பிரபுதேவாவை பிரிந்து மறுபடியும் நயன்தாரா சினிமாவுக்கு வந்தபோது கதாநாயகி வேடம் கிடைக்கா விட்டால் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றுதான் நினைத்தாராம்.
ஆனால், அவர் மறுபடியும் நடிக்க களமிறங்கியபோது, அவரது நெருங்கிய நண்பராக இருந்த ஆர்யா, மறுபடியும் நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்பட்டு அவரை ஏ.ஆர்.முருகதாஸின் பட நிறுவனம் தயாரித்த ராஜாராணி படத்தில் கோர்த்து விட்டார்.
அதைப்பார்த்த விஷ்ணுவர்தன், ஏற்கனவே தனது பில்லா படத்தில் நடித்த ராசியான நடிகை என்பதால் மறுபடியும் அஜீத்தைக்கொண்டு தான் இயக்கிய ஆரம்பம் படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்.
இதனால், மற்ற இயக்குனர்களின் கவனமும் நயன்தாரா பக்கம் திரும்பியது. இதனால் செகண்ட் இன்னிங்சிலும் முதல் ரவுண்டுக்கு இணையாக பிசியாகி விட்டார் நயன்.
இந்தநிலையில், மறுபடியும் தனது மாஜி காதலர் சிம்புவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் நயன்தாரா, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படமொன்றிலும் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்கு வேறு சில நடிகைகளிடம்தான் பேசி வந்தாராம் இயக்குனர் ராஜா. ஆனால், ஜெயம்ரவி தான் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்று தனக்குள் இருந்த ஆசையை சொல்லி, அவரை ஜோடி சேர்த்துள்ளாராம்.
இப்படி இளவட்ட ஹீரோக்களே தனக்கு சிபாரிசு செய்வதால் சொல்ல முடியாத சந்தோசத்தில் இருக்கும் நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகளுக்கு நிகராக தனது படக்கூலியையும் படத்துக்குப்படம் உயர்த்திக்கொண்டே இருக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக