இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி போல் மாப்பிள்ளை வேண்டும் என்கிறார் அஞ்சலி.
சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைபடுத்தியதாக வீட்டிலிருந்து வெளியேறி 5 நாள் தேடுதலுக்கு பிறகு பொலிஸ் முன் ஆஜரானார் நடிகை அஞ்சலி.
இவர் தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபற்றி அஞ்சலி உறுதி செய்யவில்லை.
தெலுங்கு படத்தில் நடித்து வரும் அஞ்சலியிடம், உங்களுக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, சுறுசுறுப்பாகவும், அழகாகவும் தோன்றும் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிபோல் எனது வருங்கால கணவர் இருக்க வேண்டும்.
மழுமழுவென தாடியை ஷேவ் செய்திருப்பதைவிட டிரிம் செய்யப்பட்ட தாடியோடு உள்ளவரைத்தான் பிடிக்கும்.
அதைவிட முக்கியம் எனக்கு வாழ்க்கை துணையாக வருபவர் தன்னம்பிக்கை உடையவராகவும், தனது உறுதியில் மாற்றம் இல்லாதவரும் கடினமான தருணங்களிலும் என்னை கைவிடாமல் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்.
என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக