என் தம்பிக்கு நடிக்கத் தெரியாது என்றார் வெங்கட்பிரபு. பிரியாணி படம்பற்றி வெங்கட்பிரபு கூறியது:
பிரியாணி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தந்ததுபற்றி கேட்கிறார்கள். அதற்கு காரணம் பிரச்னைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. கொஞ்சம் ஜாலியான கதைஅவ்வளவுதான்.
பிரியாணி என்று ஏன் பெயர் வைத்தீர்கள்? என்கிறார்கள். கதைப்படி ஹீரோ கார்த்தி தினமும் பிரியாணி சாப்பிடுவார். அப்படியொரு நாள் சாப்பிட போகும்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது.
அதையொட்டி கதை நகர்கிறது. இப்படத்தில் ராம்கி ரீ என்ட்ரி ஆகிறார். ஹன்சிகா, மான்டே தாக்கர் நடித்திருக்கின்றனர்.
‘நவீன சரஸ்வதி சபதம்‘ படத்தில் நடிப்பை கற்றுக்கொள்ள பிரேம்ஜி படத்தை பாருங்கள் என்று வசனம் பேசியதுபற்றி கேள்வி எழுப்புகின்றனர்.
அப்படத்தை இயக்கிய சந்துரு எனது அசிஸ்டன்ட்டாக இருந்தவர். அவர் கேட்டதால் ஒரு காட்சியில் நடித்தேன்.
பிரேம்ஜியை கிண்டல் செய்வதற்காக இப்படி பேசினேன். சென்னை 28 ஹீரோ சிவாவை கலாய்க்கலாம் என்று பார்த்தால் அவர் வெவ்வேறு தயாரிப்பாளர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அவரை கலாய்ப்பது நன்றாக இருக்காது என்று என் படத்தில் மட்டும் நடித்து வரும் பிரேம்ஜியை கலாய்த்தேன். மற்றபடி பிரேம்ஜிக்கு நடிப்பெல்லாம் தெரியாது.
பிரியாணி படத்தில் கூட அவர் வெறும் முட்டைதான். இவ்வாறு வெங்கட்பிரபு கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக