மும்பை : இந்திய சர்வதேச திரைப்பட அகாடமி (இஃபா) விருது விழாவில் ஸ்ரீதேவியுடன் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். வருடந்தோறும் வெளிநாடுகளில் வழங்கப்படும் இஃபா விருது விழா இந்தாண்டு மக்காவுவில் அடுத்த மாதம் 4,ம் தேதி நடக்கிறது. இதில் இந்தி நடிகைகள் பலர் நடனமாடுகின்றனர். இதன் சிறப்பாக ஸ்ரீதேவியுடன் பிரபுதேவாவும் நடனம் ஆடுகிறார். நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி நடித்த படங்களில் இருந்து பாடல்கள் இடம்பெறும். அதற்கான ஒத்திகையில் இருவரும் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக