வியாழன், 26 டிசம்பர், 2013

தமிழ் சினிமா 2013: 34 படங்களில் 106 பாடல்கள்


எழுதிக் குவித்த கவிஞர் நா முத்துகுமார்!இந்த ஆண்டும் அதிக திரைப்பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையைப் பெறுகிறார் கவிஞர் - பாடலாசிரியர் நா முத்துகுமார்.தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அவர் தமிழ் சினிமாவின் அதிக பாடல்கள் எழுதிய பாடல் ஆசிரியராகத் திகழ்கிறார். தினசரி புதிய தமிழ் பாடல் ஆசிரியர்கள் உருவெடுத்து வரும் இந்த நாட்களில் இது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கவிஞர் நா முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:உங்கள் அனைவருக்கும் எனது

கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பாலும் ஆதரவாலும் கடந்த ஒன்பது ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பத்தாவது ஆண்டாக ‘2013'ம் ஆண்டிலும் அதிக படங்கள் அதிக பாடல்கள் எழுதிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.106 பாடல்கள்2013 ம் ஆண்டு நான் ‘34' படங்களில் ‘106' பாடல்கள் எழுதியுள்ளேன். இவற்றில் ‘10' படங்களுக்கு அனைத்து பாடல்களும் எழுதியுள்ளேன். இந்த தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள்தயாரிப்பாளர்கள் மற்றும் என் பாடல்களை பாடிய பாடகர்கள் பாடகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.சென்ற ஆண்டு நா முத்துக்குமார் பாடல் எழுதிய படங்கள்1. தலைவா (அனைத்து பாடல்கள்)2. தங்க மீன்கள் (அனைத்து பாடல்கள்)3. ராஜா ராணி4. வணக்கம் சென்னை5. கேடி ரங்கா கில்லாடி பில்லா6. உதயம் என்.எச் 47. ஆதலால் காதல் செய்வீர்8. சமர் (அனைத்து பாடல்கள்)9. பட்டத்து யானை10. ஐந்து ஐந்து ஐந்து (அனைத்து பாடல்கள்)11. இவன் வேற மாதிரி12. ஆல் இன் ஆல் அழகுராஜா (அனைத்து பாடல்கள்)13. சேட்டை14. ஒன்பதுல குரு.15. குட்டிப்புலி16. தில்லு முல்லு - 217. வத்திக்குச்சி18. சொன்னாப் புரியாது19. புத்தகம்20. யாருடா மகேஷ் (அனைத்து பாடல்கள்)21. மூன்று பேர் மூன்று காதல் (அனைத்து பாடல்கள்)22. மத்தாப்ப1023. சுண்டாட்டம்24. சும்மா நச்சுன்னு இருக்கு25.

 நிர்ணயம் (அனைத்து பாடல்கள்)26. துள்ளி விளையாடு27. நேரம்28. அழகன் அழகி29. கல்லாப் பெட்டி30. நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ (அனைத்து பாடல்கள்)31. சோக்காலி32. மாசாணி33. வெள்ளச்சி (அனைத்து பாடல்கள்)34. சென்னையில் ஒரு நாள்ஹிட் பாடல்களில் சில...1. வாங்கண்ணா வணக்கங்கன்னா (தலைவா)2. யார் இந்த சாலை ஓரம் (தலைவா)3. தலைவா தலைவா (தலைவா)4. தழிழ்ப்பசங்க (தலைவா)5. ஆனந்த யாழை மீட்டுகிறாய் (தங்க மீன்கள்)6. ஃபர்ஸ்ட்டு லாஸ்ட்டு (தங்க மீன்கள்)7. நதி வெள்ளம் மேலே (தங்க மீன்கள்)8. ஹே பேபி (ராஜா ராணி)9. சில்லென ஒரு மழைத்துளி (ராஜா ராணி)10. ஏ பெண்ணே பெண்ணே (வணக்கம் சென்னை)11. காற்றில் ஏதோ (வணக்கம் சென்னை)12. ஒரு பொறம்போக்கு (கேடி கில்லா கில்லாடி ரங்கா)13. யாரோ இவன் யாரோ இவன் (உதயம் என்.எச்.4)14. அழகோ அழகு (சமர்)15. விழகளிலே (ஐந்து ஐந்து ஐந்து)16. முதல் மழைக்காலம் (ஐந்து ஐந்து ஐந்து)17. என்ன ஒரு என்ன ஒரு அழகியடா (பட்டத்து யானை)18. என்ன மறந்தேன் (இவன் வேற மாதிரி)19. யாருக்கும் சொல்லாம (ஆல் இன் ஆல் அழகுராஜா)20. உன்னை பார்த்த நேரம் (ஆல் இன் ஆல் அழகுராஜா)21. சித்ரா தேவிப்பிரியா (ஆல் இன் ஆல் அழகுராஜா)22. வா மச்சி வா மச்சி (ஒன்பதுல குரு)23. குறு குறு கண்ணாலே (வத்திக்குச்சி)24. ஆஹா காதல் (மூன்று பேர் மூன்று காதல்)25. ஸ்டாப் த பாட்டு (மூன்று பேர் மூன்று காதல்)தற்போது எழுதிக் கொண்டிருக்கும் படங்கள் (இதுவரை 97...)1. தரமணி (அனைத்து பாடல்கள்)2. ஈட்டி3. நான் சிகப்பு மனிதன் (அனைத்து பாடல்கள்)4. பிரம்மன்5. சைவம் (அனைத்து பாடல்கள்)6. சிப்பாய்7. ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை8. அரிமா நம்பி9. தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்10. காவியத்தலைவன்11. ராமானுஜம்12. வாலு13. அஞ்சல14. மாலினி பாளையங்கோட்டை-22 (அனைத்து பாடல்கள்)15. தொட்டால் தொடரும்16. அதிதி17. அழகுக்குட்டி செல்லம் (அனைத்து பாடல்கள்)18. ஆள்19. டமால் டுமீல்20. ஓம் சாந்தி ஓம் (அனைத்து பாடல்கள்)21. பென்சில் (அனைத்து பாடல்கள்)22. அடித்தளம்

 (அனைத்து பாடல்கள்)23. அது வேற இது வேற (அனைத்து பாடல்கள்)24. சுவாசமே (அனைத்து பாடல்கள்)25. படம் பேசும்26. இருவர் உள்ளம் (அனைத்து பாடல்கள்)27. ஆவிகுமார் (அனைத்து பாடல்கள்)28. மேகா29. நாடிதுடிக்குதடி30. வேல்முருகன் போர்வெல்ஸ்31. துணை முதல்வர்32. நான்தான் பாலா33. பனிவிழும் நிலவு34. ஞானக்கிறுக்கன்35. புன்னகை பயணக்குழு36. 54321 (அனைத்து பாடல்கள்)37. என்னதான் பேசுவதோ (அனைத்து பாடல்கள்)38. ஜமாய்39. சோம்ப்பப்டி40. எங்க காட்டுல மழை41. புளியமரம் (அனைத்து பாடல்கள்)42. மனதில் மாயம் செய்தாய் (அனைத்து பாடல்கள்)43. கணிதன்44. வாலிப ராஜா45. கலக்குற மாப்ளே46. போர்க்களத்தில் ஒரு ப1047. வெண்ணிற இரவுகள் (அனைத்து பாடல்கள்)48. திறப்பு விழா49. தெரியாம உன்னை

காதலிச்சிட்டேன்50. மைதானம்51. ரெண்டாம் படம்52. நீங்காத எண்ணம் (அனைத்து பாடல்கள்)53. ஏன் என்னை மயக்கினாய்54. வதம்55. என் காதல் புதிது56. வீரவாஞ்சி57. ஓம்காரம் (அனைத்து பாடல்கள்)58. திருப்பங்கள் (அனைத்து பாடல்கள்)59. படித்துறை60. காட்டுமல்லி (அனைத்து பாடல்கள்)61. வெயிலோடு உறவாடி62. கதைகேளு கதைகேளு63. உயிர்மொழி (அனைத்து பாடல்கள்)

64. அர்ஜீன்65. விரட்டு66. சாரல்67. பள்ளிக்கூடம் போகாமலே68. பரிமளா திரையரங்கம்69. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (அனைத்து பாடல்கள்)70. பாடும் வானம் பாடி71. கருவாச்சி72. நகர்ப்புறம்73. தாண்டவக்கோனே74. கருப்பர் நகரம்75. ராஜகோபுரம்76. அழகானவர் (அனைத்து பாடல்கள்)77. பரமர்78. நீ எல்லாம் நல்லா வருவடா79. விஞ்ஞானி80. ‘சூப்பர் குட் பிலிம்ஸ்' ஜீவா நடிக்கும் படம் (அனைத்து பாடல்கள்)81. நாலு பேரும் ரொம் நல்லவங்க82. இயக்குனர் மனோபாலா தயாரிக்கும் படம் (அனைத்து பாடல்கள்)83. யாவரும் கேளீர் (அனைத்து பாடல்கள்)

84. உனக்குள் பாதி85. சரவணப் பொய்கை86. ஆதியும் அந்தமும்87. கொடைக்கானலில் ஊட்டி88. மாப்பிள்ளை விநாயகர் (அனைத்து பாடல்கள்)89. கோவலனின் காதலி90. பணக்காரன்91. மன்னவா92. அழகிய பாண்டிபுரம்93. குறுநில மன்னன் (அனைத்து பாடல்கள்)94. சாரல்95. அவலாஞ்சி (அனைத்து பாடல்கள்)96. கபடம்97. கனா காணுங்கள் (அனைத்து பாடல்கள்)சந்தேகமே இல்லை கவிஞரே... அடுத்த ஆண்டும் நீங்கதான் நம்பர் ஒன் பாடலாசிரியர்!

 

செவ்வாய், 24 டிசம்பர், 2013

டிடி படுகிற அவஸ்தையைப் பாருங்க


""மாடு மேல உட்கார்ந்து டிடி படுகிற அவஸ்தை  இந்த காணோளி யைபாருங்க!!

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சல்மான்கான் மீது புகார் கொடுத்த தயாரிப்பாளர் கைது

டெல்லியைச் சேர்ந்த ஹர்தேவ்சிங் என்பவர் மும்பையில் சினிமா தயாரிப்பு கம்பெனி நடத்தி வருகிறார்.
டெல்லியில் டயர்கள் விற்பனை செய்யும் தொழில் செய்யும் இவர் ஒரு இந்திப்படம் தயாரித்து வருகிறார்.
இதில் நடிகர் சல்மான்கானை வைத்து ஒரே ஒரு பாடல் காட்சியில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்.
இதற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக சல்மான்கானின் மானேஜர் ரேஷ்மாஷெட்டி கேட்டார். இதைக் கேட்டு தயாரிப்பாளர் ஹர்தேவ்சிங் வாயடைத்துப் போனார்.

உடனே ஹர்தேவ்சிங்கின் மனைவி ஜஸ்மீத்கவுர், மகள் அமிதாசேத்தி ஆகியோர் சல்மான்கானின் மும்பை பந்தரா வீட்டின் முன் நின்று கடந்த ஆகஸ்ட் மாதம் ரகளை செய்தனர்.
இந்நிலையில் சல்மான் கானை பழிவாங்க திட்டமிட்ட தயாரிப்பாளர் ஹர்தேவ்சிங் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் திகதி டெல்லியில் துப்பாக்கி சூடு நடந்ததாக போலீசுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

அந்த இடத்துக்கு போலீசார் விரைந்து வந்ததும் அவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தனது காரை வழி மறித்து துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் தான் காயமின்றி தப்பியதாகவும் கூறினார்.
இந்த தாக்குதலை நடத்த சல்மான் கான்தான் தூண்டியதாகவும், போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே போலீஸ் விசாரணையில் சல்மான்கானை பழிவாங்க படஅதிபர் ஹர்தேவ்சிங் பொய் புகார் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து படஅதிபர் ஹர்தேவ்சிங், அவரது மனைவி ஜஸ்மீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்பெஷல் நாயகி த்ரிஷா...


சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் கடந்த பிறகும் நடிப்பால் கவர்ந்து வருகிறார் த்ரிஷா.இவரைப் பற்றி ஏதேனும் தகவல்கள் வெளியான வண்ணமே உள்ளது.முன்பெல்லாம் த்ரிஷாவுக்கு கல்யாணம் என்ற பேச்சு அடிப்பட்டது, தற்போது மீண்டும் நடிக்க போகிறார் என கூறப்படுகிறது.சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை படம் நல்ல கமெண்ட்ஸ் வருவதால், மீண்டும் த்ரிஷாவுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், நான் நடித்த எல்லா படங்களும் எனக்கு முக்கியமான படங்கள். என்றென்றும் புன்னகை படம் ‘ஸ்பெஷல்' ஆன ஒன்று.இதில் பக்கத்து வீட்டு பெண் மாதிரி எளிமையான கேரக்டரில் நடித்துள்ளேன்.வலுவான
வேடத்தில் வருகிறேன், என்
பாத்திரத்தை இயக்குநர் அகமது சிறப்பாக கொண்டு வந்துள்ளார்.நகைச்சுவை படங்களில் நடிக்க எனக்கு விருப்பமாக உள்ளது, அது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் நேரம் கூடிவரும் போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாகவும், வாழ்க்கையை முக்கியமான ஒருவருடன் பகிர்ந்து கொள்வது இனிமையானது என்றும் தெரிவித்துள்ளார்

சனி, 7 டிசம்பர், 2013

பிரேம்ஜிக்கு நடிக்கவே தெரியாதாம் - அண்ணன் வெங்கட்பிரபு!


என் தம்பிக்கு நடிக்கத் தெரியாது என்றார் வெங்கட்பிரபு. பிரியாணி படம்பற்றி வெங்கட்பிரபு கூறியது:

பிரியாணி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தந்ததுபற்றி கேட்கிறார்கள். அதற்கு காரணம் பிரச்னைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. கொஞ்சம் ஜாலியான கதைஅவ்வளவுதான்.

பிரியாணி என்று ஏன் பெயர் வைத்தீர்கள்? என்கிறார்கள். கதைப்படி ஹீரோ கார்த்தி தினமும் பிரியாணி சாப்பிடுவார். அப்படியொரு நாள் சாப்பிட போகும்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது.

அதையொட்டி கதை நகர்கிறது. இப்படத்தில் ராம்கி ரீ என்ட்ரி ஆகிறார். ஹன்சிகா, மான்டே தாக்கர் நடித்திருக்கின்றனர்.
 
‘நவீன சரஸ்வதி சபதம்‘ படத்தில் நடிப்பை கற்றுக்கொள்ள பிரேம்ஜி படத்தை பாருங்கள் என்று வசனம் பேசியதுபற்றி கேள்வி எழுப்புகின்றனர்.

அப்படத்தை இயக்கிய சந்துரு எனது அசிஸ்டன்ட்டாக இருந்தவர். அவர் கேட்டதால் ஒரு காட்சியில் நடித்தேன்.

பிரேம்ஜியை கிண்டல் செய்வதற்காக இப்படி பேசினேன். சென்னை 28 ஹீரோ சிவாவை கலாய்க்கலாம் என்று பார்த்தால் அவர் வெவ்வேறு தயாரிப்பாளர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அவரை கலாய்ப்பது நன்றாக இருக்காது என்று என் படத்தில் மட்டும் நடித்து வரும் பிரேம்ஜியை கலாய்த்தேன். மற்றபடி பிரேம்ஜிக்கு நடிப்பெல்லாம் தெரியாது.

பிரியாணி படத்தில் கூட அவர் வெறும் முட்டைதான். இவ்வாறு வெங்கட்பிரபு கூறினார்.

 

வெள்ளி, 6 டிசம்பர், 2013

இளவட்ட ஹீரோக்களே சிபாரிசு செய்வதனால் சந்தோசத்தில் நயன்!


பிரபுதேவாவை பிரிந்து மறுபடியும் நயன்தாரா சினிமாவுக்கு வந்தபோது கதாநாயகி வேடம் கிடைக்கா விட்டால் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றுதான் நினைத்தாராம்.

ஆனால், அவர் மறுபடியும் நடிக்க களமிறங்கியபோது, அவரது நெருங்கிய நண்பராக இருந்த ஆர்யா, மறுபடியும் நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்பட்டு அவரை ஏ.ஆர்.முருகதாஸின் பட நிறுவனம் தயாரித்த ராஜாராணி படத்தில் கோர்த்து விட்டார்.

அதைப்பார்த்த விஷ்ணுவர்தன், ஏற்கனவே தனது பில்லா படத்தில் நடித்த ராசியான நடிகை என்பதால் மறுபடியும் அஜீத்தைக்கொண்டு தான் இயக்கிய ஆரம்பம் படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்.

இதனால், மற்ற இயக்குனர்களின் கவனமும் நயன்தாரா பக்கம் திரும்பியது. இதனால் செகண்ட் இன்னிங்சிலும் முதல் ரவுண்டுக்கு இணையாக பிசியாகி விட்டார் நயன்.

இந்தநிலையில், மறுபடியும் தனது மாஜி காதலர் சிம்புவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் நயன்தாரா, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படமொன்றிலும் நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு வேறு சில நடிகைகளிடம்தான் பேசி வந்தாராம் இயக்குனர் ராஜா. ஆனால், ஜெயம்ரவி தான் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்று தனக்குள் இருந்த ஆசையை சொல்லி, அவரை ஜோடி சேர்த்துள்ளாராம்.

இப்படி இளவட்ட ஹீரோக்களே தனக்கு சிபாரிசு செய்வதால் சொல்ல முடியாத சந்தோசத்தில் இருக்கும் நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகளுக்கு நிகராக தனது படக்கூலியையும் படத்துக்குப்படம் உயர்த்திக்கொண்டே இருக்கிறார்.
 

புதன், 4 டிசம்பர், 2013

சங்கராபுரம் இசை வெளியீட்டு விழா...


காணொளி,சங்கராபுரம் இசை வெளியீட்டு விழா

ரம்மி திரைப்பட டிரைலர்{காணொளிகள், }


ரம்மி திரைப்பட டிரைலர்

பத்திரிகையாளர் சந்திப்பு....
...