கொலிவுட்டில் ஐஸ்வர்யா கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சுசித்ரா துரை தயாரிக்கும் படம் "ஜமீன்".
நான் ஈ என்ற மாபெரும் வெற்றிப் படத்தில் நடித்த நானி கதாநாயகனாகவும், பிந்து மாதவி, ஹரிப்ரியா நாயகியாகவும் நடிக்கிறார்கள்.
மேலும் ராவ்ரமேஷ், வெண்ணிலா கிஷோர், கணேஷ் இவர்களுடன் ஒரே ஒரு பாடல் காட்சியில் மேக்னா நாயுடு நடித்திருக்கிறார்.
இப்படத்தில் வசனம் எழுதி தமிழாக்கம் செய்து வருபவர் A.R.K.ராஜராஜா. இப்படம் பற்றி A.R.K ராஜராஜா கூறுகையில், பத்தாயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்கார தாத்தா, தன் பேரன் நாணியின் பொறுப்பில்லா தனத்தைப் பார்த்து அவனை திருத்த ஒரு யோசனை செய்கிறார்.
ஒரு விடுதியில் தங்கிப் படித்து அவன் பட்டதாரியாக வேண்டும். அப்போது
தான் அவன் அந்த சொத்துகளுக்கு வாரிசாக முடியும் என்று உயில் எழுதி வைத்துவிடுகிறார்.
வசதியாக வாழ்ந்த நானி கிராமப்புறத்தில் உள்ள கல்லூரி விடுதியில் பத்து பேரோடு தங்க வேண்டியதாகிறது.
அப்படி தங்கிய அவன் படித்து, வெற்றி பெற்று பத்தாயிரம் கோடியை அடைந்தானா? என்பதை நகைச்சுவை மற்றும் செண்டிமென்ட் கலந்து உருவாக்கி உள்ளார் இயக்குனர்.
தெலுங்கில் பிள்ள ஜமீன்தார் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படமே, தற்போது தமிழில் ஜமீன் என்ற பெயரில் படமாகி இருக்கிறது.
நானி நடித்த நான் ஈ படத்தின் வெற்றிக்குப் பின்பு வெளியான பிள்ள ஜமீன்தார் படமும் அமோக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு - சாய்ராம்
இசை - செல்வகணேஷ்
பாடல்கள் - உவரி.க.சுகுமார், சுதந்திரதாஸ், ஜெயமுரசு, அருண்பாரதி
எடிட்டிங் - பிரவீன் - ராமாராவ்
தயாரிப்பு மேற்பார்வை - ஹசரத்பாபு
இணைதயாரிப்பு - A.வெங்கட்ராவ்
தயாரிப்பு - சுசித்ரா துரை
இயக்கம் - ஜி. அசோக்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக