சிம்பு, பிரபுதேவா ஆகிய இரண்டு பேர்களுடனான காதல் பிரிவுக்குப் பிறகு நயன்தாராவின் புதிய காதலர் ஆர்யா தான் என்று கோடம்பாக்கம் முழுக்க கிசுகிசுக்கள் பரவிக்கிடக்கின்றன.
நேற்று அந்த செய்தியை உண்மையாக்கும் வகையில், ஆர்யா வெட்ஸ் நயன்தாரா. திகதி மே 11, நேரம்- இரவு 9 மணி என்று அச்சிடப்பட்ட இ-மெயில் ஒன்று நமக்கு வந்தது.
அட இதென்ன அப்படியானால் ஆர்யா- நயன்தாரா காதல் உண்மை தானா? என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கையில் அது இருவரும் சேர்ந்து நடித்து வரும் ‘ராஜாராணி’ படத்துக்காகத்தான் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்ற சீக்ரெட் தகவல் தெரியவந்தது.
மேலும் அதில்... கிட்டத்தட்ட இரண்டு நிஜமாகவே காதலித்து வருகிறார்கள் என்பதைப் போலவே..
“இந்த செய்தி பல நாட்களாக காற்றில் மிதந்து வரும் செய்திதான் ....
இதை பற்றி அறியாதவரோ தெரியாதவரோ யாரும் இல்லை ...
இது ஆச்சரியமூட்டினாலும் அதிர்ச்சி தரும் தகவல் இல்லை ...
நெஞ்சை அள்ளிய அரசியை, அரசன் தன்னிலை மறக்க செய்யும் தருணம்.
இது அரங்கேறும் நாள் நாளை...”
என்றும் கூடுதலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
ஒரு காலத்தில் மற்றவர்களுடன் தங்களை இணைத்து கிசுகிசுக்கள் வந்தாலே மார்க்கெட் சரிந்து விடுமோ என்று பயந்து போகும் நடிகர்-நடிகைகள் மத்தியில் தற்போது அதைப்பற்றிய எந்த விதமான பயமும் இல்லாமல் உற்சாகமாக எடுத்துக் கொள்கிறார்கள் நடிகர் நடிகைகள்.
படத்துக்கான இந்த வித்தியாசமான பப்ளிசிட்டி ஸ்டண்ட்டை ஆர்யா-நயன்தாரா இருவரின் அனுமதியுடனேயே செய்திருக்கிறார் படக்குழுவினர்கள்