செவ்வாய், 2 ஏப்ரல், 2013

கார்த்தியுடன் இணையும் இயக்குனர் ஹரி


கொலிவுட்டில் நடிகர் கார்த்தி, இயக்குனர் ஹரி இருவரும் முதன்முறையாக அதிரடி கூட்டணியாக இணைகிறார்கள்.
"பருத்தி வீரன் முதல்", "அலெக்ஸ் பாண்டியன்” வரை குழந்தைகள் முதல் அனைவரையும் கவர்ந்த நாயகனாக தன்னை நிலை நிறுத்தியுள்ளவர் கார்த்தி.
இங்கு மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கும் நாயகனாக உருவாகியுள்ளார்.
இவர் தற்பொழுது "பிரியாணி", "ஆல் இன் ஆல் அழகுராஜா" படங்களில் நடித்து வருகிறார்.
'தமிழ்', 'சாமி', 'ஆறு', 'வேல்', 'சிங்கம்' என்று அடுத்தடுத்து பல படங்களிலும் தன் சிங்க முத்திரையை பதித்து வருபவர் இயக்குனர் ஹரி.
இவரது படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் வசூல் வேட்டை செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த இரண்டு அதிரடி கூட்டணியும் சேர்ந்தால் அனைவருக்கும் கொண்டாட்டம் தான். தற்பொழுது 'சிங்கம் 2' படத்தை இயக்கி வரும் ஹரி அடுத்த படமாக இந்த புதிய படத்தை இயக்குகிறார்.
பெயரிடப்படாத இப்புதிய படத்தின் நடிகர் நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தெரிவு நடைபெற்று வருகிறது.
இப்படத்தை வேந்தர் மூவீஸ் சார்பில் எஸ்.மதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
பிரபல விநியோகஸ்தர், தயாரிப்பாளரான இவர் இப்பொழுது கே.பாலச்சந்தர் இயக்கி ரஜினிகாந்த் நடித்த 'தில்லு முல்லு' படத்தை அதே பெயரில் மீண்டும் தயாரித்து வருகிறார்.
இதில் சிவா, இஷா தல்வார், பிரகாஷ் ராஜ், கோவைசரளா ஆகியோர் நடித்து வருகிறார்கள்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக