ஞாயிறு, 22 டிசம்பர், 2013

ஸ்பெஷல் நாயகி த்ரிஷா...


சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் கடந்த பிறகும் நடிப்பால் கவர்ந்து வருகிறார் த்ரிஷா.இவரைப் பற்றி ஏதேனும் தகவல்கள் வெளியான வண்ணமே உள்ளது.முன்பெல்லாம் த்ரிஷாவுக்கு கல்யாணம் என்ற பேச்சு அடிப்பட்டது, தற்போது மீண்டும் நடிக்க போகிறார் என கூறப்படுகிறது.சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை படம் நல்ல கமெண்ட்ஸ் வருவதால், மீண்டும் த்ரிஷாவுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், நான் நடித்த எல்லா படங்களும் எனக்கு முக்கியமான படங்கள். என்றென்றும் புன்னகை படம் ‘ஸ்பெஷல்' ஆன ஒன்று.இதில் பக்கத்து வீட்டு பெண் மாதிரி எளிமையான கேரக்டரில் நடித்துள்ளேன்.வலுவான
வேடத்தில் வருகிறேன், என்
பாத்திரத்தை இயக்குநர் அகமது சிறப்பாக கொண்டு வந்துள்ளார்.நகைச்சுவை படங்களில் நடிக்க எனக்கு விருப்பமாக உள்ளது, அது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் நேரம் கூடிவரும் போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாகவும், வாழ்க்கையை முக்கியமான ஒருவருடன் பகிர்ந்து கொள்வது இனிமையானது என்றும் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக