கொலிவுட்டில் சுப்ரமணியபுரம் படத்தில் நடிப்பதற்கு முன்பே நடிகை ஸ்வாதி ஆந்திராவில் மிகவும் பிரபலமானவர் ஆவார்.
ரிவி தொகுப்பாளினி, நாடக நடிகை, மாடல் என இவருக்கு பல முகங்கள் உண்டு.
கடுமையாக உழைத்தாலும், ஸ்வாதி வீட்டின் பீரோவில் இன்னும் பணம் சேரவில்லையாம். இதை வெளிப்படையாக, அவரே ஒப்புக் கொள்கிறார்.
கணிசமான படங்களில் நடித்து விட்டேன். ஆனால், இன்னும் நான் மிடில் கிளாஸ் குடும்ப பொண்ணு தான்.
என் அப்பாவின் சொற்ப வருமானத்தை நம்பித் தான், எங்கள் குடும்பத்தின் வண்டி ஓடுகிறது.
சாதாரண வீட்டில் தான், வசிக்கிறோம். சொகுசு பங்களாவோ, ஆடம்பர காரோ எங்களிடம் இல்லை.
சொகுசு வாழ்க்கை வாழும் அளவுக்கு, எங்கள் குடும்பத்துக்கு வருமானம் இல்லை என பகிரங்கமாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் ஸ்வாதி.
ஒரு படத்தில் நடித்ததுமே, பில்டப்களை அள்ளி விடும் கதாநாயகிகளுக்கு மத்தியில், ஸ்வாதி கொஞ்சம் வித்தியாசமானவராக காணப்படுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக