செவ்வாய், 30 ஏப்ரல், 2013

வளரும் எமது இனத்தின் கலைவடிவங்கள்!

ரம்மியா சிவானந்தராஐா சுவிஸ் நாட்‌‌டில் வாழ்ந்து வரும் இவர் குரல் எல்லோரையும் தன் வசப்படுத்தும் ஆழுமை கொண்டதாலும் சுதி,தாளம், விலகாது இனிமையாகப்பாடும் இவர் திறமை எம் ஈழவர்கள் கலைக்கு ‌மெருகேற்றும் என்பதில் எந்த ஐயமும் இல்லை இவரின் திற‌மைக்கு ஒரு எடுத்தக்காட்டாக இந்த (தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை மறக்கலாமா) என்ற பாடல் எங்கள்கலைஞர்களுக்காக தனித்துவமாக இயங்கும் எமது எஸ்.ரி .எஸ் இணையம் இவர்போன்ற திற‌மையுள்ள கலைஞர்கள் பதிவை எடுத்து வந்து உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்}வடைவதோடு இவர் மேலும் மேலும் சிறப்புற வாழ்த்துகிறது.{காணொளி}
   
  ரம்யாவின் 6 வயதில்பாடிய முதலாவது பாடல்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

சிட்டுக்குருவி முத்தம் --மிக்ஸ்-

வித்தியாசமான திரை மசாலா இதோ உங்களுக்காக பார்த்து மகிழவும் .வெடி- சாமி


 

நானி நடிக்கும் ஜமீன் படத்தின் கதை


கொலிவுட்டில் ஐஸ்வர்யா கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சுசித்ரா துரை தயாரிக்கும் படம் "ஜமீன்".
நான் ஈ என்ற மாபெரும் வெற்றிப் படத்தில் நடித்த நானி கதாநாயகனாகவும், பிந்து மாதவி, ஹரிப்ரியா நாயகியாகவும் நடிக்கிறார்கள்.
மேலும் ராவ்ரமேஷ், வெண்ணிலா கிஷோர், கணேஷ் இவர்களுடன் ஒரே ஒரு பாடல் காட்சியில் மேக்னா நாயுடு நடித்திருக்கிறார்.
இப்படத்தில் வசனம் எழுதி தமிழாக்கம் செய்து வருபவர் A.R.K.ராஜராஜா. இப்படம் பற்றி A.R.K ராஜராஜா கூறுகையில், பத்தாயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்கார தாத்தா, தன் பேரன் நாணியின் பொறுப்பில்லா தனத்தைப் பார்த்து அவனை திருத்த ஒரு யோசனை செய்கிறார்.
ஒரு விடுதியில் தங்கிப் படித்து அவன் பட்டதாரியாக வேண்டும். அப்போது
தான் அவன் அந்த சொத்துகளுக்கு வாரிசாக முடியும் என்று உயில் எழுதி வைத்துவிடுகிறார்.
வசதியாக வாழ்ந்த நானி கிராமப்புறத்தில் உள்ள கல்லூரி விடுதியில் பத்து பேரோடு தங்க வேண்டியதாகிறது.
அப்படி தங்கிய அவன் படித்து, வெற்றி பெற்று பத்தாயிரம் கோடியை அடைந்தானா? என்பதை நகைச்சுவை மற்றும் செண்டிமென்ட் கலந்து உருவாக்கி உள்ளார் இயக்குனர்.
தெலுங்கில் பிள்ள ஜமீன்தார் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படமே, தற்போது தமிழில் ஜமீன் என்ற பெயரில் படமாகி இருக்கிறது.
நானி நடித்த நான் ஈ படத்தின் வெற்றிக்குப் பின்பு வெளியான பிள்ள ஜமீன்தார் படமும் அமோக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு - சாய்ராம்
இசை - செல்வகணேஷ்
பாடல்கள் - உவரி.க.சுகுமார், சுதந்திரதாஸ், ஜெயமுரசு, அருண்பாரதி
எடிட்டிங் - பிரவீன் - ராமாராவ்
தயாரிப்பு மேற்பார்வை - ஹசரத்பாபு
இணைதயாரிப்பு - A.வெங்கட்ராவ்
தயாரிப்பு - சுசித்ரா துரை
இயக்கம் - ஜி. அசோக்

பிரியாணி சாப்பிட்டு பட்டினி


நடிகை திரிஷாவின் ஒல்லியான உடம்பைப் பார்த்து ஆச்சர்யம் மற்றும் பொறாமைபடாதவர்கள் இருக்க முடியாது.
முதல் படத்தில் எப்படி இருந்தாரோ, அதேபோலதான் இப்போதும் இருக்கிறார். அவரது உடம்பு ஒல்லியாக இருப்பதற்கான ரகசியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசைவப்பிரியையான திரிஷாவுக்கு பிரியாணி என்றால் போதுமாம் வழக்கத்தை விட, இரண்டு மடங்கு சாப்பிடுவாராம்.
அதேசமயம், உடம்பு எடை போட்டு விடக்கூடாது என்பதற்காக மறுநாள் கொஞ்சம் பட்டினியும் கிடப்பாராம்.
முதல் நாள் சாப்பிட்ட பிரியாணியின் விளைவுகள் தன்னை பாதிக்காத அளவுக்கு கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார் என்பதே திரிஷாவின் உடல் எடை குறைவாக இருப்பதற்கு காரணம் என்கிறது கோடம்பாக்கம்.
 

சித்தார்த் காதலிக்கு இன்று பிறந்தநாள்


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சமந்தா இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
சென்னையில் வளர்ந்த சமந்தா தமிழில் பானா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
அதனால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தாவின் கைவசம் அதிகமான படங்கள் இருக்கின்றது.
ஜபர்தஸ்த் என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது சமந்தாவுக்கும், சித்தார்த்துக்கும் இடையே காதல் மலர்ந்தது.
தங்களின் காதலைக் குறித்து சித்தார்த் கூறுகையில், விரைவில் சமந்தாவுடன் திருமணம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் எப்பொழுது என்று இருவரும் இதுவரை சொல்லவில்லை
 

வியாழன், 25 ஏப்ரல், 2013

நடிகர் கமல், கௌதமி மீது பொலிசில்,,,


இந்திய கலாசாரத்தை சீரழிப்பதாக நடிகர் கமல்ஹாசன் நடிகை கவுதமி ஆகியோர் மீது பொலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:
விஜய் டிவி சேனலில், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. கடந்த, 15,16,17, ஆகிய நாட்களில், இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி சிறப்பு விருந்தினர்களாக, கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளரான, நடிகர் பிரகாஷ்ராஜ், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம், உங்களுக்கு கமலை பிடிக்குமா? என, கேட்கிறார் எல்லாரும் பிடிக்கும் என்கின்றனர். ஒரு நடுத்தர வயது பெண், எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். அதற்கு பிரகாஷ்ராஜ், உங்களுக்கு, கமலிடம் நிறைவேறாத ஆசை, என்ன? என, கேட்கிறார்.
அந்த பெண், கமலை நான் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்கிறார். இதோ, இப்போதே உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள் என, பிரகாஷ்ராஜ் கூற, நடிகர் கமலை அந்த பெண் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து என் வாழ்வின் லட்சியம் நிறைவேறியது முத்தம் கொடுக்கும் போது, என் கணவரை வெளியே அனுப்பி விட்டேன் என்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், நடிகை கவுதமிக்கும், உங்களுக்கும் என்ன உறவு? என, பிரகாஷ் ராஜ் கேட்க நாங்கள் கணவன், மனைவி அல்ல பார்ட்னர் உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்று கமல் கூறியுள்ளார்.
இதுதவிர, நடிகை திவ்யதர்ஷினி என்பவரும், கமலை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை, குடும்பத்துடன் பார்க்கும் பொது அறிவு நிகழ்ச்சியில், இது போன்ற அடுத்தவர் மனைவி, நடிகரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதும் நடிகர், நடிகை இருவரும், கணவன் மனைவியாக இல்லாமல், உடலுறவில் ஈடுபடுவோம் என்பதும், நம் நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிப்பதுடன், பாலியல் வன்கொடுமைகளை தூண்டுவதாக உள்ளது.
நிகழ்ச்சியை ஒளிபரப்பிய, விஜய் டிவி நிர்வாகம் நடிகர்கள் கமல், பிரகாஷ்ராஜ், நடிகை கவுதமி மற்றும் நடுத்தர வயது பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

கௌரவம் ( காணொளி, இணைப்பு)

 
’மொழி’, 'அபியும்நானும்’ உள்ளிட்ட வெற்றி திரைக்காவியங்களை தந்த இயக்குனர் ராதா மோகன் - தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் தான் கௌரவம்.
படிப்பு, நாகரீகம், விஞ்ஞானம் என்று அனைத்து மாறுதல்களையும் ஏற்று அனுபவிக்கும் இந்த சாதிய கட்டமைப்பு, தலித் மக்களை மட்டும் அவர்களின் அடிப்படை உரிமையைக் கூட அனுமதிக்க விடுவதில்லை.
இன்னமும் செருப்புப் போட்டு தெருவில் நடக்க முடியாத நிலை, மேற்படிப்பு படித்தால் ஒதுக்கி வைக்கும் சாதீய கட்டுப்பாடுகள், தெருவோர டீக்கடைகளில் இரட்டை டம்ளர், மற்ற சாதியினருடன் ஒன்றாக உட்கார்ந்து ஒரு சினிமா கூட பார்க்க முடியாத கொடுமை, சாலை முனைகளில் மூடப்பட்டுக் கிடக்கும் சூரியனாய் அம்பேத்கர் சிலை.
இதையெல்லாம் முதன்முறையாக ஒரு சினிமாவில் காட்சிகளாய் வைத்திருக்கிறார்கள் என்றால் அது இந்த 'கௌரவ'த்தில்தான்.
குடும்ப கௌரவம் என்ற பெயரில், தன் சாதி கௌரவத்தைக் காக்க எதையும் செய்யத் துணியும் ஒரு குடும்பம் அல்லது கிராமத்தின் கதைதான் இந்தப் படம்.
தன் அலுவலக வேலையை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பும் வழியில் உடன்படித்த நண்பனின் கிராமத்தைப் பார்க்கிறார் நாயகன் அல்லுசிரீஷ்.
நண்பனைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது தான் அவன் உயர் சாதி பெண்ணை காதலித்து, ஊரைவிட்டே ஒடிப்போனதாகவும், அதன் பின்னர் அவனைப் பற்றியோ அந்தப் பெண்ணைப் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள்.
நண்பனைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என்று களமிறங்குகிறார். உடன் படித்த நண்பர்களுக்கும் தகவல் சொல்லி திரட்டுகிறார். நண்பனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.
யாரும் தொடத் தயங்கும் தலித்களுக்கு எதிரான சாதீய கொடுமைகளை இந்தப் படம் மூலம் சாட முயன்றுள்ள இயக்குனர் ராதாமோகன்.
அதை நினைத்த மாதிரி சொல்ல முடியாமல் அல்லது எதற்காகவோ சமரசம் செய்து கொண்டதில் சற்றே சறுக்கிவிட்டார்.
ஆரம்ப காட்சிகளில் தெரியும் அழுத்தம், போகப் போக நீர்த்துப் போகிறது. ஊர் பெரிய மனிதர் பிரகாஷ்ராஜையும் அவரது மகனையும் காட்டும்போதே, காணாமல் போன ஜோடிக்கு என்ன நேர்ந்திருக்கும், அந்த குடும்பத்தின் சாதி கௌரவம் எப்படிக் காப்பாற்றப்பட்டிருக்கும் என்ற உண்மை தெரிந்துவிடுகிறது.
அதற்குமேல் நகரும் காட்சிகள் ஒரு சடங்கு மாதிரி ஆகிவிடுவதுதான் படத்தின் பெரிய மைனஸ். யாரும் போகத் தயங்கும் அந்த பேய்க் கோயிலில் மனநிலை பிறழ்ந்த சிறுவனைக் காட்டும்போதே, அவன்தான் இந்தக் கதையின் முக்கிய சாட்சி என்பதுகூட எளிதாய் புரிந்துவிடுகிறது.
பாதிக்கப்படும் சமூகத்தையும் அவர்களுக்கு நேரும் அவலங்களையும் காட்டிய ராதா மோகனால், பாதிப்பை ஏற்படுத்தும் சாதியை குறிப்பிட்டுச் சொல்ல முடியாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில், ஆதிக்க சாதி என்ற நிலையில் இருக்கும் எந்த சாதிக்கும் இந்த குணம் பொதுவானதுதானே.
நாயகன் சிரீஷுக்கு நடிப்பு, உடல்மொழி என்று எதுவும் சரியாக வரவில்லை. அவர் இந்தப் படத்துக்கு சரியான தெரிவுமல்ல. தெலுங்குக்கான ராதாமோகனின் இந்த சமரசம், தமிழையும் காவு வாங்கிவிட்டது. நாயகி யாமி குப்தா சில காட்சிகளில் பரவாயில்லை.
ஆனால் அவருக்கு படத்தில் என்ன வேலை என்பதுதான் புரியவில்லை. நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் நண்பர்களை இணைத்து போராடும் காட்சிகள், சமீபத்திய மாணவர் போராட்டங்களை நினைவூட்டின.
நாடகத்தனமாக இருந்தாலும், நடப்பது சாத்தியமே. நாசரை வீணடித்திருக்கிறார்கள். நான்கைந்து காட்சிகளில் வருகின்ற பிரகாஷ் ராஜ் அடக்கி வாசிக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாகத் தெரிபவரை, க்ளைமாக்ஸில் நல்லவராக்கியிருக்கிறார் இயக்குனர்.
வழக்கம்போன்று குமரவேலுக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். ப்ரீத்தியின் ஒளிப்பதிவும், தமனின் இசையும்
பரவாயில்லை என்னும் அளவுக்குதான் உள்ளன.
ஆனால் விஜியின் வசனங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக சென்னையைப் பற்றியும், ஆதிக்க சாதியினரிடம் அடிபட்ட வலியில் 'நாம அடிச்சா ரத்தம் வராதாடா' என்று குமரவேல் கொந்தளிக்கும் காட்சியில் வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும் அந்த வலியை ekf;Fஉணர வைக்கிறது.
ஒரு கிராமம் கிடக்கு.. பச்சையுடுத்திய வயலுக.. அச்சமுடுத்திய பயலுக வாழ... என்ற பாடல் வரிகள் மதன் கார்க்கியை மெச்ச வைக்கின்றன. தலித்களின் வலியை ஒரு தலித்தான் சொல்ல வேண்டுமென்ற
கட்டாயமில்லை.சமூகத்தில் ஒரு பார்வையாளனாக நிற்கும் யாரும் சொல்லலாம். அப்படியொருவர்தான் ராதா மோகன். நல்ல முயற்சி முழுமையாக இல்லையே என்ற ஆதங்கத்துடன் விமர்சிக்க வேண்டியுள்ளது.,
 

ரஜினி-ஸ்ரீதேவி திடீர் சந்திப்பு ,,,


மீண்டும் நடிக்க வந்துள்ள நடிகை ஸ்ரீதேவி இரு தினங்களுக்கு முன் சென்னை வந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பின்னர் மும்பைக்கு புறப்படும் முன் தனக்கு நெருக்கமானவர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது. இதில் பழைய நடிகைகள் லதா, குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ் போன்றோர் பங்கேற்றனர்.
விருந்து நடந்து கொண்டு இருந்தபோது ரஜினிகாந்த் திடீரென வந்தார். அவரை யாரும் எதிர்பார்க்கவில்லை.
ரஜினி விருந்துக்கு வந்தது ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கணவர் போனிகபூருடன் இணைந்து ரஜினியை வரவேற்றார்.
ஒரு மணி நேரத்துக்கு மேல் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பழைய படங்களில் இணைந்து நடித்த படங்கள் பற்றி ஒருவருக்கொருவர் பேசி 10 வருட நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இருவர் இடையே இந்த சந்திப்பு நடந்துள்ளது. இது குறித்து விருந்தில் பங்கேற்ற பூர்ணிமா பாக்யராஜ் கூறுகையில், ரஜினிக்கு தன்னுடன் 1980 களில் நடித்த நடிகைகளை மிகவும் பிடிக்கும்.
ஒவ்வொரு வருடமும் 80களில் நடித்த நடிகர்-நடிகைகளை சந்தித்து பேசும் நிகழ்ச்சியில் அவரும் கலந்து கொள்வது உண்டு என்றும் அதுபோல் இந்த விருந்துக்கும் வந்துள்ளார் எனவும் கூறினார்.
 

ரம்யா நம்பீசனுக்கு விரைவில் திருமணம் ii


நடிகை ரம்யா நம்பீசனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை ரம்யா நம்பீசனுக்கும் மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மலையாள சினிமா பரபரப்புக் கிளம்பியுள்ளது.
ரம்யா நம்பீசனும் உன்னி முகுந்தனும் இது பத்திரமனல் என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்ததாம். தொடர்ந்து ரகசியமாக காதலை வளர்த்து வந்த இந்த ஜோடி, தங்களது காதல் வெளிஉலகிற்கு தெரிய வந்துள்ளதால் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார்களாம்.
ரம்யா நம்பீசன் ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

இனியும் இதுபோன்று நடித்தால்,,,,


 குடும்பத்தில் சர்ச்சைகள் உண்டாகும்:
தமிழ் திரையுலகில் புன்னகை இளவரசி என பெயர் பெற்றவர் சினேகா.
கடந்த ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தில் சினேகாவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இதனிடையே சினேகாவை சந்தித்து இயக்குனர் ஒருவர் கதை கூறியிருக்கிறார். கதை மிகவும் பிடித்திருந்தும் அதில் நடிக்க மறுத்திருக்கிறார் சினேகா.
இது குறித்து அவர் கூறியதாவது: கணவன்-மனைவியின் அன்யோன்யத்தை சொல்லும் நல்ல கதைதான். ஆனால் படுக்கையறை காட்சிகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். அதுவும் மேலோட்டமாக இல்லாமல் ரொம்பவும் ஆழமாக வைத்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் இதுபோன்று மற்ற நடிகர்களுடன் அதிக நெருக்கமாக நடித்தால் அது குடும்பத்தில் சர்ச்சைகளை உண்டாக்கும். முந்தைய படங்களில் இதுபோன்று நடித்தபோதேல்லாம் நான் தனி மனுஷி. ஆனால் இப்போது நான் இல்லத்தரசி என்றார்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்




எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/


வியாழன், 11 ஏப்ரல், 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா ( காணொளி, இணைப்பு)


திரையரங்கங்களை நிரப்ப கதைகளை நம்பாமல் கொமெடியை மட்டும் நம்பி படத்தை எடுக்கும் சமீப காலத் தமிழ் சினிமாவின் இந்த வார படம் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’.
அரசியல்வாதியாக துடிக்கும் இரு வெட்டி இளைஞர்களின் கலகலப்பான கொமெடி தான் கதை.
விமல், சிவகார்த்திகேயன் இருவரும் நண்பர்கள். வேலையின்றி பெற்றோர் பணத்தில் குடி, கும்மாளம் என்று இருக்கிறார்கள்.
மாநகராட்சி ஆணையர் (கவுன்சிலர்) ஆவதே இவர்கள் லட்சியம். இதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. நமோ நாராயனணை அண்டிக் கிடக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் விமலுக்கு,மருத்துவமனையில் வேலை பார்க்கும் பிந்து மாதவி மீதும் சிவகார்த்திகேயனுக்கு ஜெராக்ஸ் கடை நடத்தும் ரெஜினாவிடமும் காதல் மலர்கிறது. அப்பெண்களோ வெறுப்பு காட்டி துரத்துகிறார்கள்.
இந்நிலையில் தேர்தலும் வருகிறது. கவுன்சிலர் பதவிக்கு இருவரும் போட்டியிட்டார்களா? காதல் வென்றதா என்பது தான் கிளைமாக்ஸ்.
முழு நீள கொமெடி படம். காட்சிகளை தொடர் சிரிப்பில் நகர்த்துகிறார் இயக்குனர் பாண்டிராஜ். மது பாட்டில்களை பரப்பி வைத்து இந்த சனியனை தலை முழுக வேண்டும் என்று விமல், சிவகார்த்திகேயன், அறிமுகமாகும் ஆரம்பமே அமர்க்களம்.
விமலுக்கு மைல்கல் படம். காதல், கொமெடியில் விளாசுகிறார். பிந்துமாதவி அழகில் வழிந்து மருத்துவமனைக்குள் அவர் போவதை பார்த்து என் மனைவி டொக்டர் என்று தனக்குதானே சொல்லி மகிழ்வதும் பிறகு நர்சு உடை அணிவதை பார்த்து பரவாயில்லை என விரக்தியாய் சமாதானமாவதும், டோக்கன் கொடுப்பதை கண்டு அதிர்வதும் திரையரங்கத்தை குலுங்க வைக்கிறது.
சிவகார்த்திகேயன் காதல் இன்னொரு ரகளை... ரெஜினாவின் கடைக்கு போய் ஜெராக்ஸ் எடுத்து காதல் யாசிப்பது தமாஷ்.. குறும்பு பாடி- லாங்குவேஜ், கேலி வசன உச்சரிப்பு, அடிக்கடி மிமிக்ரி என்று 'பட்டை’ முருகனாகப் பட்டை கிளப்புகிறார் சிவகார்த்திகேயன்.
'உங்க அப்பா வர்ற நேரம் வந்திருச்சா... அப்போ நான் கிளம்புற நேரம் வந்திருச்சு’, 'கடத்திட்டுப் போய் அடிச்சா பரவாயில்லை... தலையிலேயே கொட்டுனாங்க’ என்று காதலுக்காக மிரளும் இடமெல்லாம் கலகலக்கவைக்கிறார். ரெஜினா வசீகரிக்கிறார்
கண்ணை சிமிட்டி சாந்தமாக வரும் பிந்துமாதவி அப்புறம் இன்னொரு முகம் காட்டி விளாசுகிறார். விமலை தாவி குதித்து அடித்துப்பதும் அவர் அடி தாங்காமல் ஓடுவதும் கொமெடி தான்.
ஆம்பிளையை கை நீட்டி அடிப்பது தப்பு என்று பிந்துமாதவி தந்தையிடம் முறையிட அவர் என் மனைவி மாமியாரிடமும் அடி வாங்கி இருக்கிறேன். இது பரம்பரையா வருது என்று பதிலுரைக்க திரையரங்கே குலுங்குகிறது. .
மனைவி, மாமனார் குடும்பத்தினரின் கேவல பேச்சை பொருட்படுத்தாமல் அவர்கள் தயவில் இருக்கும் பரோட்டா சூரியும் கலகலப்பூட்டுகிறார்.
மாமனார் வெட்கங்கெட்டவன் என் செருப்பை போட்டுட்டு போறான் என்று சூரியை திட்ட, அது பரவாயில்லை காலையில் என் பிரஸ்ஸில் பல் தேச்சான் என்று மாமியார் புலம்புவது சிரிப்பை அடக்க முடியாமல் செய்கிறது.
அரசியல்வாதி நமோ நாராயணன் பொதுக்கூட்டத்தில் தெரியாதவர்கள் பெயரை அடியாட்கள் மூலம் தெரிந்து பெயர் சொல்லி அழைப்பது தனக்கு போட்ட சால்வைகளை ஜவுளி கடைகளில் விற்பது அரசியல் கொமெடி.
டெல்லி கணேஷ், மனோஜ்குமார் தந்தை கதாபாத்திரங்களில் அழுத்தம் பதிக்கின்றனர். கிளைமாக்சில் இருவரையும் கடவுள், நாயகன் அளவுக்கு உயர்த்தி உருக வைத்து விழிகளில் நீர் மூட்ட செய்கிறார் பாண்டிராஜ்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. விஜய் ஒளிப்பதிவு பலம்.
மொத்தத்தில் “கேடி பில்லா கில்லா ரங்கா” அவ்லோ பெரிய கொமெடி இல்ல,,
 

ஹன்சிகாவுக்கு பிடித்த கதாநாயகன்


கொலிவுட்டில் ஹன்சிகா, ஆர்யா நடித்த சேட்டை திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நாயகி ஹன்சிகா தான் நடிக்கும், ஒவ்வொரு படங்களின் நல்ல புகைப்படங்களை தனித்தனி ஆல்பங்களாக ரெடி செய்து, வைத்திருக்கிறார்.
அத்துடன், மை ஹீரோஸ் என்ற பெயரில், தான் ஜோடி சேர்ந்த, கதாநாயகர்களின் புகைப்படங்களை தனி ஆல்பமாகவும் வைத்திருக்கிறார்.
அவரிடம், இதுவரை நடித்த கதாநாயகர்களின் மனங்கவர்ந்த நாயகன் யார் என்று கேட்டால், இந்த மாதிரி கேள்வியெல்லாம் இப்ப என்னிடம் கேட்கக்கூடாது. இதற்கு பதில் அளிக்கும் நேரமும், இதுவல்ல என்று நழுவுகிறார்.
மேலும், எனக்கு பிடித்தமானவர்களை விட, என்னை யாருக்கெல்லாம் பிடிக்கிறதோ அவர்களே எனக்கு பிடித்தமானவர்கள்.
குறிப்பாக, என்னுடன் நடிக்க ஏங்கும் எல்லா கதாநாயகர்களையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்கிறார் ஹன்சிகா.
 

கௌதம் கார்த்திக்குடன் இணையும் லஷ்மி மேனன்


நடிகை லக்ஷ்மி மேனன் சிலம்பாட்டம் இயக்குனர் சரவணன் இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறார்.
கௌதம் கார்த்திக் மணிரத்னத்தின் கடல் படத்திற்கு பின்பு ஐஷ்வர்யா ரஜினிகாந்தின் படத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சிலம்பாட்டம் புகழ் இயக்குனர் சரவணன் படத்தில் நடிக்க கௌதம் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். கடல் படத்தில் மீனவராக நடித்த கௌதம் இதில் கல்லூரி மாணவராக நடிக்கிறார். அவரின் காதலி தான் லக்ஷ்மி.
ஃபோட்டோஷூட் முடிந்து விட்ட நிலையில் வரும் மே மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறது.
ஏற்கெனவே கௌதம் நடித்த கடல் படம் சரியாக ஓடாததால், தற்போது நடிக்கும் இந்தப் படம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

நீச்சல் தெரியாமல் ஆழ்கடலில் மீன்பிடித்த தனுஷ்


கொலிவுட்டில் பரத்பாலா இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள மரியான் படத்தில் மீனவனாக நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.
சாதாரண மீனவன் போல் இல்லாமல் 50 அடி ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடித்து வரும் அதிரடியான கதாபாத்திரம் மரியான் படத்தில் தனுஷிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிஜத்தில் நாயகன் தனுஷிற்கு நீச்சல் தெரியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் தண்ணீருக்குள் மூச்சு பிடித்து நடிக்க முடியாது என்பதால் தனுஷிற்கு பயிற்சி கொடுக்க வெளிநாட்டில் இருந்து ஒரு சிறப்பு பயிற்சியாளரை வரவைத்துள்ளனர்.
அவர் கொடுத்த பயிற்சிக்கு பின்பு தான், 50 அடி ஆழ்கடலில் ஆக்சிஜன் கூட இல்லாமல் உப்புத் தண்ணீரில், கண்ணாடி அணியாமல் தத்ரூபமாக நடித்தாராம் தனுஷ்.
இதனால் முதலில், கடலை பார்த்தவுடனேயே கலக்கம் அடைந்த தனுஷ், பயிற்சிக்கு பின் தைரியமாக கடலில் இறங்கி படக் குழுவினரை ஆச்சர்யப்பட வைத்தாராம்.
 

புதன், 10 ஏப்ரல், 2013

சித்திரையை வரவேற்போம்,,,,


பகுதி.2    கடந்த சில ஆண்டுகளுக்குமுன் எஸ் ரி எஸ் ஐீ ரி விக்காக தயாரிக்கப்பட்டு ஐீ ரீவியில்
ஒளிபரப்பான செல்வி நித்யா கந்தசாமி அவர்களின் வீணை இசை 2013 தமிழர் சித்திரைத்திருநாளுக்காய்
உங்கள் பார்வைக்குத்தருவதில் இணைய நிர்வாகம் மகிழ்வடைகிறது அதுமட்டுமடல்லாமல் புலம்பெர்வாழ்வியலில்
தங்கள் பிள்ளைகளுக்கு கலைத்துறையை பயிற்றுவிக்கும் அனைவருக்கும் இந்த இணைய நிர்வாகத்தினரின் நன்றிகள்
இனி வருங்காலம் இளைஞர்கள் கையில் அவர்கள்தான் எம் மண்ணின் வேர்கள் அவர்களை அனைவரும்
வாழ்த்துவோம் வளம்பெறச்செய்வோம் வாழ்க ஈழவர்கலை இதன் மறு தொடர் மிகவிரைவில்,,,,,{வீணை இசை காணொளி}
 

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

நம் நாட்டுக்கலைஞர்களுடன் போட்டி போடும் இந்தியச்சிறுமி


நம் நாட்டுக்கலைஞர்களும் கலைப் படைப்புக்கள் மேலும் சிறப்பபாக உயர்வுடன் வளர இவர்களுக்கு எமது நல் வாழ்த்துக்கள் எமது பாராட்டுக்களும் உரித்தாகுக ,,{காணொளிஇணைப்பு}

திங்கள், 8 ஏப்ரல், 2013

நெடுந்தீவு முகிலனின் 4வது குறும் படம் “சாம்பல்”

நெடுந்தீவு முகிலனின் 4வது குறும் படம் “சாம்பல்” இப் படம் நெடுந்தீவிலேயே படமாக்கப்பட்டதுdiv dir="ltr" style="text-align: left;" trbidi="on">
 

முகிலனின் முதலாவது குறும் படம் “தண்ணீர்”

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த நெடுந்தீவு முகிலனின் முதலாவது குறும் படம் “தண்ணீர்,,,,,,

சனி, 6 ஏப்ரல், 2013

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் காஜல்


தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் படிப்புக்கு உதவி செய்து வருகின்றார்.
கார்த்தியுடன் இணைந்து நடித்த 'நான் மகான் அல்ல' என்ற படவெற்றி மூலம் தமிழில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றவர் காஜல்.
மேலும் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்து வெளியான 'துப்பாக்கி' படம் கூட மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துவிட்டது.
இதனையடுத்து, காஜலின் அடுத்த படமான 'ஜில்லா' படத்திற்கும் விஜய் பரிந்துரைத்ததாகவும், தற்போது அப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கார்த்தியுடன் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்திலும் நடித்துவருகிறார்.
மேலும், இவர் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை அரசு பத்திரங்களில் முதலீடு செய்து வருவதுடன் ஆதரவற்ற குழந்தைகள் சிலரது படிப்புக்கும் உதவி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 

காதலின் புரிதலை வலியுறுத்தும் 'திருமணம்


ஒஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் இரு மதங்களின் திருமண சம்பிராதயாயங்களை கொண்டு இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் படம் 'திருமணம் என்னும் நிக்காஹ்'.
இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலும், ஹைதராபாத் நகரிலும் முடிவடைந்தது.
ஜெய் ஜோடியாக நஸ்ரியா நசீம் அறிமுகமாகும் இப்படம் காதலானாலும் சரி, மதமானாலும் சரி புரிதல் முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்தும் படம் என்று கூறுகிறார் இயக்குனர் அனீஸ்.
இப்படத்தின் இன்னொரு கதாநாயகியாக நடித்து உள்ளார் புது முகம் ஹெப்பா படேல்.
படம் குறித்து ஹெப்பா கூறுகையில், என் முதல் படமாக ஒஸ்கர் Films நிறுவனத்தின் படம் அமைந்தது என் பாக்கியமே, நான் என் நிஜ வாழ்விலும் இப்படத்தின் கதாபாத்திரம் போலவே இருந்திடலாமோ என்று வைக்க தோன்றும் கதாபாத்திரம்.
என் உடை அலங்காரமும், படத்திற்காக போடப்பட்ட அரங்கு அமைப்பும் என்னை பிரமிக்க வைத்தது என்று கூறியுள்ளார்.
மும்பை நடன இயக்குனர் சபீனா கானின் நடன அமைப்பில், லோகநாதனின் ஒளிப்பதிவில், காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பில், ஜிப்ரான் இசை அமைப்பில் கார்த்திக் நேஹ்தா, காதல் மதி, மதன் கார்கி, தேன் மொழி தாஸ் ஆகியோர் பாடல் இயற்ற மதன் கார்கி -அனீஸ் வசனம் இயற்ற, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் அறிமுக இயக்குனர் அனீஸ்
 

பேய் பாதுகாத்து வரும் புதையலை தேடும்



புதுமுக இயக்குனர் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'கோப்பெருந்தேவி'.
சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு எஸ்.எம்.பிரசாந்த் இசையமைக்கிறார்.
இதில் கோவை சரளா, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், மனோபாலா, சாமி நாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு உட்பட பதினெட்டு நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.
இவர்களுடன் ஊர்வசி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், இளவரசு ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள்.
அடர்ந்த காட்டுக்குள் பிரம்மாணடமான புதையல் இருக்கிறது. அந்த புதையலை பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது.
இந்த விடயம் தெரியாமல் புதையலை எடுக்க ஒரு நகைச்சுவைப் பட்டாளம் கிளம்புகிறது. அவர்கள் பேயிடம் மாட்டி என்னவெல்லாம் பாடுபட்டார்கள் என்பது தான் 'கோப்பெருந்தேவி' படத்தின் கதை.
முதலில் இந்தப் படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் திரிஷாவை நடிக்க வைக்கும் முயற்சி நடந்துள்ளது. ஆனால் அவர் திகதி இல்லாததால் நடிக்கவில்லை.
இந்நிலையில் திரிஷா இடத்தில் தற்போது முன்னணி நாயகி ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐதராபாத், ராஜமுந்தரி,பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, விழுப்புரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கோடை விடுமுறை விருந்தாக 'கோப்பெருந்தேவி' மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
 

வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள்:


தமிழில் பிரபல கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி கதை எழுத, அனில் இயக்கியிருக்கிற படம் ‘கிளைமாக்ஸ்’.
இந்த படம் தமிழில் நடிகையின் டைரி என்ற பெயரில் வெளியாக உள்ளது.
தமிழில் எச்ஏகே தயாரிப்பில் இயக்குனர் ஆதிராம் நிர்வாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ‘நடிகையின் டைரி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் இயக்குனர் அனில், நிர்வாக தயாரிப்பாளர் ஆதிராம், நடிகை சனாகான், தயாரிப்பாளர் கேயார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் நடிகை சனாகான் பேசுகையில், நான் எப்போதுமே நல்ல கதைகளை மட்டுமே தேடிப்பிடித்து நடிக்கிறேன். எதற்காகவும் யாருக்காகவும் நான் வளைந்து கொடுப்பதில்லை.
தைரியசாலியான பெண். இந்த படம் ஒரு நடிகையின் வாழ்க்கையை பற்றியது என்பதால் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்தேன். நடிகை சில்க்கின் படங்களை பார்த்தேன்.
அவரின் உடல் அசைவுகள், நடை, உடை, பாவனைகளை கவனமாக பார்த்து அதன்படியே சில காட்சிகளில் நடித்திருக்கிறேன்.
உண்மையில் நடிகையாக இருப்பது ரொம்ப கஷ்டமான விடயம் என்றாலும் வாய்ப்புக்காக நான் எங்கும் போவதில்லை. சில நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளக்கூட தயங்குவதில்லை.
அது அந்த நடிகைளின் தனிப்பட்ட விருப்பம். சூழ்நிலைகளைப் பொறுத்து நடிகைகள் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால், நான் அப்படியில்ல. அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்ததில்லை. வாய்ப்புகளுக்காக நான் வளைந்து கொடுப்பதில்லை.
இந்த படத்தை ஸ்மிதாவின் ஆவி பார்த்தாலும் என்னை வாழ்த்தவே செய்யும். அந்தளவுக்கு படத்தில் அவரைப்போலவே வாழ்ந்திருக்க முயற்சித்திருக்கிறேன்.
இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். நடிகையின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மிக தெளிவாக இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை அப்படியே செய்திருக்கிறேன். ஆபாசமாக நடிக்கவில்லை. அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நடிகை சில்க்கின் மரணம் தொடர்பாக தெளிவான காரணம் எனக்கு தெரியவில்லை.
எனினும் நடிகை சில்க்கின் இறப்பு சினிமாவுக்கு பெரும் இழப்பு என்பது மட்டும் நிச்சயம் என்றும் தொடர்ந்து இதுபோன்று சவாலான வேடங்கள் வந்தால் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்
 

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

நாயகியாக நடிக்க தயாராகும் நமீதா


கொலிவுட்டில் எங்கள் அண்ணா, ஏய் படங்களில் நடித்த நமீதா, நீண்ட இடைவேளைக்கு பின்பு, நாயகியாக நடிக்க தனது எடையைக் குறைத்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான படங்களில் மிகவும் குண்டா தெரிந்தார். இதனால் கதாநாயகியாக நடிக்க அவரை யாரும் அழைக்கவில்லை.
கடைசியாக தமிழில் இளைஞன் படத்தில் நடித்தார். இப்படம் கடந்த 2011ம் ஆண்டில் வந்தது. புது நடிகைகள் வரத்தும் அவரை ஓரம் கட்டி விட்டது.
தற்போது ஜவுளி கடைகள் திறப்பு போன்ற தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நமீதா ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் படங்களில் நடிக்க முடிவு செய்து உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தினமும் பலமணி நேரம் ஜிம்மிலேயே இருக்கிறார். உணவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்.
இது குறித்து நமீதா கூறுகையில், எனக்கு திறமையும் வயதும் இருக்கிறது. எனவே கதாநாயகியாக மீண்டும் நடிப்பேன்.
உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து வருகிறேன். கதாநாயகன் யாராக இருந்தாலும் பரவாயில்லை.
புதுமுகம், வயதில் மூத்த நடிகர்கள் என்றெல்லாம் பார்க்காமல் ஜோடியாக நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
 

நடிகை ஸ்ரீ தேவிக்கு பத்மஸ்ரீ விருது

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கான பத்ம விருதுகள் இன்று டில்லியில் உள்ள ராஷ்டிரபதிபவனில் வழங்கப்பட்டது.
நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
முன்பே கூறியதுபோல் விழாவைப் புறக்கணித்தார் பாடகி ஜானகி. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி வருகிறது.
2013-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதன் படி நடிகை ஸ்ரீ தேவிக்கு பத்மஸ்ரீ விருதும், நடிகை சர்மிளா தாகூருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி புறக்கணித்துள்ளார்.
 

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

சொகுசு வாழ்க்கை வாழும் அளவிற்கு வருமானம் இல்லை: ஸ்வாதி


கொலிவுட்டில் சுப்ரமணியபுரம் படத்தில் நடிப்பதற்கு முன்பே நடிகை ஸ்வாதி ஆந்திராவில் மிகவும் பிரபலமானவர் ஆவார்.
ரிவி தொகுப்பாளினி, நாடக நடிகை, மாடல் என இவருக்கு பல முகங்கள் உண்டு.
கடுமையாக உழைத்தாலும், ஸ்வாதி வீட்டின் பீரோவில் இன்னும் பணம் சேரவில்லையாம். இதை வெளிப்படையாக, அவரே ஒப்புக் கொள்கிறார்.
கணிசமான படங்களில் நடித்து விட்டேன். ஆனால், இன்னும் நான் மிடில் கிளாஸ் குடும்ப பொண்ணு தான்.
என் அப்பாவின் சொற்ப வருமானத்தை நம்பித் தான், எங்கள் குடும்பத்தின் வண்டி ஓடுகிறது.
சாதாரண வீட்டில் தான், வசிக்கிறோம். சொகுசு பங்களாவோ, ஆடம்பர காரோ எங்களிடம் இல்லை.
சொகுசு வாழ்க்கை வாழும் அளவுக்கு, எங்கள் குடும்பத்துக்கு வருமானம் இல்லை என பகிரங்கமாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் ஸ்வாதி.
ஒரு படத்தில் நடித்ததுமே, பில்டப்களை அள்ளி விடும் கதாநாயகிகளுக்கு மத்தியில், ஸ்வாதி கொஞ்சம் வித்தியாசமானவராக காணப்படுகிறார்.
 

தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் இன்று உண்ணாவிரதம்


இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று(02.04.13) தொடங்கியுள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் சங்கம் வளாகத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர், நடிகையர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இலங்கையில் நடந்த இனப்படு‌கொலையை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் துவக்கி வைத்த போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஒரு பெரும் புரட்சியாக வெடித்தது.
தொடர்ந்து இயக்குனர்கள் சங்கம் சார்பில் இயக்குனர் அமீர் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
இயக்குனர் சங்கத்தை தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் அனைத்து நடிகர் சங்க உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் அழைப்பு விடுத்தார்.
அதன்படி, சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.
காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களும் பங்கேற்க உள்ளனர்.
இவர்களோடு சேர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குனர்கள் சங்கம், பெப்சி அமைப்பு, விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம், பி.ஆர்.ஓ.க்கள் சங்கம் உள்ளிட்டவர்களும் பங்கேற்க உள்ளனர்.
நடிகர் சங்க உண்ணாவிரத போராட்டத்தால் இன்றைய படப்பிடிப்புகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (காணொளி, இணைப்பு)
 

கார்த்தியுடன் இணையும் இயக்குனர் ஹரி


கொலிவுட்டில் நடிகர் கார்த்தி, இயக்குனர் ஹரி இருவரும் முதன்முறையாக அதிரடி கூட்டணியாக இணைகிறார்கள்.
"பருத்தி வீரன் முதல்", "அலெக்ஸ் பாண்டியன்” வரை குழந்தைகள் முதல் அனைவரையும் கவர்ந்த நாயகனாக தன்னை நிலை நிறுத்தியுள்ளவர் கார்த்தி.
இங்கு மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கும் நாயகனாக உருவாகியுள்ளார்.
இவர் தற்பொழுது "பிரியாணி", "ஆல் இன் ஆல் அழகுராஜா" படங்களில் நடித்து வருகிறார்.
'தமிழ்', 'சாமி', 'ஆறு', 'வேல்', 'சிங்கம்' என்று அடுத்தடுத்து பல படங்களிலும் தன் சிங்க முத்திரையை பதித்து வருபவர் இயக்குனர் ஹரி.
இவரது படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் வசூல் வேட்டை செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த இரண்டு அதிரடி கூட்டணியும் சேர்ந்தால் அனைவருக்கும் கொண்டாட்டம் தான். தற்பொழுது 'சிங்கம் 2' படத்தை இயக்கி வரும் ஹரி அடுத்த படமாக இந்த புதிய படத்தை இயக்குகிறார்.
பெயரிடப்படாத இப்புதிய படத்தின் நடிகர் நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தெரிவு நடைபெற்று வருகிறது.
இப்படத்தை வேந்தர் மூவீஸ் சார்பில் எஸ்.மதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
பிரபல விநியோகஸ்தர், தயாரிப்பாளரான இவர் இப்பொழுது கே.பாலச்சந்தர் இயக்கி ரஜினிகாந்த் நடித்த 'தில்லு முல்லு' படத்தை அதே பெயரில் மீண்டும் தயாரித்து வருகிறார்.
இதில் சிவா, இஷா தல்வார், பிரகாஷ் ராஜ், கோவைசரளா ஆகியோர் நடித்து வருகிறார்கள்