தரமானது அல்ல, ரசிகர்களின் அன்பே முக்கியம் என்கிறார் தமன்னா.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக