ரன்பீர் கபூருடன் காதல் முறிந்தாலும் இருவரும் வாழ்க்கை முழுவதும் நண்பர்களாக இருப்போம் என்கிறார் தீபிகா படுகோன்.
காதல் ஜோடிகள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனே பிரிந்து வேறு காதலை தேடிக்கொள்வது பேஷனாகி வருகிறது.
சினிமாவுலகில் பிரேக் அப் என்பது சகஜமாகிவிட்டது. அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளனர் ரன்பீர் கபூர்- தீபிகா படுகோன்.
இதுபற்றி தீபிகா படுகோன் கூறுகையில், பாலிவுட் நாயகன் ரன்பீர் கபூரும் நானும் காதலித்தோம். இப்போது பிரேக் அப் ஆகிவிட்டது. நண்பர்களாக மாறி இருக்கிறோம்.
இந்த நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும். மனதளவில் பிரேக் அப் ஆனாலும் படங்களில் சேர்ந்து நடிக்கிறோம்.
இருவரும் நன்கு பழகியவர்கள் என்பதால் இருவரும் சேர்ந்து நடித்த யே ஜவானி ஹை தீவானி ஷூட்டிங்கில் நன்கு பொழுதுபோனது.
ஷூட்டிங்கில் நாங்கள் நாங்களாக இருந்ததைவிட அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தோம். கதாபாத்திரத்தை ஏற்கும்போது எனது நிஜ வாழ்க்கையை மறந்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக