புதன், 8 மே, 2013

வில்லியாக நடிக்கிறார் துளசி


 1980களில் கொலிவுட்டை கலக்கிய ராதாவின் இளைய மகள் துளசி, வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் படமான கடல் நன்றாக ஓடவில்லை என்பதால் துளசி கவலை அடைந்துள்ளார்.
தற்போது அதிலிருந்து மீண்டு தன் அடுத்த படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
ஜீவா ஜோடியாக யான் படத்தில் நடிக்கும் துளசிக்கு இதில் செமத்தியான கதாபாத்திரமாம்.
வில்லத்தனம் கலந்த நாயகி கதாபாத்திரம் என கொலிவுட்டில் பேச்சு அடிபடுகிறதாம்.
கிளாமர், டூயட் என சராசரியான நாயகிகளை போல் இல்லாமல், இரண்டாவது படத்திலேயே மாறுபட்ட நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான  கதாபாத்திரம் கிடைத்திருப்பதால் உற்சாகமாக இருக்கிறார் துளசி.
இந்த படம் ஹிட்டாகும் என நம்பிக்கையுடன் இருக்கும் துளசி, இதற்கு அடுத்தபடியாக தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும நம்புகிறாராம்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக